யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
உங்களிடம் ஒரு லேப்டாப் இருக்கிறது என்றால்.. உங்களுக்கு ஒரு எச்சரிக்கை! இது வெப் ப்ரவுஸர் (Web Browser) தொடர்பான ஒரு எச்சரிக்கை என்பதால், உங்களிடம் எந்த பிராண்டின் லேப்டாப் உள்ளது என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அதாவது இது அனைத்து வகையான லேப்டாப் பயனர்களுக்கும் பொருந்தும்!
அதென்ன எச்சரிக்கை?
நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, உங்கள் லேப்டாப்பில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வெப் ப்ரவுஸர் (Microsoft Edge Web Browser) இருக்கிறது என்றால்.. இந்த எச்சரிக்கை உங்களுக்கானது தான்!

ஏனென்றால், சிஇஆர்டி-இன் (CERT-IN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (Indian Computer Emergency Response Team) ஆனது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வெப் ப்ரவுஸரில் பல புதிய பாதிப்புகளை (Vulnerabilities) கண்டறிந்துள்ளது.
சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!
மைக்ரோசாஃப்ட் எட்ஜ்ஜில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பாதிப்புகள் ஆனது "அதிக தீவிரமான பாதிப்புகள்" (High Severity Vulnerabilities) என்று வகைப்படுத்தபட்டுள்ளன என்பதால், யாரும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சிஇஆர்டி-இன் ஆதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கையின்படி, க்ரோமியம் அடிப்படையிலான (Chromium-based) மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வெப் ப்ரவுஸரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாதிப்புகள் ஆனது கம்ப்யூட்டர் / லேப்டாப்பில் உள்ள முக்கியமான டேட்டாவை திருடுவதற்கும், பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்கும் வழிவகுக்கும்.
இதன் மூலம் ஹேக்கர்களால் உங்கள் கம்ப்யூட்டர் / லேப்டாப்பின் கண்ட்ரோல் மற்றும் அக்செஸ்-ஐ பெற முடியும்.
இந்த சைபர் க்ரைம் சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி?
ஒருவேளை உங்கள் கம்ப்யூட்டர் / லேப்டாப்பில் 109.0.1518.61 வெர்ஷனுக்கு முன் வந்த மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வெர்ஷன்களில் ஏதேனும் ஒன்று இருந்தால், உடனே அதை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்.

ஏனென்றால் 109.0.1518.61 வெர்ஷனுக்கு முந்தைய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வெர்ஷன்களில் தான் பாதிப்புகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே பழைய வெர்ஷனில் இருந்து உடனே புதிய வெர்ஷனுக்கு (அதாவது 109.0.1518.61-க்கு) அப்டேட் ஆகுமாறு சிஇஆர்டி-இன் எச்சரிக்கை விடுத்துள்ளது!
மைக்ரோசாஃப்ட் எட்ஜை அப்டேட் செய்வது எப்படி?
உங்கள் சிஸ்டத்திற்கு ஏற்கனவே லேட்டஸ்ட் அப்டேட் வந்து இருந்தால், அது தொடர்பான நோட்டிபிக்கேஷன் உங்களுக்கு கிடைத்து இருக்கும்.
ஒருவேளை கிடைக்கவில்லை என்றால், அல்லது அதை நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள் என்றால், அதை மேனுவல் ஆகவும் செக் செய்யலாம்.

- முதலில் உங்கள் சிஸ்டத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸரை திறந்து, ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள த்ரீ டாட்ஸ்-ஐ (Three Dots) கிளிக் செய்யவும்.
- பின்னர் செட்டிங்ஸ் (Settings) செல்லவும்
- செட்டிங்ஸின் கீழ், அபௌட் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (About Microsoft Edge) என்பதை கிளிக் செய்யவும்.
- லேட்டஸ்ட் அப்டேட் வந்து இருந்தால், உங்கள் ப்ரவுஸர் தானாகவே அதை சரிபார்த்து, பின்னர் இன்ஸ்டால் (Install) செய்யும்.
- லேட்டஸ்ட் வெர்ஷன் அப்டேட் செய்யப்பட்டதும், உங்கள் வெப்ப ப்ரவுஸரை ரீலான்ச் (Relaunch) செய்யவும். அவ்வளவு தான், வேலை முடிந்ததது!
இன்டர்நெட் ப்ரவுஸரை அவ்வப்போது அப்டேட் செய்வதால் என்னென்ன பலன் கிடைக்கும்?

- உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பின் செக்யூரிட்டி மேம்படுத்தப்படும்
- லேப்டாப்பின் பெர்ஃபார்மென்ஸும் மேம்படுத்தப்படும்
- லேட்டஸ்ட் அப்டேட் வழியாக புதிய அம்சங்கள் கிடைக்கும்
- உங்கள் லேப்டாப் பல வகையான வெப்சைட்களுக்கு இணக்கமானதாக இருக்கும்
- பழைய அப்டேட்டில் இருந்த குறைகள் / பிழைகள் நிவர்த்தி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








