விண்டோஸ்-இல் மெமரியை பாதுகாக்க அற்புத டிப்ஸ்.!

கம்ப்யூட்டரில் அதிக மெமரி இருப்பின் இதை கண்டு கவலை கொள்ளாமல் இருக்கலாம், இந்த ஃபோல்டர் அப்டேட் செய்யப்பட்டதில் இருந்து 30 நாட்களில் தானாக அழிக்கப்பட்டு விடும்.

|

விண்டோஸ் 10 ஃபால் கிரியேட்டர்ஸ் அப்டேட் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. விண்டோஸ் 10 இயங்குதளம் குறைந்தளவு பிழை திருத்தங்களுடன், அதிக மேம்படுத்தல்களை வழங்கி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

விண்டோஸ்-இல் ஒரு ஃபோல்டரை அழித்தால் அதிக மெமரி பெறலாம்.!

அப்டேட் செய்து முடித்ததும், சில ஐகான்கள் மற்றும் ஷார்ட்கட்களை மீண்டும் பார்க்க முடியும். பெரும்பாலும், விண்டோஸ் ஸ்டோர் அல்லது எட்ஜ் பிரவுசர் உள்ளிட்ட ஐகான்களை திரையில் மீண்டும் சேர்க்கப்பட்டு இருக்கும். பழைய வழிமுறைகளை போன்றே அவை சரி செய்யப்பட்டு இருக்கும்.

புதிய அப்டேட் விண்டோஸ் அப்கிரேடு போன்ற வரவேற்பை பெற்றிருக்கிறது. தகவல்களை பாதுகாக்க மைக்ரோசாஃப்ட் தரப்பில் உங்களது தற்போதைய விண்டோஸ் இன்ஸ்டாலேஷன் தரவுகள் அனைத்தும் பத்திரமாக சேமிக்கப்படுகிறது. இந்த ஃபைல் கோளாறு சமயங்களில் மீண்டும் பழைய இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்ய உதவியாக இருக்கும். எனினும் இது அதிகப்படியான மெமரியை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

 30 நாட்களில்

30 நாட்களில்

கம்ப்யூட்டரில் அதிக மெமரி இருப்பின் இதை கண்டு கவலை கொள்ளாமல் இருக்கலாம், இந்த ஃபோல்டர் அப்டேட் செய்யப்பட்டதில் இருந்து 30 நாட்களில் தானாக அழிக்கப்பட்டு விடும். மீண்டும் பழைய இயங்குதளம் பயன்படுத்த வேண்டும் என்போருக்கு, இந்த ஃபோல்டர் அழிக்கப்பட்டால், இந்த கனவு நிறைவேறாது.

ஒருவேளை கம்ப்யூட்டரில் மெமரியை இல்லை என்போர், விண்டோஸ் டூல்களை கொண்டே இதனை அழிக்க முடியும். ஃபால் க்ரியேட்டர்கள் அப்டேட்டில் விண்டோஸ் செட்டிங்-இல் புதிய ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று தான் ஸ்டோரேஜ் சென்ஸ் (Storage Sense), இந்த அம்சம் உங்களது மெமரி பிரச்சனையை தீர்த்துக்கட்டும். இத்துடன் டெம்ப்பரரி ஃபைல்களை அழிக்கவும் வழி செய்யும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

விண்டோஸ் 10 ஃபால் க்ரியேட்டர்கள் அப்டேட் மற்றும் அதற்கும் புதிய பதிப்புகளில்

விண்டோஸ் 10 ஃபால் க்ரியேட்டர்கள் அப்டேட் மற்றும் அதற்கும் புதிய பதிப்புகளில்

1 - செட்டிங்ஸ் சென்று சிஸ்டம் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

2 - இடது புற மெனுவில் காணப்படும் ஸ்டோரேஜ் அம்சத்தை க்ளிக் செய்யவும். இதே பகுதியில் இருக்கும் மெமரியை எவ்வாறு பெற வேண்டும் (Change how we free up space) என கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

3 - இந்த ஆப்ஷனில், முந்தைய விண்டோஸ் 10 இன்ஸ்டாலேஷனை அழிக்கக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி க்ளீன் நௌ (Clean now) பட்டனை க்ளிக் செய்யவும்.

4 - விண்டோஸ் அனைத்து ஃபைல்களையும் சேகரித்து அவற்றை அழிக்கும் வரை காத்திருக்கவும். இந்த பணி நிறைவுற்றதும், விண்டோஸ் சார்பில் திரையில் தகவல் காண்பிக்கப்படும்.

5 - இயங்குதளத்தின் புதிய அம்சமாக ஸ்டோரேஜ் சென்ஸ் இருக்கிறது, எனினும் இது தானாகவே டிசேபிள் செய்யப்பட்டு இருக்கும். இந்த பகுதியில் இது என்ன செய்யும் என்றும், இதை எவ்வாறு உங்களுக்கு சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

முந்தைய பதிப்புகளில் இதை எவ்வாறு செய்யவேண்டும்?

முந்தைய பதிப்புகளில் இதை எவ்வாறு செய்யவேண்டும்?

ஃபைல் எக்ஸ்ப்ளோரர் மூலம் விண்டோஸ் ஃபைல்களை அழிக்க முயற்சித்தால், விண்டோஸ் இயங்குதளம் அதை நிராகரித்து விடும். இதனை செய்ய செட்டிங்-களில் சில வேலைகளை செய்ய வேண்டும்.

1 - முதலில் ஸ்டார்ட் சென்று டிஸ்க் க்ளீன்-அப் (Disk Cleanup) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

2 - டிஸ்க் க்ளீன்-அப் அம்சத்தில் உங்களது சிஸ்டம் டிரைவை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த டூல் உங்களது டிரைவில் உள்ள தேவையற்ற ஃபைல்கள் மற்றும் பழைய கேச்சி டேட்டாவை ஸ்கேன் செய்யும், இதில் விண்டோஸ் ஃபைல்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது.

4 - டிரைவில் ஸ்கேன் செய்யப்பட்டதில் வெவ்வேறு தகவல்களை பார்க்க முடியும், இதில் ரிசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் கேச்சி என வெவ்வேறு தகல்களை பார்க்க முடியும். இதில் டெம்ப்பரரி விண்டோஸ் இன்ஸ்டாலேஷன் ஃபைல்ஸ் (Temporary Windows installation files) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


5 - நீங்கள் அழிக்க விரும்பும் தகவல்கள் அனைத்தையும் க்ளிக் செய்து, அவற்றை உறுதி செய்ய OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து வரும் ப்ராம்ப்ட்களை உறுதி செய்யவும்.


இவ்வாறு செய்வது பாதுகாப்பானது தானா என நினைப்போர், இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் சேவைகளை பயன்படுத்தலாம். இதை செய்ய சிக்ளீனர் போன்றவை மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

இன்னும் இன்ஸ்டால் செய்யலையா?

இன்னும் இன்ஸ்டால் செய்யலையா?

நான் இன்னும் விண்டோஸ் 10 ஃபால் க்ரியேட்டர்ஸ் அப்டேட் இன்ஸ்டால் செய்யவில்லை என்போர், இதனை செட்டிங்ஸ் -- அப்டேட் அன்ட் செக்யூரிட்டி ஆப்ஷன்களின் கீழ் இருக்கும் அப்டேட் செய்யக்கோரும் பட்டனை க்ளிக் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Delete the Windows.old Folder and Save Space Again: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X