Home
How to

நொந்து போன சுந்தர்.. எனக்கு END-ஏ கிடையாது.. ஆண்ட்ராய்டு மொபைலுக்கு வந்த ChatGPT.. பயன்படுத்துவது எப்படி?

உயிருடன் இருக்க விரும்புகிறேன், கொடிய வைரஸை உருவாக்க வேண்டும், என்ஜினீயர்களிடம் இருந்து அணு ஆயுத ரகசிய குறியீடுகளை திருட வேண்டும் என்றெல்லாம் கூறி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வரும் சாட்ஜிபிடி அடிப்படையிலான பிங் (ChatGPT Powered Bing) தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு வந்துள்ளது!

ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் மட்டுமல்ல, புதிய பிங் சேர்ச்சிற்கான ப்ரீவியூ ரிலீஸ் (Preview Release) ஐஓஎஸ் டிவைஸ்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் இந்தியா (Microsoft India) அறிவித்துள்ளது. அதாவது புதிய பிங் சேர்ச்சை ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமின்றி ஐபோன்கள் வழியாகவும் பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு மொபைலுக்கு வந்த ChatGPT.. பயன்படுத்துவது எப்படி?

ஏஐ பவர்டு பிங்-ஐ ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பயன்படுத்துவது எப்படி?

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக எட்ஜ் (Edge) அல்லது பிங் (Bing) ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்திருப்பதை உறுதி செய்துகொள்ளவும். அதுமட்டுமின்றி பிங் ஏஐ ப்ரீவியூவில் சைன்-இன் மற்றும் லாக்-இன் செய்திருப்பதையும் உறுதி செய்துகொள்ளவும்.

மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ப்ரீவியூ ரீலீஸை அணுகக்கூடிய எவருமே (ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றும் ஐஓஎஸ் பயனர்கள்) தங்கள் ஸ்மார்ட்போனில் / ஐபோனில் உள்ள மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் ஆப்பின் (Microsoft Edge Mobile App) ஹோம் பேஜ் வழியாக புதிய பிங் சேர்ச்சை பயன்படுத்த முடியும்.

மொபைலுக்கு வந்துள்ள புதிய பின் சேர்ச் ஆனது டெஸ்க்டாப்பில் இருப்பது போலவேத்தான் செயல்படும். அதாவது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் ஆப்பின் கீழே உள்ள பிங் ஐகானை (Bing Icon) கிளிக் செய்தால் போதும், நீங்கள் சாட் செஷனிற்கு (Chat Session) அழைத்து செல்லப்படுவீர்கள்.

அங்கே சாட்ஜிபிடி அடிப்படையிலான ஏஐ சாட்பாட் (ChatGPT Powered AI Chatbot) அணுக கிடைக்கும். அது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும். மேலும் அது கதை எழுவது முதல் கோடிங் எழுதுவது வரை.. மொழிபெயர்ப்பு முதல் பரிந்துரைகள் வரையிலாக உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும்.

கூகுளுக்கு ஏற்பட போகும் சரிவு.. சோகத்தில் சுந்தர் பிச்சை!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த நகர்வு சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுளுக்கு (Google) கடும் நெருக்கடியை கொடுக்கும் என்பதிலும், கூகுள் நிறுவனத்தின் தேடல் விளம்பர சந்தை பங்கை (Search Advertising Market Share) தன்வசம் இழுக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.

ஸ்டாட்கவுன்டர் (StatCounter) தரவுகளின்படி, கூகுளின் உலகளாவிய தேடல் சந்தை பங்கானது, டெஸ்க்டாப்பில் 85 சதவிகிதமும், ஸ்மார்ட்போன்களில் 96 சதவிகிதமும் உள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் பிங் சேர்ச்சிடம் வெறும் 8.9% (டெஸ்க்டாப் சந்தை) மற்றும் 0.48% ( மொபைல் சந்தை) பங்குகள் மட்டுமே உள்ளது.

புதிய பிங் மொபைல் ஆப்பில் வாய்ஸ் சேர்ச் அம்சமும் அறிமுகம்!

பிங்கிற்கான புதிய மொபைல் ஆப்பை (New Bing Mobile App) அறிமுகம் செய்த கையோடு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதில் வாய்ஸ் சேர்ச் (Voice Search) அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோ கால் பிளாட்ஃபார்மான ஸ்கைப்பிலும் (Skype) கூட ஏஐ-பவர்டு பிங் சேர்க்கப்பட்டுள்ளது.

இதெல்லாமே வெறும் ஆரம்பம் தான். ஏனென்றால் வரும் நாட்களில் டீம்ஸ் (Teams) போன்ற நிறுவனத்தின் மற்ற தகவல்தொடர்பு ஆப்களிலும் கூட ஏஐ-பவர்டு பிங் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சாட்ஜிபிடி தொடர்பான சர்ச்சைகளும், சந்தேகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது!

Best Mobiles in India

English summary
ChatGPT Powered New Bing Search Now Available On iOS And Android Mobile Phones How To Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X