Home
How to

PAN புது ரூல்ஸ்.. 2025 டிசம்பர் 31 போச்சு.. உடனே ரூ.110 பணத்தை கட்டி இதை பண்ணுங்க.. பான் ரினிவல் இருக்கு!

பான் (PAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) வைத்து இருப்பவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. ஆனால், இதற்கு முன்னதாகவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டி இருக்கிறது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் செயல்முறையில் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களும் முனைப்பில் இருக்கின்றனர். ஆனால், இதற்கு முன்னதாக பான் புதுப்பித்தல் செயல்முறையை (PAN Renewal Process) கட்டயாம் செய்ய வேண்டும். இது பான் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தாது. கீழ்கண்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை செய்ய வேண்டும்.

PAN புது ரூல்ஸ்.. 2025 டிசம்பர் 31 போச்சு.. உடனே ரூ.110 பணத்தை கட்டி?

* திருமணத்திற்கு பிறகு அல்லது நீதிமன்ற உத்தரவுகளுக்கு பிறகு ஏற்படும் சட்டப்பூர்வமான பெயர் மாற்றங்கள்
* பிறந்த தேதி அல்லது தந்தையின் பெயரில் உள்ள பிழைகள்
* ஆதார் கார்டில் டீமோகிராபிக் மாற்றங்களை செய்தால், அதை பான் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

திருமணத்திற்கு பிறகு தந்தை பெயருக்கு மாற்றாக கணவர் பெயர் இடம்பெறும். அப்போது பான் கார்டை புதுப்பிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் ஏதாவது பெயரில் மாற்றங்கள் வந்தால், அப்போதும் புதுப்பிக்க வேண்டும். உங்களது பெயர், தந்தை பெயர், பிறந்த தேதியில் தவறு இருந்தால், அதை மாற்ற பான் கார்டை புதுப்பிக்க வேண்டும்.

பான் புதுப்பித்தல் செயல்முறை (PAN Renewal Process):

1. இ-பில்லிங் (e-Filling) போர்டலுக்கு செல்ல வேண்டும். புதிய பான் கார்டுக்கான விண்ணப்பம் மற்றும்/அல்லது பான் டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்வதற்கான கோரிக்கை விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது, அப்டேட் செய்யப்பட்ட தனிப்பட்ட விவரங்கள் மற்றும் டீமோகிராபி விவரங்களை கொடுக்க வேண்டும்.

2. இந்த அப்டேட் செய்யப்பட்ட விவரங்களுக்கான அடையாள சான்று (Identity Proof), முகவரி சான்று (Address Proof) மற்றும் மாற்றப்பட்ட விவரங்களுக்கான சான்று ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும். இதை செய்த பிறகு பேமெண்ட் செலுத்த வேண்டி இருக்கும். இதை ஆன்லைன் பேமெண்ட்டாக பான் கார்டு வைத்திருப்பவர்கள் செய்து கொள்ளலாம்.

3. இதுபோன்று விவரங்களை மாற்றுவதற்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், புதிய பான் கார்டுடன் அந்த விவரங்கள் தேவைப்படும்பட்சத்தில் ரூ.110 கட்டணமாக செலுத்த வேண்டும். இதை செய்யும்போது, புதிய பான் கார்டு உங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல டிஜிட்டல் காப்பியாவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

4. இந்த பான் கார்டு புதுப்பித்தல் செயல்முறைக்கும் ஒப்புதல் எண் (Acknowledgment Number) கொடுக்கப்படும். இதை சேமித்து வைத்து கொள்ளுங்கள். இதை வைத்து உங்களது அப்ளிகேஷனை டிஜிட்டலாக டிராக் செய்து கொள்ளலாம். 10 முதல் 15 நாட்களுக்குள் இந்த செயல்முறை செய்து முடிக்கப்படும். அதிகபட்சம் 25 நாட்களுக்குள் அப்டேட் செய்யப்பட்டுவிடும்.

அப்லோட் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்

* அடையாள சான்றுக்கு ஆதார் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அப்லோட் செய்யலாம்.
* முகவரி சான்றுக்கு யூலிடிட்டி பில்கள் மற்றும் பேங்க் ஸ்டேட்மெண்ட்டை அப்லோட் செய்யலாம்.
* மாற்றத்திற்கான சான்றுக்காக திருமண சான்றிதழ், நீதிமன்ற உத்தரவு காப்பியை பயன்படுத்தலாம்.
* போட்டோ மற்றும் கையெழுத்து தேவைப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do You Know PAN Card Renewal Process Ahead 2026 January 1 Aadhaar Link How to Renewal PAN Card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X