ஒவ்வொரு மாணவரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய குரோம் எக்ஸ்டென்சன்.!

  மாணவர்களின் அடிப்படையாக விளங்கும் உற்பத்தித்திறன், ஒழுக்கம் மற்றும் செயல்திறன் போன்றவை, அவர்களை கற்கும் இயந்திரங்களாக மாற்றி வருகின்றன. ஆனால் அந்த மூன்று அம்சங்களையும் மேம்படுத்த ஏதேனும் உதவி கிடைத்தால் மாணவர்களுக்கு கற்கும் வழிமுறை வரமாகி விடும். இணையவழி ஆய்வுகள் மற்றும் இணைய வசதிகள் மாணவர்களுக்கான புத்தம்புதிய உலகை வழங்குகின்றன. ஆனாலும் இணையத்தில் சமூகவலைதளங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் கவனச்சிதறல் ஏற்படும் அபாயமும் உள்ளது.

  ஒவ்வொரு மாணவரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய குரோம் எக்ஸ்டென்சன்.!

  ஆனால் சிறந்த ப்ரவுசர்களில் ஒன்றான குரோம் , அதன் வெப் ஸ்டோரில் உள்ள பல்வேறு எக்ஸ்டென்சன்களை உங்கள் ப்ரவுசரில் இணைப்பதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க முடியும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஏட் ப்ளாக்(AdBlock)

  பாப்அப் ஏட், பேனர் ஏட் மற்றும் இன்னபிற ஏட் அனைத்தும் இந்த குரோம் எக்ஸ்டென்சன் மூலம் தடுக்கப்படும். மேலும் இதன் மூலம் ப்ரவுசரின் செயல்திறன் அதிகரித்து ப்ரவுசிங் வேகமும் அதிகரிக்கும்.

  லாஸ்ட்பாஸ்(LastPass)

  குரோம் ப்ரவுசரில் மட்டுமில்லாமல், பல்வேறு ப்ரவுசர்கள் மற்றும் தளங்களிலும் ஃப்ரீமியம்(Freemium) சேவையாக இந்த எக்ஸ்டென்சன் கிடைக்கிறது. இந்த சேவையின் முக்கிய வேலை, உங்களின் அனைத்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் என்கிரப்சன் செய்து பாதுகாத்து வைக்கும்.

  ஸ்டேஃபோகஸ்டு (StayFocused)

  ஸ்டிரிக்ட்ப்ளோ(StrictFlow) போன்று கவனச்சிதறலை ஏற்படுத்தும் இணையதளங்களை தடைசெய்யாமல், இது சற்று வேறாக செயல்படுகிறது. இந்த எக்ஸ்டென்சன் மூலம் தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தேவையில்லா இணையதளங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது.

  ஸ்டிரிக்ட்ப்ளோ(StrictFlow)
  ஸ்டிர்க்ட் போமோடோரா முன்பு பெயரிடப்பட்ட இந்த எக்ஸ்டென்சன் மூலம், தங்களுக்கு தரப்பட்ட எந்தவொரு வேலையையும் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் 25 நிமிடங்கள் செய்யமுடியும். இதில் 5 நிமிட இடைவேளையும் உண்டு. இதில் இணையதளங்களை வெள்ளை மற்றும் கருப்பு பட்டியல் என வகைப்படுத்தும் வசதியும் உள்ளது.

  லைட்சாட் (LightShot)

  மாணவர்களின் அடிப்பை தேவையான ஸ்கிரீன்சாட் வசதியை இந்த எக்ஸ்டென்சன் பூர்த்தி செய்யும். இதன் மூலம் திரை அல்லது இணையதளத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படம் எடுக்க, மாற்றம் செய்ய , அளவுகளை மாற்ற, சேமிக்க மற்றும் பதிவேற்றம் செய்ய வசதிகள் உள்ளன.

  இந்த எக்ஸ்டென்சன் எளிதாக டூல்பாரில் ஒரு பட்டனை சேர்க்கும். அதன் மூலம் எளிதாக மேற்கூறியவற்றை எளிதாக செய்யலாம்.

  Bit.ly

  நீங்கள் பயன்படுத்தும் இணையதளத்திற்கான Bit.ly லிங்க்கை தலைபுடன் உருவாக்க இந்த எக்ஸ்டென்சன் உதவுகிறது.

