உங்கள் குரல் மூலம் உங்களின் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய முடியும்: நறுக் டிப்ஸ்.!

இந்த புதிய அப்டேட் இன் படி வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் உங்களின் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்துகொள்ளலாம்.

|

சிவாஜி படத்தில் குரல் மூலம் தனது லேப்டாப் சிஸ்டத்தை ஓபன் செய்வார் நமது சூப்பர் ஸ்டார். அதே மாதிரி நம்ம ஸ்மார்ட் போன் ஓபன் செய்தல் எப்படி இருக்குமென்று எதிர்பார்த்திட்டு இருந்த அனைவர்க்கும் கூகுள் நிறுவனம் புதிய சேவையை வழங்கி இருக்கிறது.

உங்கள் குரல் மூலம் உங்களின் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய முடியும்.!

அண்மையில் அண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிடப்பட்ட புதிய அப்டேட் இல் இந்தச் சேவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய அப்டேட் இன் படி வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் உங்களின் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்துகொள்ளலாம்.

செக்யூரிட்டி ஆப்க்ஷன்

செக்யூரிட்டி ஆப்க்ஷன்

உங்களுக்கு இது போன்ற செய்தி திரையில் காண்பிக்கப்படும், இதில் உங்களக்கு 4 விதமான செக்யூரிட்டி ஆப்க்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு பிடித்தமான செக்யூரிட்டி ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

ஆன் பாடி டிடெக்ஷன்:

ஆன் பாடி டிடெக்ஷன்:

இந்த ஆப்ஷன் மூலம், நீங்கள் உங்கள் சாதனத்தை ஒருமுறை மட்டும் அன்லாக் செய்தல் போதும் மற்றும் அது உங்கள் கையில் அல்லது பாக்கெட்டில் உங்களை அடையாளம் காணும் வரையில், அன்லாக் இல் இருக்கும். உங்கள் கையிலிருந்து கீழே வைக்கும் பொது லாக் ஆக்கிக்கொள்ளும்.

டிரஸ்ட்டட் பிளேஸ்:

டிரஸ்ட்டட் பிளேஸ்:

உங்களுக்கு நம்பிக்கையான இடங்களைக் கூகுள் மேப் மூலம் லொகேஷன் பட்டியலில் சேர்த்துக்கொண்டால் இந்தச் சேவை உங்களுக்குக் கிடைக்கும். சேவ் செய்யப்பட்ட நம்பிக்கையான இடங்களில் உங்களின் மொபைல் அன்லாக் சேவையில் இருக்கும்.

டிரஸ்ட்டட் டிவைஸ்:

டிரஸ்ட்டட் டிவைஸ்:

உங்களின் மொபைல் இந்தச் சேவையின் படி ப்ளூடூத் சாதனத்துடனோ அல்லது உங்கள் கார் இன் பிளூடூத் இணக்கத்துடன் இணையும் பொது ஆட்டோமேட்டிக் அன்லாக் சேவைக்கு சென்றுவிடுகிறது.

வாய்ஸ் மேட்ச்:

வாய்ஸ் மேட்ச்:

உங்களின் மொபைல் இல் வாய்ஸ் மேட்ச் ஆக்ட்டிவ் செய்த பின் உங்கள் போன் இடம் "ஒகே கூகுள்" என்று சொன்னால் மட்டும் போதும், உங்களின் ஸ்மார்ட் போன் அன்லாக் ஆகிவிடும்.

செயல்முறை

செயல்முறை

இந்த புதிய வாய்ஸ் உஙளுக் சேவையை எப்படி உங்கள் போன் இல் ஆக்ட்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.

- உங்கள் ஆண்ட்ராய்டு போன் இல் செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
- செட்டிங்ஸ் கீழ் செக்யூரிட்டி கிளிக் செய்யுங்கள்.
- செக்யூரிட்டி இன் கீழ் உள்ள ஸ்மார்ட் லாக் கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் மொபைல் பாஸ்வோர்டு என்டர் செய்துகொள்ளுங்கள்.
- வாய்ஸ் மேட்ச் சேவையை கிளிக் செய்யுங்கள்.
- ஆக்ஸஸ் டு வாய்ஸ் மேட்ச் கிளிக் செய்து கொள்ளுங்கள்.

சேவை அனுமதி

சேவை அனுமதி

- இப்பொழுது அன்லாக் வாய்ஸ் மேட்ச் சேவைக்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.
- அன்லாக் வாய்ஸ் மேட்ச் கிளிக் செய்யுங்கள்.
- ஒகே கூகுள் என்று மூன்று முறை சொல்லுங்கள்.
- உங்களின் குரலை கூகுள் சேமித்து கொள்ளும்.
- உங்கள் குரலை தவிர்த்து யார் குரலுக்கும் போன் அன்லாக் செய்யாது.

குரல் அன்லாக்

குரல் அன்லாக்

இப்பொழுது உங்களின் ஸ்மார்ட் போன்-ஐ லாக் செய்துவிட்டு ஒகே கூகுள் என்று சொல்லி பாருங்கள். உங்கள் மொபைல் போன் ஆட்டோமேட்டிகா உங்கள் குரல் கேட்டு அன்லாக் ஆகும்.

Best Mobiles in India

English summary
Did You Know You Could Unlock Your Android With Your Voice? Here's How : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X