அலெர்ட்! எக்காரணத்தை கொண்டும் "இதுபோன்ற" பல்புகள், ட்யூப் லைட்களை வீட்டில் வைத்து இருக்க வேண்டாம்! ஏன்?

|

பழைய எரியாத பல்புகள், ஃபியூஸ் போன ட்யூப் லைட்கள், ஸ்பீக்கர் காந்தங்கள் உட்பட எக்காரணத்தை கொண்டும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைக்கவே கூடாத பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்!

அதென்ன எலெக்ட்ரானிக் பொருட்கள்? அவைகள் ஏன் வீடுகளில் வைக்க கூடாது? அதன் பின் உள்ள ஆபத்துகள் என்னென்ன?

கூர்ந்து கவனிக்காத வரை.. இதை கண்டுபிடிக்க முடியாது!

கூர்ந்து கவனிக்காத வரை.. இதை கண்டுபிடிக்க முடியாது!

நீங்கள் கூர்ந்து கவனிக்காத வரை எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பான ஒரு விஷயத்தை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.

அது என்னவென்றால் - எலெக்ட்ரானிக் பொருட்ளை விற்பனை செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள், அந்தந்த எலெக்ட்ரானிக் பொருட்களின் பேக்கேஜிங்கில் காலாவதியாகும் தேதிகளை (Expiry dates) குறிப்பிட்டு இருக்காது. இங்கேதான் நாம் ஒரு பெரிய தவறை செய்கிறோம்; அதுவும் சாதாரணமான தவறு அல்ல; உயிருக்கே ஆபத்தான தவறு!

உயிருக்கே ஆபத்தா.. அப்படி என்ன தவறு?

உயிருக்கே ஆபத்தா.. அப்படி என்ன தவறு?

எலெக்ட்ரானிக் பொருட்ளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் எந்தவிதமான காலாவதியாகும் தேதியை குறிப்பிடவில்லை என்பதால் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு காலாவதியே கிடையாது என்று நம்மில் பலரும் நம்புகிறோம்.

ஆகையால் தான் நம் எல்லோர் வீட்டிலும் ஏதாவது ஒரு மூலையில், சில பழைய எலெக்ட்ரானிக் பொருட்கள் அல்லது டிவைஸ்களை எப்போதும் காணமுடிகிறது!

கசப்பான உண்மை!

கசப்பான உண்மை!

வீடுகளில் நாம் சேமித்து வைத்து இருக்கும் எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பான ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் - பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் நமது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், அதை தூக்கி போடாமல் இருக்கும் பட்சத்தில் அது பலத்த சேதத்தை கூட ஏற்படுத்தலாம் என்பதே ஆகும்!

அப்படியாக, உங்கள் வீட்டில் இருந்து நீங்கள் உடனே தூக்கி போட வேண்டிய 8 எலெக்ட்ரானிக் பொருட்களின் பட்டியலும், அதை தூக்கிபோடவில்லை என்றால் என்னென்ன நடக்கலாம் என்கிற விவரங்களும் இதோ:

1. டிராயர்களில்

1. டிராயர்களில் "தூங்கும்" பழைய போன்கள்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்கள் என கிட்டத்தட்ட அனைத்து மொபைல்களிலுமே லித்தியம் அயன் பேட்டரிகள் உள்ளன. காலப்போக்கில் இந்த பேட்டரிகள் சேதமடையக்கூடும் மற்றும் வெடிக்க கூடும்.

எனவே மொபைல் வெடிப்பு மற்றும் அதனால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க விரும்புபவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய மொபைல் போன்களை தூக்கி போட்டு விடவும்.

எப்படியும் அது (குப்பை எடுப்பவர்களின் வழியாக) மறு சுழற்சிக்கு சென்று விடும். எனவே அச்சம் இல்லாமல் தூக்கி போட்டு விடுங்கள்!

2. காலாவதியான ரவுட்டர்கள்

2. காலாவதியான ரவுட்டர்கள்

நம்பினால் நம்புங்கள் - பழைய ரவுட்டர்களை தான் மிகவும் ஈஸியாக இடைமறிக்க முடியும், ஹேக் செய்ய முடியும். உங்கள் வீட்டில் ஒரு பழைய ரவுட்டர் உள்ளதென்றால் அது சைபர் க்ரைம்களுக்கான ஒரு திறந்த அழைப்பாக கூட இருக்கலாம்

மேலும் சற்றே பழைய ரவுட்டர்களால் அதிநவீன ஹேக்கிங் முறைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்க முடியாது.

அதுமட்டுமின்றி அதிகபடியாக பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆனது ஷார்ட் சர்க்யூட் மற்றும் தீ விபத்துகளுக்கு கூட வழிவகுக்கலாம்!

3. பழைய பவர் கேபிள்கள்

3. பழைய பவர் கேபிள்கள்

பொதுவாகவே பவர் கேபிள்கள் காலப்போக்கில் அதன் இன்சுலேஷன் பண்புகளை (insulation properties) இழக்கும். நிலைமை இப்படி இருக்கும் போது, நீங்கள் மிகவும் பழைய பவர் கேபிள்களை பயன்படுத்தினால் அது ஷாக், தீப்பொறி மற்றும் தீ விபத்து போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

எனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாட்டில் இல்லாத எல்லா வகையான பழைய பவர் கேபிள்களையும், மற்ற நல்ல பவர் கேபிள்களிடம் இருந்து அப்புறப்படுத்தவும்; பாதுக்காப்பாக இருக்கவும்!

