Home
How to

பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. 2026 ஜனவரி 1 அமல்.. புது PAN கார்டு அப்ளை பண்ணா போதாது.. இதை கட்டாயம் செய்யணும்!

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி புதிய விதிகள் அமல் செய்யப்பட இருக்கின்றன. இதனால், புதிய பான் கார்டு (New PAN Card) அப்ளை செய்யும் செயல்முறை அறக்க பறக்க நடந்து வருகிறது. இருப்பினும், பான் கார்டுக்கு அப்ளை செய்தால் மட்டும் போதாது, ஆன்லைனில் கட்டாயம் சிலவற்றை செய்து முடிக்க வேண்டி இருக்கிறது.

பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்காமல் போனால், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பான் கார்டு செயலிழப்பு செய்யப்பட இருக்கிறது. இதனால், ரூ.50,000 மேல் பணம் அனுப்புதல், பங்கு சந்தை முதலீடு செய்தல் போன்வற்றை செய்ய முடியாது. ரூ.1,000 அபராதமும் இருக்கிறது. இது பான் கார்டே இல்லாதவர்களுக்கும் பொருந்தும். இதனாலேயே புதிய பான் கார்டு வாங்கப்படுகிறது.

பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. 2026 ஜனவரி 1 அமல்.. புது PAN கார்டு அப்ளை!

ஆதார் கார்டு வைத்து புதிய பான் கார்டுக்கு அப்ளை செய்துவிட்டால் போதும் என்று இருந்தால், குறிப்பிட்ட தேதிக்குகள் அது வராமலும் போகலாம். ஏனென்றால், பான் கார்டு நிலையை சரிபார்க்க (PAN Card Status Check) வேண்டும். இதை ஆதார் கார்டு நம்பரை வைத்து செய்யலாம், பிறந்த தேதியை வைத்து செய்யலாம். இதை ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இப்போது காணுங்கள்.

ஆதார் கார்டு வழியாக பான் கார்டு நிலை சரிபார்த்தல்

1. வருமான வரித்துறையில் இ-பில்லிங் போர்ட்டலுக்கு (e-Filing Portal) செல்ல வேண்டும். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் இ-பான் (E-PAN) விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது, செக் ஸ்டேட்டஸ்/டவுன்லோட் இ-பான் (Check Status/Download E-PAN) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இதில் ஆதார் நம்பர் (Aadhaar Number) கேட்கப்படும்.

2. ஆதார் நம்பரை கொடுத்துவிட்டால், மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபியை சரியான இடத்தில், தவறு இல்லாமல் கொடுத்து விடுங்கள். இதை செய்துவிட்டால் போதும், பான் கார்டு நிலையை பார்க்க முடியும். இதில் உங்களது பான் கார்டு அனுப்பப்பட்டது, பான் கார்டு விண்ணப்பல் செயலாக்கத்தில் உள்ளது உள்ளிட்டவை இருக்கும்.

பிறந்த தேதி வழியாக பான் கார்டு நிலையை சரிபார்த்தல்

1. டிஐஎன் என்எஸ்டிஎல் (TIN NSDL) போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். வழக்கம்போல பான் விருப்பத்துக்கு சென்று, பான் புதிய/மாற்ற கோரிக்கையை (PAN: New/Change Request) தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது, பான் கார்டுக்கு கொடுக்கப்பட்ட பெயர் அல்லது பிறந்த தேதி கேட்கப்படும். அதோடு ஒப்புதல் எண் (Acknowledgement Number) கேட்கப்படும்.

2. இந்த விவரங்களை சரியாக கொடுத்துவிட்டால், பான் கார்டு நிலையை பார்க்க முடியும். பெயரை கொடுக்கும்போது, அதில் பிழைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும். ஆகவே, அதில் கவனமாக இருங்கள். இந்த 2 செயல்முறைகள் மட்டுமல்லாமல், மூன்றாவதாக ஒரு செயல்முறை இருக்கிறது. இவற்றுக்கு மாற்றாக அதை பயன்படுத்தி கொள்ளலாம்.

யுடிஐஐடிஎஸ்எல் போர்டல் வழியாக பான் கார்டு நிலையை சரிபார்த்தல்

1. யுடிஐஐடிஎஸ்எல் போர்டல் (UTIITSL Portal) செல்ல வேண்டும். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் பான் கார்டு சேவைகள் (PAN Card Services) விருப்பத்துக்கு செல்ல வேண்டும். இதில் டிராக் பான் கார்டு (Track PAN Card) விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் பான் கார்டு அப்ளிகேஷன் நம்பர் அல்லது கூப்பன் நம்பர் கேட்கப்படும்.

2. இந்த நம்பர்கள் பான் கார்டு அப்ளை செய்யும்போது கொடுக்கப்பட்டவையாகும். இதுபோக உங்களது பான் கார்டு நம்பர் தெரிந்தால், அதை கொடுக்கலாம். இது ஏதாவது பான் கார்டில் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் அந்த நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இதை கொடுத்த பிறகு உங்களது பிறந்த தேதியை கொடுக்க வேண்டும்.

3. இதை கொடுத்த பிறகு கேப்ச்சா கோட் இருக்கும். இதையும் கொடுத்தால் போதும், புதிய பான் கார்டு நிலையை சரிபார்த்து கொள்ளலாம். டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு லிங்க் செய்ய அவகாசம் இருக்கிறது. இதற்குள் புதிய பான் கார்டு அப்ளை செய்து ஆதாருடன் இணைக்கலாம். ஏனென்றால், ஈ-பான் உடனடியாக கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do You Know PAN Card Status Check By Aadhaar Card Number Before 2026 January 1 Aadhaar Link
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X