ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

|

இப்போது நமக்கு வாங்க கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் சாதனங்களில் டூயல் சிம் அம்சம் இருக்கிறது. இதனாலேயே என்னவோ, நம்மில் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் ஒரே போனில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்துகிறோம். இன்றைய காலக் கட்டத்தில், சிங்கிள் சிம் பயனர்களைப் பார்ப்பதென்பதே மிகவும் அபூர்வமான விஷயமாக இருக்கிறது. என்னதான் நம்மிடம் 2 சிம் கார்டுகள் இருந்தாலும், ஒரு ஸ்மார்ட்போனில் 1 வாட்ஸ்அப் (WhatsApp) கணக்கை மட்டும் தான் நம்மால் பயன்படுத்த முடிகிறது.

1 ஸ்மார்ட்போன் சாதனத்திற்கு 1 வாட்ஸ்அப் கணக்கு மட்டும் தான் அனுமதியா?

1 ஸ்மார்ட்போன் சாதனத்திற்கு 1 வாட்ஸ்அப் கணக்கு மட்டும் தான் அனுமதியா?

இது சிலருக்கு பெரும் சிக்கலாக அமைகிறது. உண்மையைச் சொல்லப் போனால், வாட்ஸ்அப் நிறுவனம் 1 ஸ்மார்ட்போன் சாதனத்திற்கு 1 வாட்ஸ்அப் கணக்கை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறது. உங்களால், மற்றொரு சிம் நம்பரை ஒரே நேரத்தில், ஒரே ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப் நிறுவனம் இதை ஒரு போதும் அனுமதிக்காது. 2 சிம் கார்டுகள் இருக்கும் போன்களில் 1 வாட்ஸ்அப் கணக்கை மட்டும் பயன்படுத்துவது எப்படி நியாயமாகும். டூயல் சிம் போன் வைத்துள்ளவர்களுக்கு இது அர்த்தமற்றதாகிறது.

ஒரே போனில் 2 வாட்ஸ்அப் கணக்குகளை இயக்க முடியுமா?

ஒரே போனில் 2 வாட்ஸ்அப் கணக்குகளை இயக்க முடியுமா?

இதனை உணர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், வாட்ஸ்அப் பின் கிடுக்கு பிடியில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு சிறப்பான அம்சத்தை அதன் சாதனங்களில் வழங்கத் துவங்கியுள்ளது. இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், இன்று உங்களுடைய ஸ்மார்ட்போனிலும் 2 வாட்ஸ்அப் நம்பர் கணக்குகளை உருவாக்கி, ஒரே போனில் இருந்து 2 வெவ்வேறு வாட்ஸ்அப் கணக்குகளை உங்களால் இயக்க முடியும். இந்த டிரிக்கை தான் இன்று நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

உங்களுடைய ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் கணக்குகளை இயக்க நீங்க ரெடியா?

உங்களுடைய ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் கணக்குகளை இயக்க நீங்க ரெடியா?

1 டூயல் சிம் ஸ்மார்ட்போன் சாதனத்தில் இருந்து எப்படி 2 வெவ்வேறு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்ள நீங்கள் ரெடியா? இந்த டிரிக்கை நாம் கற்றுக்கொள்வதற்கு முன்னாள், உங்களிடம் எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல் இருக்கிறது என்பதை முதலில் கவனித்துக்கொள்ள வேண்டும். காரணம், ஒவ்வொரு நிறுவனத்தினுடைய ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ்களும் வெவ்வேறு விதமாக அமைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு பயனர்களுக்கு ஏற்ற செட்டிங்ஸை நாம் மாற்ற வேண்டும்.

Jio பயனர்கள் ஏன் 'இந்த திட்டங்களை' அதிகமாக ரீசார்ஜ் செய்கிறார்கள் தெரியுமா? காரணம் இது தான்!Jio பயனர்கள் ஏன் 'இந்த திட்டங்களை' அதிகமாக ரீசார்ஜ் செய்கிறார்கள் தெரியுமா? காரணம் இது தான்!

Xiaomi, OPPO, Realme, Samsung, Nokia, OnePlus மற்றும் Vivo இதில் உங்க மாடல் எது?

