ரெடியா- 12 முதல் 14 வயதுடைய சிறார்களும் மார்ச் 16 முதல் தடுப்பூசி செலுத்தலாம்: முன்பதிவு செய்வது எப்படி?

|

இந்தியா முழுவதும் உள்ள 12-14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 (நாளை) முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அதேபோல் ஜனவரி முதல் 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியும் மார்ச் 16 முதல் தொடங்கப்பட இருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இப்போது முன்னெச்சரிக்கை மருந்துகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

12 வயதுக்கு மேல் இருக்கும் சிறார்களுக்கு தடுப்பூசி

12 வயதுக்கு மேல் இருக்கும் சிறார்களுக்கு தடுப்பூசி

இந்த நிலையில் 12 வயதுக்கு மேல் இருக்கும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என பல தரப்பினரும் வலியுறித்தி வந்த நிலையில் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு மார்ச் 16 (நாளை) முதல் கோவின் பிளாட்ஃபார்மில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பசி

ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பசி

கோவின் தளத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பதிவு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி செலுத்தப்படத் தொடங்கிய முதல் நாளிலேயே 40 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குடும்ப உறுப்பினர்களுடனும் அல்லது தனித்தனியாகவும் பதிவு செய்யலாம்

குடும்ப உறுப்பினர்களுடனும் அல்லது தனித்தனியாகவும் பதிவு செய்யலாம்

சிறார்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் அல்லது தனித்தனியாகவும் பதிவு செய்யலாம். ஆதார் அட்டைகள் இல்லாத சிறார்கள் அவர்களது மாணவர் அடையாள அட்டையை பயன்படுத்தியும் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் ஒரு மொபைல் எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம். 12-14 வயதுடைய சிறார்களுக்கு ஐதராபத்தின் பயோலிஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தகுதி உடையவர்கள் குறித்த விவரம்

தகுதி உடையவர்கள் குறித்த விவரம்

12 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆனது மாநிங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டது. 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் இதற்கு தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Co-WIN போர்ட்டலை அணுகவும்

Co-WIN போர்ட்டலை அணுகவும்

முதலில், www.cowin.gov.in என்ற இணைப்பைப் பயன்படுத்தி Co-WIN போர்ட்டலைத் திறக்கவும். உங்கள் குழந்தைக்கு கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய, பதிவு / உள்நுழை என்ற டேப்பை தேர்வு செய்ய வேண்டும். தொலைபேசி எண் மற்றும் OTP உடன் உள்நுழைய வேண்டும். தடுப்பூசிக்காக முதலில் பதிவு செய்த அதே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தினால், மேல் வலது மூலையில் உள்ள உறுப்பினர்களைச் சேர் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். குழந்தைகளின் விஷயத்தில், ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற சில ஆவணங்களை பதிவேற்றம் செய்யும்படி கேட்கப்படுவீர்கள். பதிவுகள் இல்லாத நிலையில், குழந்தைகள் பதிவு செய்ய பள்ளி அடையாள அட்டைகளையும் பதிவேற்றலாம்.

Co-WIN போர்ட்டலில் பதிவு செய்யும் விரிவான வழிமுறைகள்

Co-WIN போர்ட்டலில் பதிவு செய்யும் விரிவான வழிமுறைகள்

  • 16 மார்ச் முதல்12-14 வயதுடைய சிறார்கள் கோவின் தளத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • முதலில் https://selfregistration.cowin.gov.in/ என்ற தளத்துக்குள் உள்நுழைய வேண்டும்.
  • இதன்பின் மொபைல் எண் மற்றும் OTP சரிபார்ப்பு கேட்கப்படும் இதை சரியாக உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
  • ஒரு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 4 உறுப்பினர்களை மட்டுமே பதிவு செய்யலாம். ஒரு நபரை பதிவிட்ட பிறகு உறுப்பினரை சேர் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஐடி, புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு, புகைப்பட அடையாளச் சான்றின் கீழ் இடம்பெற்றிருக்கும் மாணவர் அடையாள அட்டையைக் கூட அப்டேட் செய்து பதிவிட்டுக் கொள்ளலாம்.
  • இதன்பின் உங்களுக்கான பதிவு பூர்த்தி செய்யப்படும். சந்திப்பை முன்பதிவு செய்வதற்கு பக்கத்தின் கீழ் வலது மூலையில் உள்ள டேப் என்ற தேர்வை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
CoWIN Registration Step by Step Process: How to Register Online for Covid Jabs of aged 12-14

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X