Home
How to

ஆதாரில் பிறந்த தேதி, முகவரி, போன் நம்பர் எப்படி மாற்றுவது தெரியுமா? இதோ எளிய வழிமுறைகள்.!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுவது ஆதார் தான். அதாவது அரசு சலுகைகள் பெறுவது முதல் பள்ளி, கல்லூரி வரையில் அனைத்து இடங்களிலும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது இந்த ஆதார். அதேபோல் குழந்தையில் ஆரம்பித்து அனைத்து வயதினருக்கும் ஆதார் அட்டை பல இடங்களில் தேவைப்படக்கூடிய ஒரு முக்கிய ஆவணமாக இருக்கிறது ஆதார்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது உங்கள் ஆதாரில் போன் நம்பர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதை எவ்வாறு ஆன்லைன் மூலம் செய்வது என்று இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ஆதாரில் பிறந்த தேதி,  முகவரி, போன் நம்பர் எப்படி மாற்றுவது தெரியுமா?

வழிமுறை-1: முதலில் https://uidai.gov.in/ என்ற UIDAI அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதன்பின்பு Update Your Aadhaar என்பதைத் தேர்வு செய்து அதன் கீழ் உள்ள Update Demographics Data Online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அடுத்து உங்களின் ஆதார் எண் மற்றும் ஸ்கிரீனில் வரும் security code பதிவிட வேண்டும். இதைக் கொடுத்த பின்பு Send OTP ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு அனுப்பப்பட்ட ஓடிபி-ஐ பதிவிடவும். குறிப்பாக ஓடிபி-ஐ பதிவிட்ட பின்பு Login கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3: அதன்பின்பு நீங்கள் எந்த பிரிவை அப்டேட் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது போன் நம்பர், முகவரி,பெயர் என எதை மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் பல்வேறு பிரிவுகளையும் ஒரே நேரத்தில் அப்டேட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரில் பிறந்த தேதி,  முகவரி, போன் நம்பர் எப்படி மாற்றுவது தெரியுமா?

வழிமுறை-4: மேலும் நீங்கள் மாற்ற நினைக்கும் பிரிவுக்குத் தகுந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். உதாரணமாகக் கூறவேண்டும் என்றால், உங்களது முகவரியைப் புதுப்பிக்க விரும்பினால்,பில், வங்கி அறிக்கை அல்லது பாஸ்போர்ட் போன்ற முகவரிக்கான ஆதாரங்களை அப்லோடு செய்ய வேண்டும்.

வழிமுறை-5: அதன்படி நீங்கள் குறிப்பிட்ட விவரங்கள், அப்லோடு செய்த ஆவணங்களை சரி பார்த்து Submit பட்டனை கொடுக்கவும். அடுத்து திரையில் வரும் BPO service provider-ஐ தேர்ந்தெடுக்கவும். குறிப்பாக BPO service ப்ரோவைடர்ஸ் UIDAI-யால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அப்பேட் சேவை வழங்குபவர்கள் ஆவர்.

வழிமுறை-6: இப்போது அப்டேட் உறுதி செய்து மீண்டும் Submit பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு உங்களுக்கு unique Update Request Number அனுப்பபடும். இதை வைத்து உங்கள் அப்டேட் குறித்த தகவலை டிராக் செய்ய முடியும்.

ஆதாரில் பிறந்த தேதி,  முகவரி, போன் நம்பர் எப்படி மாற்றுவது தெரியுமா?

அதேபோல் ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்துவிடலாம். ஆனால், கைரேகை, புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்தில்தான் அப்டேட் செய்ய முடியும். அதே UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும். பின்பு அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்கவும். அங்கு இருக்கும், ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சரிபார்ப்பார்.

மேலும் உங்களது ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தை பணியாளர் எடுத்துக்கொள்வார். பின்பு இந்த சேவைக்கு 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின்பு ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN - Update Request Number) வழங்குவார். பின்னர் உங்களது புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know how to change date of birth, address, phone number in Aadhaar? Here are the simple steps: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X