Home
How to

Paytm ஆப் வழியாக மற்ற UPI ஆப்களுக்கு பணம் அனுப்புவது எப்படி?

பேடிஎம், போன்பே, கூகுள் பே போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். குறிப்பாக முக்கிய நகரங்கள் முதல் துவங்கி, உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.

பேடிஎம் செயலி

பேடிஎம் செயலி

இதுதவிர பேடிஎம், போன்பே,கூகுள் பே போன்ற செயலிகள் அவ்வப்போது சில சலுகைகளைக் கூட வழங்குகின்றன. இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த வசதி பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

புதிய அம்சம்

புதிய அம்சம்

அதாவது பேடிஎம் நிறுவனம் தற்போது மற்ற யுபிஐ (UPI) பயனர்களுக்கு பணம் அனுப்பும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பேடிஎம் கணக்கில் இருந்து மற்றொரு பேடிஎம் கணக்கிற்கு தொலைபேசி எண் மட்டும் இருந்தாலே பணம் அனுப்ப முடியும்.

யுபிஐ கணக்கு

அதேபோல் பேடிஎம் கணக்கு இல்லாதவர்களுக்கு மற்ற யுபிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. ஆனாலும் அதற்குப் பதிலாக பேடிஎம் அவர்களது வங்கி கணக்குக்கு பணம் செலுத்தும் வசதி மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மற்ற யுபிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எளிதில் பணம் அனுப்புவதற்காகப் புதிய ஒரு வசதி பேடிஎம் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

 மற்ற யுபிஐ பயனர்களுக்குப் பணம் அனுப்புவது எப்படி?

மற்ற யுபிஐ பயனர்களுக்குப் பணம் அனுப்புவது எப்படி?

குறிப்பாக இந்த புதிய வசதி மூலம் பேடிஎம் செயலியில் இருந்து கூகுள் பே, போன்பே உள்ளிட்ட பல மூன்றாம் தரப்பு யுபிஐ பயனர்களுக்கு நேரடியாக உங்கள் பேடிஎம் வங்கி கணக்கிலிருந்து பணத்தைப் பெறவும் அனுப்பவும் முடியும் என்பது தான் சிறப்பு.

இப்போது உங்களது பேடிஎம் செயலியில் மற்ற யுபிஐ பயனர்களுக்குப் பணம் அனுப்புவது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் உங்களது பேடிஎம் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து உங்களது பேடிஎம் செயலியில் உள்ள யுபிஐ பணப் பரிமாற்றப் பிரிவின் கீழ் To UPI Apps என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

நீங்கள் To UPI Apps என்பதை கிளிக் செய்ததும், அடுத்தப் பக்கத்தில் To other UPI Apps எனும் விருப்பம் இருக்கும், இதைதேர்வு செய்யவும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்து மற்ற யுபிஐ கணக்கு ஐடி, வங்கி விவரங்கள் அல்லது மொபைல் எண் ஆகியவற்றை பதிவிட்டால் அது அங்கீகரிக்கப்பட்டு அடுத்த பக்கத்திற்குச் செல்லும்.

வழிமுறை-5

வழிமுறை-5

இப்போது நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையைத் தேர்வு செய்து பிறகு உங்கள் பேடிஎம் பின்-ஐ பதிவிட்டு பணத்தை அனுப்ப முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know How to send money from Paytm app to other UPI apps follow these simple steps: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X