சீனாவில் இருந்து ஸ்டிக்கர் வாங்கி.. வட மாநில கும்பல் செய்த தில்லாலங்கடி வேலை; வச்சி செஞ்ச போலீசார்!

|

வட மாநில கும்பல் ஒன்று.. "வாங்குனதே வாங்குனீங்க.. அதையும் டெல்லியில் (Delhi) இருந்து வாங்கி இருக்க கூடாதா.. சீனாவில் இருந்து தான் வாங்குவீங்களோ?" என்று கேட்கும்படியான ஒரு தில்லாலங்கடி வேலையை பார்த்துள்ளது.

அதென்ன வேலை? சீனாவில் இருந்து அவர்கள் அப்படி எதை வாங்கினார்கள்? இதோ விவரங்கள்:

வெறும் ரூ.1000 க்கு!

வெறும் ரூ.1000 க்கு!

வெறும் ரூ.12,000 க்கு வாங்கிய ஸ்மார்ட்போன்களில் போலியான ஆப்பிள் லோகோ ஸ்டிக்கர்களை (Fake Apple Logo Stickers) ஒட்டி, அதை லேட்டஸ்ட் ஐபோன் என்று கூறி விற்பனை செய்து வந்த வட இந்திய கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர்!

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், இந்த மோசடி கும்பல் பயன்படுத்திய போலியான ஆப்பிள் ஸ்டிக்கர்கள் ஆனது ஒரு சீன ஆன்லைன் ஷாப்பிங் வலைதளத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது; அதுவும் வெறும் ரூ.1000 க்கு!

ரூ.4,500 கொடுத்து ஐபோன் பாக்ஸ்!

ரூ.4,500 கொடுத்து ஐபோன் பாக்ஸ்!

மிகவும் மலிவான விலைக்கு போலியான ஐபோன் 13 ,மாடல்களை விற்பனை செய்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 60 போலியான ஐபோன்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணையின் போது, இந்த கும்பல் டெல்லி சந்தையில் இருந்து ரூ.12,000 மதிப்பிலான ஸ்மார்ட்போனை பல எண்ணிக்கையில் வாங்கி உள்ளது.

கூடவே சீன ஷாப்பிங் போர்டலில் இருந்து ரூ.4,500 க்கு ஒரிஜினல் ஐபோன் பாக்ஸ்களையும், தலா ரூ.1000 மதிப்புள்ள ஆப்பிள் ஸ்டிக்கர்களையும் வாங்கி உள்ளது. அவைகளை வைத்து போலியான ஐபோன்களை உருவாக்கி, படுஜோராக விற்பனையும் செய்துள்ளனர்!

Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

எது போலி.. எது ஓரிஜினல்?

எது போலி.. எது ஓரிஜினல்?

மேலோட்டமாக பார்த்தால், ஒரு போலியான ஐபோனிற்கும் ஒரிஜினல் ஐபோனிற்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இருக்காது. அதே சமயம், இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பதொன்றும் பெரிய
கம்பசூத்திரமும் இல்லை!

ஒரு புதிய ஐபோனை வாங்கியதுமே நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை அதன் IMEI நம்பரை சரிபார்ப்பதே ஆகும்.

அனைத்து ஒரிஜினல் ஐபோன் மாடல்களிலும் IMEI நம்பர் இருக்கும் என்பதால் இதை வைத்தே உங்கள் கையில் இருக்கும் ஐபோன் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதை கண்டுபிடித்து விடலாம்!

கவலையே வேண்டாம்.. பல இடங்களில் IMEI நம்பர் இருக்கும்!

கவலையே வேண்டாம்.. பல இடங்களில் IMEI நம்பர் இருக்கும்!

ஒரு ஐபோனின் ஐஎம்இஐ நம்பர் ஆனது ஐபோனின் பேக்கேஜிங் பாக்ஸ் உட்பட பல இடங்களில் இருக்கும். முதலில் ஐபோன் பேக் செய்யப்பட்டு வந்த பாக்ஸில் அதன் IMEI நம்பரை தேடுங்கள்.