Xiaomi, OPPO, Realme, Samsung, Nokia, OnePlus மற்றும் Vivo இதில் உங்க மாடல் எது?

Xiaomi, OPPO, Realme, Samsung, OnePlus மற்றும் Vivo எனப் பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் தனிப்பயன் ஸ்கின்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றனர் என்பதால், நாம் இந்த செட்டிங்ஸை அந்தந்த மாடலிற்கு ஏற்றார் போல் மாற்றியமைக்க வேண்டும். உங்களுடைய ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த, நீங்கள் ஆப் க்ளோனிங் என்ற அம்சத்தைத் தான் இப்போது பயன்படுத்தப் போகிறீர்கள். இந்த குளோனிங் அம்சம் ஒவ்வொரு பிராண்டட் விற்பனையாளராலும் வித்தியாசமாகிறது.

வெவ்வேறு பெயரில் அழைத்தாலும் விஷயம் என்னவோ ஒன்று தான்

வெவ்வேறு பெயரில் அழைத்தாலும் விஷயம் என்னவோ ஒன்று தான்

Xiaomi இதை Dual Apps என்று அழைக்கிறது, OPPO, Vivo மற்றும் Samsung போன்ற நிறுவனங்கள் இவற்றை முறையே குளோன் ஆப்ஸ், ஆப் குளோன்கள் மற்றும் டூயல் மெசஞ்சர் என அழைக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரே வேலையைச் செய்தாலும், இந்த அம்சத்திற்கான பெயர்கள் ஸ்மார்ட்போனுக்கு ஸ்மார்ட்போன் வேறுபடுகிறது. Oneplus நிறுவனம் இதை பேரலல் ஆப்ஸ் என்று அழைக்கிறது. சரி, இப்போது இந்த வாட்ஸ்அப் குளோனிங் அம்சம் எப்படி வெவ்வேறு சாதனங்களில் செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

சாம்சங் மொபைல் பயனர்கள் இதை செய்யுங்கள்

சாம்சங் மொபைல் பயனர்கள் இதை செய்யுங்கள்

  • Settings மெனுவிற்குச் சென்று Advanced features என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • கீழே ஸ்க்ரோல் செய்து Dual Messenger என்பதை கிளிக் செய்யவும்.
  • Dual Messenger உடன் இணக்கமான ஆப்ஸின் பட்டியல் காட்டப்படும்.
  • வாட்ஸ்அப்பின் Toggle சுவிட்சை கிளிக் செய்யவும்.
  • Install -> read the disclaimer -> and Confirm இதை சரியாகச் செய்யுங்கள்.
  • குளோன் செய்யப்பட்ட WhatsApp ஐகானின் கீழ் வலது பக்கத்தில் Dual Messenger ஐகானை கொண்டிருக்கும்.
  • EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

    Realme பயனர்கள் இதை செய்யுங்கள்

    Realme பயனர்கள் இதை செய்யுங்கள்

    Realme மொபைல் போன்களில் ஆப் குளோனிங் செய்ய நீங்கள் Settings செல்ல வேண்டும்.
    அங்கு நீங்கள் App Cloner என்பதை சர்ச் செய்து தேடலாம்.
    வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுத்து Clone Apps என்பதை தேர்ந்தெடுக்கவும்.
    குளோன் செய்யப்பட்ட பயன்பாட்டை ரீநேம் (Rename) செய்யும் விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும்.
    அது முடிந்ததும், உங்கள் Realme மொபைல் போனில் Dual WhatsApp நீங்கள் பயன்படுத்தலாம்.

