குறிப்பாக பெண்கள்! Instagram-ல் சாட் செய்யும் போது மறக்காம இந்த Setting-ஐ ஆன் பண்ணிடுங்க! இல்லனா?

|

தத்தம் மொபைல் நம்பர்களை (Mobile Number) பரிமாறி கொள்ளமலயே யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ்களை அனுப்ப உதவும் இன்ஸ்டாகிராம் டைரக்ட் மெசெஜஸை (Instagram Direct Messages) பற்றி பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்படாது என்று நம்புகிறோம்.

ஏனென்றால் வாட்ஸ்அப்பிற்கு (WhatsApp) இணையாக இல்லை என்றாலும் கூட, மற்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம்களுடன் ஒப்பிடும் போது, இன்ஸ்டாகிராம் வழியாக நடக்கும் பெர்சனல் சாட்களின் (Personal Chats) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது!

மறக்காமல் ON செய்ய வேண்டிய ஒரு Setting!

மறக்காமல் ON செய்ய வேண்டிய ஒரு Setting!

ஒருவேளை நீங்களும் இன்ஸ்டாகிராம் வழியாக மெசேஜ்களை பகிரும் ஒரு நபராக இருந்தால், அடுத்த முறை ஒருவருடன் 'சாட்' செய்யும் முன், இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு முக்கியமான செட்டிங்-ஐ மறக்காமல் ஆன் செய்து விடவும்.

அதென்ன செட்டிங்? அதை ஆன் செய்வது எப்படி? அதை ஆன் செய்வதால் என்ன நன்மை? செய்யாவிட்டால் என்ன நடக்கும்? குறிப்பிட்ட செட்டிங்-ஐ புதிய சாட்களில் மட்டுமே பயன்படுத்த முடியாமா? அல்லது ஏற்கனவே உள்ள சாட்களிலும் பயன்படுத்தலாமா? இதோ விவரங்கள்:

அதென்ன செட்டிங்?

அதென்ன செட்டிங்?

நாம் இங்கே பேசுவது - இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸில் அணுக கிடைக்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End-to-end encryption) என்கிற அம்சத்தை பற்றித்தான்.

இந்த அம்சத்தை இயக்குவதன் மூலம், இன்ஸ்டாகிராம் வழியாக நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் / போட்டோக்கள் ஆனது வெளியே எங்கும் லீக் (Leak) ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

சோஷியல் மீடியா ஆப்களில் (Social Media Apps) அதிகரித்து வரும் டேட்டா லீக் (Data Leak) மோசடியில் சிக்கிக்கொள்ள விரும்பாத எவருமே, இன்ஸ்டாகிராமில் உள்ள எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை எனேபிள் (Enable) செய்து கொள்வது நல்லது!

இன்ஸ்டாகிராமில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஆன் செய்வது எப்படி?

இன்ஸ்டாகிராமில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஆன் செய்வது எப்படி?

இன்ஸ்டாகிராமில் அணுக கிடைக்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஒரு புதிய சாட்டிலும் எனேபிள் செய்யலாம்.

அதே போல ஏற்கனவே உள்ள ஒரு சாட்டிலும் எனேபிள் செய்யலாம். முதலில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஒரு புதிய சாட்-ஐ தொடங்குவது எப்படி என்று பார்ப்போம்!

- உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் ஆப்பை திறந்து டிஎம் (DM) செக்ஷனுக்கு செல்லவும்; அதாவது மெசேஜிங் பிரிவிற்கு செல்லவும்.

- பின்னர் மேல் வலது மூலையில் கிடைக்கும் பிளஸ் (+) ஐகானை கிளிக் செய்யவும்

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது ஸ்டார்ட் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்டட் சாட் (Start end-to-end-encrypted chat) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

- இப்போது பாதுகாப்பான முறையில் சாட் செய்ய விரும்பும் அக்கவுண்ட்-ஐ தேர்வு செய்யவும்

- அல்லது குறிப்பிட்ட நபரின் பெயரை சேர்ச் பாரில் (Search Bar) டைப் செய்து தேடி, பின் அந்த அக்கவுண்ட்டிற்குள் நுழையவும்

- பின்னர் மேல் வலதுபுறத்தில் கிடைக்கும் சாட் பட்டனை கிளிக் செய்யவும்; டேட்டா லீக் பற்றிய கவலைகள் இல்லாமல் நிம்மதியாக சாட் செய்யவும்!

ஏற்கனவே உள்ள ஒரு சாட்டில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை இயக்குவது எப்படி?

ஏற்கனவே உள்ள ஒரு சாட்டில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை இயக்குவது எப்படி?

- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கவும்.

- நீங்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை இயக்க விரும்பும் சாட்டிற்கு செல்லவும்.

- சாட் விண்டோவின் (Chat Window) மேலே இருக்கும் பெறுநரின் பெயரை கிளிக் செய்யவும்

- பின்னர், கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்து, யூஸ் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (Use end-to-end encryption) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

- இப்போது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட ஒரு புதிய சாட் திறக்கப்படும்; அவ்வளவு தான்! வேலை முடிந்தது!

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்: ஏன் முக்கியம்?

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்: ஏன் முக்கியம்?

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை எனேபிள் (Enable) செய்வதன் வழியாக, நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை, அவைகளை பெறும் நபர்களால் மட்டுமே படிக்க முடியும்; பார்க்க முடியும் என்பதை உறுதி செய்ய முடியும்.

ஏனென்றால், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஒரு மெசேஜ் ஆனது ஒவ்வொரு டிவைஸிலும் ஸ்டோர் செய்யப்படும் ஒரு யுனிக் கீயால் (Unique Key) பாதுகாக்கப்படுகிறது.

இதன் கீழ் நீங்கள் ஒரு மெசேஜை அனுப்பும் போது, அந்த டிவைஸ் ஆனது குறிப்பிட்ட மெசேஜை லாக் செய்து, பின் அனுப்பும். அதே போன்ற யுனிக் கீ-ஐ கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டால் மட்டுமே, லாக் ஆன அந்த மெசேஜை ஓப்பன் செய்ய முடியும்.

இதை இயக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

இதை இயக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

ஒருவேளை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை இயக்கவில்லை என்றால்.. மேலே சொன்ன எந்த பாதுகாப்பும் உங்கள் மெசேஜிற்கு கிடைக்காது; அவைகள் இரண்டு டிவைஸ்களுக்கு இடையே எங்காவது ஒரு புள்ளியால் லீக் ஆகலாம்; அல்லது திருபாடப்படலாம்; அல்லது ஹேக் செய்யப்படலாம்!

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் ஆனது இன்ஸ்டாகிராமில் மட்டுமல்ல, மெட்டாவிற்கு (Meta) சொந்தமான பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப்பிலும் (WhatsApp) கூட அணுக கிடைக்கிறது!

Best Mobiles in India

English summary
Do Not Forget To Turn ON This Privacy Setting While Chatting On Instagram To Avoid Data leak

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X