அந்த பாக்ஸில் நிச்சயமாக பார்கோடில் சீரீஸ் நம்பர் மற்றும் IME I /MEID நம்பர் இருக்கும். அதையும் உங்கள் ஐபோனின் செட்டிங்ஸ் வழியாக கிடைக்கும் IMEI நம்பரையும் க்ராஸ்-செக் செய்ய வேண்டும், அதாவது இரண்டிலும் ஒரே ஐஎம்இஐ நம்பர் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்!

அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!

செட்டிங்ஸ் வழியாக கிராஸ்-செக் செய்வது எப்படி?

செட்டிங்ஸ் வழியாக கிராஸ்-செக் செய்வது எப்படி?

உங்கள் கையில் இருக்கும் ஐபோனின் IMEI நம்பரை கண்டறிய, செட்டிங்ஸ் > ஜெனரல் > அபௌட் (Settings > General > About) என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர் சீரீயல் நம்பரை தேடுங்கள். அதன் பிறகு, கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்ய உங்கள் ஐபோனின் IMEI நம்பரை காண்பீர்கள். அங்கே IMEI நம்பர் அல்லது சீரியல் நம்பர் இல்லை என்றால், அது ஒரு போலி ஐபோன் மாடலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது!

ஐஎம்இஐ நம்பர் கிடைத்ததும் பெருமூச்சு விட்டுவிட வேண்டாம்!

ஐஎம்இஐ நம்பர் கிடைத்ததும் பெருமூச்சு விட்டுவிட வேண்டாம்!

ஒரு ஐபோனில் ஐஎம்இஐ நம்பர் இருந்தால் மட்டுமே போதாது, அது பழைய மாடலா அல்லது புதியதா என்பதையும் கண்டறிய வேண்டும்.

ஒவ்வொரு ஐபோனிற்கு உத்தரவாதம் இருக்கும், அது எப்போது காலாவதி ஆகும் என்கிற தேதியின் அடிப்படையில் உங்கள் ஐபோனின் "வயதை" உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

இதை கண்டுபிடிக்க ஆப்பிளின் "செக் கவரேஜ்" இணையதளத்தை (https://checkcoverage.apple.com/) பயன்படுத்தலாம். அந்த வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ள பாக்ஸில் உங்கள் ஐபோனின் சீரியல் நம்பரை டைப் செய்யவும்.

ஆப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கு ஒரு வருட உற்பத்தியாளர் உத்தரவாதத்தை வழங்குவதால், உங்கள் ஐபோனுக்கான பக்கத்தில் காண்பிக்கப்படும் காலாவதி தேதியானது நீங்கள் அதை வாங்கிய தேதியுடன் பொருந்துகிறதா என்பதை கணக்கிடலாம்.

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

ஒன்றுமே புரியவில்லை என்றால்..?

ஒன்றுமே புரியவில்லை என்றால்..?

மேற்கண்ட எந்தவொரு செயல்முறையிலும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், சந்தேகம் நீடிக்கிறது என்றால்.. உங்கள் ஐபோனை அருகிலுள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு எடுத்துச் செல்லவும்.

அங்கே உங்கள் ஐபோனின் நம்பகத்தன்மையை கண்டறிய ஆப்பிள் ஸ்டோர் நிர்வாகிகள் விரைவான சோதனையை நடத்தி, உங்கள் சந்தேகங்களை தீர்ப்பார்கள்!

கடைசியாக.. ஒரு முக்கியமான விஷயம்!

கடைசியாக.. ஒரு முக்கியமான விஷயம்!

எப்போதுமே, அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் டீலரிடமிருந்து மட்டுமே ஐபோனை வாங்கவும்.

அறியாதோர்களுக்கு Imagine, Uni, Aptronix மற்றும் iWorld ஆகியவைகள் ஆப்பிளால் அங்கீகரிக்கப்பட்ட சில ஸ்டோர்கள் ஆகும். அதுமட்டுமின்றி க்ரோமா, விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் ரீடெய்ல், சங்கீதா மொபைல்ஸ் போன்ற எலக்ட்ரானிக் ரீடெய்ல்ர்களிடம் இருந்தும் நீங்கள் ஐபோன்களை வாங்கலாம். மேலும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டும் கூட ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்ஸ் ஆகும்!

Best Mobiles in India

English summary
உங்கள் ஐபோனின் பின்னால் உள்ள ஆப்பிள் லோகோவை உடனே சுரண்டி பார்க்கும்படியான ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X