    OnePlus பயனர்கள் இதை செய்யுங்கள்

    OnePlus பயனர்கள் இதை செய்யுங்கள்

    • OnePlus பயனர்கள் தங்கள் சாதனத்தின் Settings செல்லலாம்.
    • அதைத் தொடர்ந்து Utilities >> Parallel apps என்பதை கிளிக் செய்யுங்கள்.
    • மாற்றாக, Parallel Apps என்பதை சர்ச் செய்தும் இந்த அம்சத்தை கண்டறியலாம்.
    • வாட்ஸ்அப்பின் குளோனை உருவாக்க Toggle பட்டனை கிளிக் செய்யவும்.
    • அடுத்து, உங்கள் OnePlus மொபைல் போனில் டூயல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தத் துவங்குங்கள்.
    • ரெட்மி பயனர்கள் இதை செய்யுங்கள்

      ரெட்மி பயனர்கள் இதை செய்யுங்கள்

      • நீங்கள் Redmi, Mi அல்லது POCO ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தினால் Settings செல்லவும்.
      • Choose Apps பிறகு Dual Apps என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
      • Dual apps-க்கு அடுத்ததாக இருக்கும் வாட்ஸ்அப் Toggle பட்டனை கிளிக் செய்யவும்.
      • திரையில் ஒரு செய்தி தோன்றும். தொடர, இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
      • Dual apps உருவாக்கப்பட்டுவிட்டதாக நோட்டிபிகேஷன் உங்களுக்குக் காட்டப்படும்.
      • காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?காதலிக்காக 7 Smartphone உடன் லேடீஸ் பாத்ரூமிற்குள் பதுங்கிய காதலன்.. டிவிஸ்ட் 'இங்க' தான் இருந்துச்சா?

        Vivo மற்றும் Oppo மொபைல் பயனர்கள் இதை செய்யுங்கள்

        Vivo மற்றும் Oppo மொபைல் பயனர்கள் இதை செய்யுங்கள்

        • போனின் settings மெனுவிற்குச் சென்று App Clone கிளிக் செய்து WhatsApp கிளிக் செய்யவும்.
        • மாற்றாக, WhatsApp பயன்பாட்டை குளோன் செய்ய, ஆப்ஸின் ஐகானை லாங் பிரெஸ் செய்து '+' ஐகானை கிளிக் செய்க.
        • பின்னர் நீங்கள், உங்களுடைய வாட்ஸ்அப் எண்ணை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
        • OPPO மொபைல் பயனர்களுடைய செயல்முறை Realme மொபைல் போன்களைப் போலவே உள்ளது என்பதனால் நீங்கள் அவற்றைப் பின்பற்றவும்.
        • Tecno மற்றும் Infinix ஸ்மார்ட்போன் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

          Tecno மற்றும் Infinix ஸ்மார்ட்போன் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

          Samsung, OnePlus, Realme, Xiaomi, OPPO, Vivo மற்றும் பல போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன்களில் நீங்கள் டூயல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம். Tecno மற்றும் Infinix போன்ற வேறு ஏதேனும் சாதனம் உங்களிடம் இருந்தால், பயன்பாடுகளை குளோன் செய்வதற்கான செயல்முறை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். பெரும்பாலான மொபைல் செட்டிங்களில் டூயல் ஆப்ஸ், ஆப்ஸ் குளோனிங், என்ற வார்த்தைகளை சர்ச் செய்தாலே, நீங்கள் தேடும் அம்சம் உங்களுக்கு கிடைத்துவிடும்.

          நோக்கியா, மோட்டோரோலா, Apple பயனர்கள் என்ன செய்வது?

          நோக்கியா, மோட்டோரோலா, Apple பயனர்கள் என்ன செய்வது?

          பிக்சல், நோக்கியா மற்றும் மோட்டோரோலா போன்ற ஸ்டாக்-ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த டூயல் ஆப்ஸ் விருப்பம் இல்லை என்பதனால், நீங்கள் மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை மட்டுமே பயன்படுத்தி 2 வாட்ஸ்அப் கணக்குகளை உங்களால் பயன்படுத்த முடியும். அதேபோல், ஐபோன் பயனர்கள் மற்றும் ஸ்டாக்-ஆண்ட்ராய்டு பயனர்கள் டூயல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த மூன்றாம் தரப்பு ஆப்ஸை பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது வாட்ஸ்அப் பிசினஸ் மூலம் நீங்கள் 2வது வாட்ஸ்அப்பை இந்த சாதனங்களில் இயக்கலாம்.

Best Mobiles in India

English summary
Dual WhatsApp: How To Use Two WhatsApp Numbers On The Same Android Phone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X