Home
How to

வாங்கிடாதீங்க.. எக்காரணத்தை கொண்டும் இந்த 6 பொருட்களையும் Second Hand-ல வாங்கிடாதீங்க.. ஏன்னா?

செக்கெண்ட ஹேண்ட் (Second hand) பொருட்களை வாங்குவதற்கு ஒவ்வொவொருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள் இருக்கும். சிலர் அவரச தேவைக்காக வாங்குவார்கள்; சிலர் தற்காலிகமாக வாங்குவார்கள்; இன்னும் பட்ஜெட் சிக்கல் காரணமான வாங்குவார்கள். இவைகளில் எந்த காரணமாக இருந்தாலும் சரி.. ஒரு சில பொருட்களை மட்டுமே செக்கெண்ட ஹேண்ட் ஆக வாங்கவே கூடாது!

அப்படியாக, நீங்கள் தப்பித்தவறி கூடசெக்கெண்ட ஹேண்ட் ஆக வாங்க கூடாத 6 பொருட்களின் பட்டியலும், அவைகளை ஏன் வாங்க கூடாது? அவைகளில் என்னென்ன மாதிரியான கோளாறுகள் மற்றும் ஆபத்துகள் (Defects and Dangers) இருக்கும்? மீறி வாங்கினால் நீங்கள் என்னென்ன சிக்கல்களை சந்திக்க நேரிடும்? இதோ விவரங்கள்:

வாங்கிடாதீங்க.. Second Hand-ல வாங்க கூடாத 6 பொருட்கள்! ஏன்?

01. ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்கள் (Smart Home Devices): பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் (Used Cameras), டோர் பெல்கள் (Door Bells) மற்றும் ஸ்மார்ட் அசிஸ்டென்ட்கள் (Smart Asistants) உள்ளிட்ட தயாரிப்புகள் ப்ரீ-ஹேக் செய்யப்பட்டு (Pre-hacked) இருக்கலாம். இவைகளை ரீசெட் (Reset) செய்வது போதுமானதாக இருக்காது. இது உங்கள் வீட்டிற்கான அணுகலை அந்நியர்களுக்கு கொடுக்கலாம்; உங்கள் ப்ரைவஸியை (Privacy) வெளிப்படுத்தலாம்.

02. பேபி மானிட்டர்கள் (Baby Monitors): உங்கள் வீட்டிற்குள் உள்ள உங்களுடைய குழந்தையின் பேச்சுக்களை.. வெளியே இருக்கும் யாரோ ஒருவரால் கேட்க முடியும் என்று.. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். சற்றே பீதியாக இருக்கிறது அல்லவா? இதை தவிர்க்க ஒருபோதும் செக்கெண்ட ஹேண்ட் பேபி மானிடர்களை வாங்க வேண்டாம். ஏனென்றால், அவைகளின் செக்யூரிட்டி ப்ரோடோகால் (Security protocols) காலாவதியாகி இருக்கலாம்!

03. இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்கள் (Earbuds and Headphones): செக்கெண்ட ஹேண்ட் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்களை ஒருபோதும் வாங்க வேண்டாம். ஏனென்றால் பயன்படுத்தப்பட்ட ஆடியோ அக்ஸசெரீஸ்கள் (Audio Accessories) நிச்சயம் வியர்வையில் நனைந்து இருக்கும். அவைகளில் பாக்டீரியா மற்றும் கிருமிகளின் (Bacteria and Germs) இனப்பெருக்கமும் நிச்சயம் நடக்கும். இவைகளை முழுமையாக சுத்தம் செய்தாலும் கூட, பழையபடியே ஆடியோ அனுபவம் (Audio Experience) கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.

04. ஹேர் ரூமவல் டிவைஸ்கள் (Hair Removal Devices): மற்றவர்கள் பயன்படுத்திய ரேஸர்கள் மற்றும் எபிலேட்டர்கள் (Razors and Epilators) ஆனது தோல் எரிச்சல் (Skin irritation) மற்றும் தொற்றுநோய்களுக்கான (Infections) சாத்தியகூறுகளை கொண்டிருக்கும். இதுபோன்ற அசௌகரியத்தில் இருந்து உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ள செக்கெண்ட ஹேண்ட் ஹேர் ரூமவல் டிவைஸ்களை வாங்க வேண்டாம்; புதிய பெர்சனல் கேர் கருவிகளை (Personal care tools) வாங்கி, பயன்படுத்தவும்.

05. பவர் பேங்க்குகள் (Power Banks): பயன்படுத்தப்பட்ட பவர் பேங்க்களில் உள்ள பேட்டரிகள் சிதைந்து போயிருக்கலாம் ( Degraded Batteries). அவைகள் நம்பகத்தன்மை அற்றவைகளாக இருக்கும்; பாதுகாப்புக்கு ஆபத்தானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதிகப்படியான வெப்பம் வெளிப்படுவது (Over Heating) அல்லது வெடிப்புகள் (Blasts) போன்ற நிகழ்வுகள் நடக்க காரணம் பவர் பேங்குகளில் உள்ள ஆரோக்கியம் குறைவான பேட்டரிகள் என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

06. எலெக்ட்ரிக் டூத் பிரஷ்கள் (​Electric Toothbrushes): கண்டிப்பாக யாரும் தெரிந்தே செக்கெண்ட ஹேண்ட் எலெக்ட்ரிக் டூத் பிரஷ்களை வாங்க மாட்டார்கள். ஒருவேளை அப்படியொரு யோசனை இருந்தால், அதை மறந்துவிடவும். ஏனென்றால் ஒருவர் பயன்படுத்திய எலெக்ட்ரிக் டூத் பிரஷை இன்னொருவர் பயன்படுத்துவது வாய் கிருமிகளை பகிர்ந்துகொள்வதற்கு சமம். இதற்கு பேசாமல் கையால் பல் துலக்கிவிட்டு செல்லலாம்.

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச் போன்ற தயரிப்புகளை செக்கெண்ட ஹேண்ட் ஆக வாங்குவதில் பெரிய அளவிலான சிக்கல்கள் இருக்காது. இருப்பினும் கூட மேலோட்டமான சேதாரங்கள், வெளிப்படையான வீக்கங்கள் உள்ள தயாரிப்புகளை வாங்க வேண்டாம். இதுபோன்ற பொருட்கள் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும்; இருப்பினும் நம்பி வாங்க வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do Not Buy These 6 Second hand Gadgets at Any Cost Here is Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X