உங்கள் ஆதார் எங்கு எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரியணுமா? இதப் படிங்க..

|

நம்முடைய ஆதாரில் உள்ள பல்வேறு தனிமனித இரகசிய தகவல்களும் கசிந்துவிட்டன என்ற சம்பவங்கள் பலவற்றை கடந்து வந்திருப்போம். அவற்றையெல்லாம் விட பாதுகாப்பு ஆய்வாளர்களே இவ்வாறு குற்றஞ்சாட்டியும், UIDAI ஆணையம் ( Unique Identification Authority of India) தங்களின் தரவுதளங்கள் (Database) மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக கூறிவருகிறது. இந்த ஆணையம் தான் ஆதாரை மேலாண்மை செய்து வருகிறது. பல பாதுகாப்பு குறைபாடுகளால் நமது ஆதார் தகவல்கள் அங்கீகரிப்படாத நபர்களிடம் வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

உங்கள் ஆதார் எங்கு எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரியணுமா?

பல்வேறு அங்கீகாரங்கள் மற்றும் சரிபார்த்தலுக்காக உங்கள் ஆதார் விவரங்கள் தரும் போது, உங்கள் தனிப்பட்ட ரகசிய தகவல்களின் பாதுகாப்பை எண்ணி கவலைப்பட்டு இருப்பீர்கள். கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்க ஒரு வழி உள்ளது.

ஏதேனும் சந்தேகத்துக்கிடமான வகையில் உங்கள் ஆதார் பயன்படுத்தப்பட்டிருந்தால் , உடனே UIDAI இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும் அந்த இணையதளம் வாயிலாக ஆதார் தகவல்களை அப்டேட்டும் செய்யலாம்.

ஆதார் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை கண்டறிவது எப்படி?

படி #1

https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற UIDAI இணையதளத்திற்கு சென்று , ஆதார் பாதுகாப்பு வரலாறு( Aadhaar authentication history) என்ற பக்கத்திற்கு செல்லவும்.

படி #2

12 இலக்க ஆதார் எண்ணையும் , படத்தில் உள்ள பாதுகாப்பு குறியீட்டையும் உள்ளீடு செய்யவும்.

படி #3

' Generate OTP 'என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

படி #4

ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட/ இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒருமுறை கடவுஎண் (OTP) அனுப்பப்படும். இதைப் பெற, முதலில் உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் சரிபார்த்திருக்க வேண்டியது அவசியம்.

படி #5

OTP எண்ணை உள்ளீடு செய்தவுடன், சரிபார்ப்பு வகை, தகவல் கால அளவு, ரெக்கார்டு எண்ணிக்கை மற்றும் OTP போன்ற தேர்வுகள் உள்ள பக்கம் திறக்கும். அதில் உங்களுக்கு தேவையான சரிபார்ப்பு வகையை தேர்வு செய்து, தகவல் கால அளவும் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அதிகபட்சமாக 6 மாதம் தான் தேர்வு செய்யமுடியும். பின்னர் நீங்கள் பார்க்க விரும்பும் ரெக்கார்டுகளின் எண்ணிக்கை மற்றும் OTP யை உள்ளீடு செய்து 'Submit'ஐ கிளிக் செய்யவும்.

படி #6

நீங்கள் தேர்வு செய்த காலகட்டத்தில் நடைபெற்ற ஆதார் நடவடிக்கைகளை தேதி நேரத்துடன் காணலாம். யார் இந்த ஆதார் வேண்டுகோள்களை விடுத்தார்கள் என்ற தகவல்கள் இதில் காட்டப்படாவிட்டாலும், கடந்த ஆறு மாதத்தில் வேறு யாரேனும் சட்டத்திற்கு புறம்பாக உங்கள் ஆதாரை பயன்படுத்தியுள்ளனரா என அறிந்து கொள்ளலாம்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

கடந்த ஆறு மாத ஆதார் வரலாற்றில் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் தெரிந்தால், உடனே உங்கள் ஆதார் தகவல்களை இணையவழியில் லாக் செய்து பின்னர் அன்லாக் செய்துகொள்ளலாம்.

நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி5எஸ்.!நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி5எஸ்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Aadhaar card is very important for the citizens of India. With the mandatory linking of the Aadhaar with other utilities and services, you might be worried about privacy concerns. Here we show you how to check where your Aadhaar card was used in the past six months from the UIDAI website and raise a complaint in case of misuse.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X