  மெமரைஸ் (Memorize)

  இந்த எக்ஸ்டென்சன் பாப்அப் மூலம் உங்களிடம் கேள்விகள் கேட்டு அதற்கு பதிலளித்தால் மட்டுமே மேற்கொண்டு செல்ல அனுமதிக்கும். எந்தவகை கேள்விகள் கேட்கவேண்டும் அதற்கு பதில்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

  நீங்கள் ரெட்இட் மற்றும் பேஸ்புக் தளங்களை பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பாப்அப்கள் தோன்றும்.

  ரெட்இட் என்ஹேன்ஸ்மென்ட் சூட்

  ரெட்இட்-ல் ப்ரவுசிங் செய்யும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த எக்ஸ்டென்சன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பல்வேறு செயல்பாட்டு குறுக்குவழிகள் கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும்.

  கூகுள் டாக்ஸ் மற்றும் பி.டி.எப் வியூவர் (Google Docs PDF/Powerpoint Viewer)
  இவற்றை பதிவிறக்கும் செய்யும் போது வேறு ப்ரோகிராம் மூலம் திறக்கும் அனுபவத்தை அனைவரும் பெற்றிருப்பீர்கள். இனி அதற்கு விடைகொடுங்கள். அனைத்து விதமான ஆவணங்களையும் இந்த எக்ஸ்டென்சன் மூலம் எந்த பிரச்சனையும் இன்றி எளிதாக பார்க்க முடியும்.

  ஸ்டைல்பாட்(StyleBot)

  இதன் மூலம் இணையதளங்களில் உள்ள CSS அமைப்புகளை உங்களுக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ள முடியும்.

  கூகுள் குயுக் ஸ்க்ரால் (Google Quick Scroll)

  உங்களுக்கு தேவையான சொற்தொடர் அல்லது புள்ளிவிவரங்களை மலையளவு தரவுகளுக்கு இடையே இவ்வளவு நாளும் தேடியிருப்பீர்கள். அந்த சர்ச் பாரை போல இல்லாமல், இந்த எக்ஸ்டென்சன் மூலம் பாப்அப் விண்டோவில் நீங்கள் தேடும் தகவல்களை காட்டப்படும்.

  பேஸ்புக் கரேஜ் வுல்ப்(Facebook Courage Wolf)
  நீங்கள் ஒவ்வொரு முறையும் பேஸ்புக்கில் உள்நுழையும் போதும், பின்புறத்தில் ஊளையிடும் நரியின் புகைப்படம் தெரியும். இது உங்களை பயமுறுத்த வடிவமைக்கப்படவில்லை. ஆனால் பேஸ்புக்கில் குறைந்த நேரம் செலவழிக்கும் வகையில் தொடக்கத்திலேயே எச்சரிக்கை செய்யும்.

  விமியம்(Vimium)

  இந்த எக்ஸ்டென்சன் கீபோர்டு மீது அதீத அன்பு வைத்திருக்கும் பயனர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று. இதன் மூலம் நேவிகேட் செய்வது மிகவும் எளிதாகும் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை கீபோர்டு குறுக்குவழிகள் மூலமே செய்து முடிக்க முடியும்.

  எவர்நோட் வெப் கிளிப்பர் (Evernote web clipper)

  எக்ஸ்டென்சனை விட மேலாக சம்மரி லிங்க் உருவாக்க மற்றும் தரவுதளத்தில் சேமித்த படங்களை எடுக்க உதவுகிறது. இணையவசதி உள்ள எந்த கருவியின் வாயிலாகவும் இதை பயன்படுத்த முடியும்.

  கூகுள் டிக்ஸ்னரி (Google Dictionary)

  பெயருக்கேற்றாற் போல், உங்களுக்கு பரிச்சயம் இல்லா வார்த்தை அல்லது சொற்தொடருக்கான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இந்த சேவை வழங்குகிறது.

  How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
  ஹோவர் ஜூம் (Hover Zoom)

  ஹோவர் ஜூம் (Hover Zoom)

  இணையத்தில் உள்ள பல்வேறு படங்களுக்கு மத்தியில், உங்களுக்கு தேவையான படத்தை டவுன்லோட் செய்யாமலேயே அதன் மீது கார்சரை வைத்து ஜூம் செய்து பார்க்க வழிவகை செய்கிறது இந்த எக்ஸ்டென்சன்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Chrome Extensions every student should use ; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more