Google Pay ஆப்பில் இலவசமாக கிடைக்கும் ரூ.200 தீபாவளி பரிசுத்தொகை! "இதை" செஞ்சா போதும்!

|

இந்த 2022 தீபாவளி பண்டிகை காலத்தை தன் பயனர்களோடு சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தின் கீழ் கூகுள் பே ஆப் (Google Pay App) அதன் தீபாவளி ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த ஆபரின் கீழ் கூகுள் பே பயனர்கள் ரூ..200 வரையிலான பரிசுத்தொகையை பெற முடியும். அதை பெற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!

தீபாவளி சர்ப்ரைஸ் ஆக ரூ.200!

தீபாவளி சர்ப்ரைஸ் ஆக ரூ.200!

கூகுள் இந்தியா (Google India) நிறுவனம், தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக தனது கூகுள் பே பயனர்களுக்கான "தீபாவளி சர்ப்ரைஸ்"-ஐ அறிவித்துள்ளது.

அது ஒரு வகையான போட்டி ஆகும். அந்த போட்டியின் வெற்றியாளர்களுக்கு கூகுள் இந்தியா ரூ.200 வரையிலான பரிசுத் தொகையை வழங்கும்!

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

ரூ.200-ஐ பெற என்ன செய்ய வேண்டும்?

ரூ.200-ஐ பெற என்ன செய்ய வேண்டும்?

கூகுள் இந்தியா வழங்கும் ரூ.200 என்கிற தீபாவளி பரிசுதொகையை பெற நீங்கள் மொத்தம் 4 வகையான சுற்றுகளை கடக்க வேண்டும்.

மேலும் இந்த சுற்றுகளை நீங்கள் தனியாக கடக்க முடியாது; அதற்கு உதவி செய்ய - கூகுள் பே ஆப்பை பயன்படுத்தும் - உங்கள் நண்பர்களை (அதிகபட்சம் 4 பேர்) அழைக்க வேண்டி இருக்கும்!

கூகுள் பே ஆப்பை திறந்த உடனேயே!

கூகுள் பே ஆப்பை திறந்த உடனேயே!

கூகுள் இந்தியாவின் கூற்றுப்படி, இந்தியாவில் உள்ள கூகுள் பே பயனர்கள் இந்த போட்டியில் நுழைய இண்டி-ஹோம் சாட் ஹெட்-ஐ (Indi-Home chat head) திறக்க வேண்டும்.

இண்டி-ஹோம் சாட் ஹெட் ஆனது, நீங்கள் கூகுள் பே ஆப்பை திறந்த உடனேயே ஒரு பேனர் வழியாக அணுக கிடைக்கும். Diwali Mela is Live என்கிற வாசகத்தின் கீழ் இருக்கும்!

வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!

ஒவ்வொரு படியிலும் ரிவார்ட்ஸ் காத்திருக்கும்!

ஒவ்வொரு படியிலும் ரிவார்ட்ஸ் காத்திருக்கும்!

பின்னர் உங்கள் நண்பரோடு சேர்ந்து ஃப்ளோர்களை கட்டமைக்க (Build floors) வேண்டும். அப்படி செய்யும் ஒவ்வொரு படியிலும் உங்களுக்கான வெகுமதிகள் (Rewards) காத்திருக்கும்.

மேற்கூறியபடி ஃப்ளோர்களை கட்டமைக்க, உங்களின் காண்டாக்ட்களுக்கு பணம் செலுத்துதல், QR கோட்-ஐ பயன்படுத்தி பணம் செலுத்துதல் மற்றும் கூகுள் பே ஆப்பில் பில்களை செலுத்துதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

முதலில் ரூ.30 கேஷ்பேக்.. பின் மறுபடியும் ரூ.30 கேஷ்பேக்!

முதலில் ரூ.30 கேஷ்பேக்.. பின் மறுபடியும் ரூ.30 கேஷ்பேக்!

எடுத்துக்காட்டிற்கு, Google Pay ஆப்பை பயன்படுத்தி உங்கள் நண்பர் ஒருவருக்கு பணம் செலுத்தும்போது, ​​உங்களுக்கு ரூ.30 கேஷ்பேக் கிடைக்கும். அதே சமயம் QR கோட்-ஐ பயன்படுத்தி பணம் செலுத்துவதன் மூலமும் ரூ.30-ஐ வெல்லலாம்.

இப்படியாக இந்த போட்டியானது மொத்தம் நான்கு சுற்றுகளை கொண்டிருக்கும்; அதன் கீழ் கிடைக்கும், கேஷ்பேக்கை பெற நீங்கள் செய்ய வேண்டிய பல செயல்பாடுகளும் இருக்கும்.

பலருக்கும் தெரியாத போன் செட்டிங்! இதை செஞ்சா போதும்; மொபைல் டேட்டா சீக்கிரம் தீராது!பலருக்கும் தெரியாத போன் செட்டிங்! இதை செஞ்சா போதும்; மொபைல் டேட்டா சீக்கிரம் தீராது!

இன்னொரு முக்கியமான விஷயம்!

இன்னொரு முக்கியமான விஷயம்!

அதேசமயம் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது.

ஏனென்றால், கூகுள் பே ஆப்பில் நீங்கள் செய்யும் செயல்பாடுகள் அனைத்துமே ரூ.200 என்கிற தீபாவளி பரிசு தொகைக்கானது என்பதை மறக்க வேண்டாம்!

அக்டோபர் 27 க்குள்!

அக்டோபர் 27 க்குள்!

கூகுள் இந்தியாவின் கூற்றுப்படி, வருகிற அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் மிகவும் உயரமான ஃப்ளோர்களை கட்டமைக்கும் முதல் 5 லட்சம் அணிகளுக்கு (அதாவது ஒரு அணி என்றால் - நீங்களும் உங்களின் நண்பரும்) ரூ.200 வரை சம்பாதிக்க முடியும்.

மேலும் இந்த போட்டியை நீங்கள் தனியாகவும் விளையாடலாம். ஆனால் அதன் கீழ் குறைந்த பரிசுத் தொகையை மட்டுமே உங்களால் வெல்ல முடியும். நீங்கள் ஒரு குழுவாக "வேலை செய்தால்" மட்டுமே ரூ.200 என்கிற பரிசுத் தொகையை வெல்ல முடியும்.

ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

கடந்த முறை ஸ்டிக்கர்களை சேர்க்க சொன்ன கூகுள்!

கடந்த முறை ஸ்டிக்கர்களை சேர்க்க சொன்ன கூகுள்!

இந்தியாவில் அறிமுகமான நாள் தொடங்கி - தீபாவளி பண்டிகை கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக - கூகுள் நிறுவனம் அதன் கூகுள் பே ஆப் வழியாக கேஷ்பேக் ஆபரை வழங்கி வருகிறது.

கடந்த முறை நடந்த போட்டிகள் ஆனது பல்வேறு தீபாவளி தீம்டு ஸ்டிக்கர்களை (Diwali-themed stickers) சேகரிப்பது போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. அதன் கீழ் கிடைக்கும் கேஷ்பேக்கை வெல்ல உங்களிடம் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஸ்டிக்கர்கள் இருக்க வேண்டியிருந்தது!

Best Mobiles in India

English summary
Build tallest floors with your friends before Oct 27 Win Rs 200 under Google Pay Diwali Offer 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X