டிஸ்ப்ளே ரெப்ரெஷ் ரேட் என்றால் என்ன என்பது தெரியுமா?

அனைத்து வகை ஸ்மார்ட்போன்களுக்கும் 60Hz ரெப்ரெஷ் ரேட் என்பது இயல்பான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

|

ஒரு மொபைல் போன் அல்லது தொலைக்காட்சியை புதியதாக வாங்க வேண்டும் என்றால் அதன் தரம், தன்மைகள் குறித்து ஆராய்ந்து வாங்குவோம். அந்த வகையில் இவ்விரண்டு பொருட்களையும் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்று டிஸ்ப்ளே குறித்த விவரங்கள் என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். டிஸ்ப்ளேவின் நீள, அகலங்கள் மற்றும் அதன் அம்சங்கள், ரெப்ரெஷ் ரேட் மற்றும் ரெசலூசன் ஆகியவை கவனிக்கப்பட வேண்டியவை.

டிஸ்ப்ளே ரெப்ரெஷ் ரேட் என்றால் என்ன என்பது தெரியுமா?


அனைத்து வகை ஸ்மார்ட்போன்களுக்கும் 60Hz ரெப்ரெஷ் ரேட் என்பது இயல்பான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்துள்ள ஐபேட் மாடல்களில் ரெப்ரெஷ் ரேட் என்பது 120Hz என்பது உங்களுக்கு தெரியும? இதில் 60Hz மற்றும் 120Hz என்பதில் என்ன வித்தியாசம்?

ரெப்ரெஷ் ரேட் என்றால் என்ன?
மேற்கண்ட இரண்டு ரெப்ரெஷ் ரேட்டுக்களுக்கு உள்ள வித்தியாசத்தை பார்க்கும் முன், ரெப்ரெஷ் ரேட் என்றால் என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். வெகு எளிதாக இதுகுறித்து விளக்க வேண்டும் என்றால் ஒரு வினாடிக்குக் டிஸ்ப்ளே எத்தனை முறை ரெஃரெஷ் ஆகின்றதோ, அதுதான் ரெப்ரெஷ் ரேட் என்பதாகும். அதிகபட்ச ரெப்ரெஷ் ரேட் இருந்தால் டிஸ்ப்ளேவில் இமேஜ் தெளிவாக தெரிவது மட்டுமின்றி நமது கண்களுக்கும் பாதுகாப்பானது. இப்போது சந்தையில் இருக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 60Hz ரெப்ரெஷ் ரேட் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க்கது.

ரெப்ரெஷ் ரேட் 60Hz மற்றும் 120Hz என்பதில் என்ன வித்தியாசம்?
மேற்கண்ட தகவல்களில் இருந்த 60Hz என்றால் ஒரு வினாடிக்கு 60 முறையும், 120Hz ரெப்ரெஷ் ரேட் என்றால் ஒரு வினாடிக்கு 120 முறையும் ரெப்ரெஷ் ஆகும் என்பதை புரிந்து கொள்கிறோம். இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போனின் டச் செயல்பாடுகள் வேகமாக இருக்கும் என்பதுதான். 120Hz ரெஃரெஷ் ரேட்டிங்கில் உள்ள ஸ்மார்ட்போன் நமது விரல்கள் பட்டதுமே மின்னல் வேகத்தில் செயல்படும் என்பதுதான் இதன் முக்கிய வித்தியாசம்.

அதேபோல் ஸ்மார்ட்போன்களை ஸ்குரோலிங் செய்வதிலும் வித்தியாசம் ஏற்பட இந்த ரெப்ரெஷ் ரேட் தான் காரணம். 60Hz ரெப்ரெஷ் ரேட் உள்ள ஸ்மார்ட்போன்களை விட 120Hz ரெஃரெஷ் ரேட்டிங்கில் உள்ள ஸ்மார்ட்போன்களில் ஸ்குரோலிங் செய்வதிலும் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

120Hz ரெஃரெஷ் ரேட்டிங்கில் உள்ள ஸ்மார்ட்போன்களில் செயல்படுவது என்பது மிக இயல்பான ஒன்றாக இருக்கும்

அதேபோல் 120Hz ரெஃரெஷ் ரேட்டிங்கில் உள்ள ஸ்மார்ட்போன்களில் ஸ்மூத்தாக எதையும் டைப் செய்யலாம். சமீபத்தில் வெளியான ஆப்பிள் பென்சில் டிவைசில் 120Hz ரெஃரெஷ் ரேட் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தொலைக்காட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர்களில் 60Hz ரெப்ரெஷ் ரேட்டுகளுக்கு அதிகமானவை சந்தைக்கு வந்துவிட்டது. அதேபோல் உங்கள் ஸ்மார்ட்போன்களிலும் நீங்கள் 60Hz ரெப்ரெஷ் ரேட்டைவிட அதிக ரெப்ரெஷ் ரேட் உள்ள ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது நல்லது. 120Hz ரெஃரெஷ் ரேட்டிங்கில் உள்ள ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அதை மிஸ் செய்ய கூடாது. 120Hz ரெஃரெஷ் ரேட்டிங்கில் உள்ள ஸ்மார்ட்போன்கள் என்பது 60Hz ரெப்ரெஷ் ரேட்டுகள் ஸ்மார்ட்போன்களை விட பலமடங்கு உபயோகமானது.

முடிவுரை: தற்போது மொபைல் போன் சந்தையில் ஒருசில மாடல்களில் மட்டுமே 60Hz ரெஃரெஷ் ரேட் உள்ளது. ஆனால் நாளடைவில் இனிவரும் மாடல்கள் அனைத்துமே 120Hz ரெஃரெஷ் ரேட்டில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது 120Hz ரெஃரெஷ் ரேட் உள்ள மாடல்கள் மட்டுமே என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி வாங்கும்போதும் இதனை கவனத்தில் கொள்ளுங்கள். அது உங்கள் கண்களுக்கு பாதுகாப்பை அளிப்பதோடு, தேவையில்லாத உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவும்.

Best Mobiles in India

English summary
Do you know what Hz mean for any display, all you need to know; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X