நீங்கள் மரணிக்கும் தருவாயில் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை அழிப்பது எப்படி?

|

இணைய உலகில் பயனர் விவரங்கள் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகியிருக்கிறது. மின்னஞ்சல் அக்கவுண்ட்கள் தினசரி உரையாடல்கள் மட்டுமின்றி நம் டிஜிட்டல் வாழ்வின் கடந்தகாலமாகவும் இருக்கின்றன.

உங்களின் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை அழிப்பது எப்படி?

ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுண்ட்கள் நம் மின்னஞ்சல்களை சேமித்து வைப்பதோடு மட்டுமின்றி, கூகுள் செயலிகளான மேப்ஸ், காலண்டர், கீப், போட்டோஸ், டிரைவ் மற்றும் யூடியூப் போன்றவற்றை இயக்குவதற்கான காரணிகளாகவும் இருக்கின்றன. உங்களின் சொந்த விவரங்களை உங்களால் நிர்வகிக்க முடியாத காலக்கட்டத்தை பற்றி என்றேனும் நினைத்திருக்கிறீர்களா? பெரும்பாலும் யாரும் இப்படி நினைக்க வாய்ப்புகள் குறைவு தான் எனலாம்.

 விவரங்களை இயக்க முடியும்

விவரங்களை இயக்க முடியும்

ஃபேஸ்புக்கில் ஒருவர் மரணித்ததும், அவரது அக்கவுண்ட்டினை மெமேரியலைஸ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. கூகுளை பயனர்கள் அவர்களின் காண்டாக்ட்களில் இருப்பவரை தேர்வு செய்து வைக்கும் வசதி வழங்கப்படுகிறது. பின் குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒருவர் அக்கவுண்ட்டினை பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், அவர் ஏற்கனவே தேர்வு செய்தவர்கள் அக்கவுண்ட்டின் விவரங்களை இயக்க முடியும்.

 நீங்கள் என்ன செய்ய?

நீங்கள் என்ன செய்ய?

இவ்வாறு இருக்கும் டேட்டாவை ஒரு பட்டனை க்ளிக் செய்தே அழித்து விட முடியும். எதிர்காலத்தில் உங்களின் கூகுள் டேட்டாவை பாதுகாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

நெட்டுடன் 600டிவி சேனல்களுக்கு ஜியோ ஜிகா டிவியின் 4கே செட்டாப் பாக்ஸ்.!நெட்டுடன் 600டிவி சேனல்களுக்கு ஜியோ ஜிகா டிவியின் 4கே செட்டாப் பாக்ஸ்.!

myaccount.google.com வலைத்தளம் செல்ல

myaccount.google.com வலைத்தளம் செல்ல

- முதலில் myaccount.google.com வலைத்தளம் செல்ல வேண்டும்.

- இனி, பிரைவசி மற்றும் பெர்சனலைசேஷன் பகுதியில் இருக்கும் மேனேஜ் யுவர் டேட்டா ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டு.

- இனி கீழ்புறமாக ஸ்கிரால் செய்து டேட்டாவினை டவுன்லோடு, டெலீட் போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

- அடுத்து Start ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

உங்களின் காண்டாக்ட் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்

உங்களின் காண்டாக்ட் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்

- உங்களின் அக்கவுண்ட் இன்-ஆக்டிவ் என தேர்வு செய்ய எத்தனை காலம் கூகுள் காத்திருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் கூகுள் 3, 6, 12 மற்றும் 18 மாதங்களை தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்குகிறது.

- அடுத்து, கூகுள் உங்களை தொடர்பு கொள்ள மொபைல் நம்பர் ஒன்றை வழங்க வேண்டும். இதனை இங்கு பதிவிடலாம். மேலும் உங்களின் நெருங்கிய உறவினரின் மொபைல் நம்பரையும் வழங்கலாம்.

- இனி உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி மற்றும் மாற்று மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும்.

- அடுத்து Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

தகவல் வழங்கப்பட வேண்டிய நபர்களை தேர்வு செய்ய வேண்டும்

- முதலில் Add person ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- நண்பர் அல்லது குடும்பத்தாரின் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய விவரங்களை தேர்வு செய்து Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி காண்டாக்ட்டின் மொபைல் நம்பர் பதிவிட்டு Save ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அந்த நபருக்கு வழங்க தனிப்பட்ட றுந்தகவல் ஒன்றையும் வழங்கலாம்.

- இந்த வழிமுறையை பின்பற்றி பத்து நபர்களை சேர்க்க முடியும். அந்த வகையில் நீங்கள் தேர்வு செய்தவர்களுக்கு இந்த விவரத்தை வழங்க Next ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இந்தியா: ரூ.6,990-விலையில் அசத்தலான விவோ வ்யை90 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!இந்தியா: ரூ.6,990-விலையில் அசத்தலான விவோ வ்யை90 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கூகுள் அக்கவுண்ட்டை அழிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்

கூகுள் அக்கவுண்ட்டை அழிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்

- இவ்வாறு செய்த பின் 'Yes, delete my inactive Google Account' பட்டனை க்ளிக் செய்தால், உங்கலின் கூகுள் அக்கவுண்ட் டெலீட் செய்யப்பட்டு விடும்.

- அடுத்து Review Plan ஆப்ஷனை க்ளிக் செய்து Confirm Plan ஆப்ஷனை தேர்வு செய்தால் வேலை முடிந்ததும்.

- உங்களது திட்டத்தை ஆஃப் செய்ய Turn off my plan ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
delete-your-google-account-when-you-die: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X