4. உடைந்த, பழைய சுவர் சாக்கெட்டுகள்

4. உடைந்த, பழைய சுவர் சாக்கெட்டுகள்

உடைந்த மற்றும் பழைய வால் சாக்கெட்டுகள் எப்போதுமே ஆபத்தானது தான். குறிப்பாக உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் இன்னும் ஆபத்து!

சாக்கெட்டுகளின் உடைந்த துண்டுகள் அல்லது போல்ட்கள் ஆனது உங்களுக்கோ அல்லது உங்களின் குழந்தைகளுக்கோ வெட்டு காயங்களை ஏற்படுத்தலாம்.

அதுமட்டுமன்றி, உடைந்த அல்லது சேதமடைந்த சாக்கெட்டுகள் ஆனது குறைந்தபட்சம் - ஷாக் அடிக்கலாம் மற்றும் அதிகபட்சம் - ஒரு தீ விபத்தை தூண்டலாம். எனவே இப்போதே உஷார் ஆகி கொள்ளவும்!

5. பழைய பல்புகள் மற்றும் டியூப்லைட்கள்

5. பழைய பல்புகள் மற்றும் டியூப்லைட்கள்

100 க்கு 99 வீடுகளில் பழைய மற்றும் பழுதடைந்த பல்புகள் / டியூப் லைட்களை பார்க்கலாம்.

இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால் பழைய பல்புகள் / டியூப்லைட்களில் - டங்ஸ்டன் இழைகள், இரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் உள்ளன. ஆக அவைகள் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் / வெடிக்கலாம்!

அப்படி நடக்கும் பட்சத்தில் பல்புகள் மற்றும் டியூப் லைட்களிலிருந்து சிதறும் கண்ணாடி துண்டுகள் ஆனது வெட்டு காயங்களுக்கு வழிவகுக்கலாம். எனவே பல்புகளோ மற்றும் டியூப்லைட்களோ பழுதாகி விட்டால் - அது உடைந்து விடாதபடி, மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி - தூக்கி போட்டு விடவும்!

6. பழைய சார்ஜர்கள்

6. பழைய சார்ஜர்கள்

பழைய சார்ஜர்கள், உயர்-மூலக்கூறு பாலிமர் (high-molecular polymer), கண்ணாடி இழை (, glass fibre), மிகவும் தூய்மையான செப்புத் தகடு (high purity copper foil) மற்றும் பிரிண்டட் கூறுகள் (printed components) போன்ற பொருட்களால் ஆன சர்க்யூட் போர்டுகளை பயன்படுத்துகின்றன.

ஒரு சர்க்யூட் போர்ட் ஆனது மிகவும் பழையதாகி விட்டால், அது செயலிழந்து பின் வெடிக்கவும் செய்யலாம் அல்லது தீ விபத்துகளை ஏற்படுத்தலாம். எனவே பயன்பாட்டில் இல்லாத பழைய சார்ஜர்களை தூக்கி போட்டு விடுவது நல்லது!

7. பழைய இயர்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள்

7. பழைய இயர்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! இயர்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களில் நிறைய "நச்சு பொருட்கள்" உள்ளன. உதாரணமாக, காந்தங்கள் (உலோகம்), செப்பு சுருள்கள் (copper coils), பிளாஸ்டிக் மற்றும் பேட்டரிகளை கூறலாம்!

இந்த பொருட்கள் முறையாக அகற்றப்படாவிட்டால் அது நிச்சயம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதுமட்டுமிர்னி பேட்டரியில் ஏற்படும் கசிவு உங்கள் டிராயரில் உள்ள மற்ற எலக்ட்ரானிக் பொருட்களைக் கூட சேதப்படுத்தலாம். எனவே உங்களிடம் உடைந்த / பழைய ஹெட்போன்கள் அல்லது ஸ்பீக்கர்கள் இருந்தால் அதை மறுசுழற்சி செய்யும் இடங்களில் ஒப்படைக்கலாம்!

8. பழைய ஹார்ட் டிரைவ்கள்

8. பழைய ஹார்ட் டிரைவ்கள்

பயன்பாட்டில் இல்லாத பழைய ஹார்ட் டிரைவ்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால் பாதுகாப்பாக தோன்றலாம் ஆனால் அதில் - அலுமினியம், ப்ரோடெக்டிவ் பாலிமர்கள் (protective polymers), பிளாஸ்டிக் மற்றும் காந்தங்கள் போன்ற பொருட்கள் உள்ளதை மறக்க வேண்டாம்!

மேற்கண்ட பொருட்களை "உருவாக்க" அதிக அளவு ஆற்றல் செலவாகிறது மற்றும் அது நம் சுற்றுச்சூழலுக்கு நிறைய சேதத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவே உங்களிடம் பழைய ஹார்டு டிரைவ்கள் இருந்தால் அதை மறுசுழற்சி செய்யவோ அல்லது சரியான முறையில் அப்புறப்படுத்தவோ தெரிந்தவர்களிடம் அதை ஒப்படைக்கலாம்!

Best Mobiles in India

English summary
Dangers behind old electronic items in your home throw these 8 electronic devices as soon possible

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X