Home
How to

BSNL கஸ்டர்மர்களுக்கு உண்மையான ஹேப்பி நியூ இயர்.. VoWiFi அறிமுகம்.. போன் Settings-ல் ON செய்வது எப்படி?

பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது புத்தாண்டு 2026 ஜனவரி 1 ஆம் தேதி அன்று, இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களுக்குமான வாய்ஸ் ஓவர் வைஃபை (BSNL VoWiFi) சேவையை நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

இந்த நடவடிக்கையின் மூலம், அரசுக்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆபரேட்டர், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற தனியார் நிறுவனங்கள் உடனான போட்டியை முடிக்கிவிட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் நீண்ட காலமாக வோவைஃபை அணுகலை வழங்கி வருகின்றன.

BSNL VoWiFi அறிமுகம்.. போன் Settings-ல் ON செய்வது எப்படி?

வோவைஃபை என்றால் என்ன? வாய்ஸ் ஓவர் வைஃபை என்கிற வோவைஃபை தொழில்நுட்பம் ஆனது டெலிகாம் சந்தாதாரர்கள் வைஃபை மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை மேற்கொள்ளவும், பெறவும் அனுமதிக்கிறது. இது சவாலான சூழல்களில் (அதாவது நெட்வொர்க் சரியாக கிடைக்காத அல்லது இல்லாத பகுதிகளில் அல்லது நேரங்களில்) மேம்பட்ட இணைப்பை வழங்குகிறது.

வைஃபை காலிங் என்றும் அழைக்கப்படும் வோவைஃபை சேவையானது, இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது. வோவைஃபை சேவையின் இந்த நாடு தழுவிய வெளியீடு ஆனது பிஎஸ்என்எல்-ன் நெட்வொர்க் நவீனமயமாக்கல் திட்டத்தில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.

குறிப்பாக மொபைல் கவரேஜ் குறைவாக உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில், இந்த வோவைஃபை சேவையானது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள் மற்றும் தொலைதூர இடங்கள் போன்ற பலவீனமான மொபைல் சிக்னல் உள்ள பகுதிகளிலும் கூட வோவைஃபை சேவையானது கனெக்ட்விட்டியை மேம்படுத்துகிறது.

இந்த தொழில்நுட்பம் வாய்ஸ் கால்கள் மற்றும் மெசேஜ்களை மேற்கொள்ளவும் பெறவும் பிஎஸ்என்எல்-ன் பாரத் ஃபைபர் மற்றும் பிற பிராட்பேண்ட் சேவைகள் போன்ற பிக்ஸடு வைஃபை இணைப்பை பயன்படுத்துகிறது. இது மொபைல் நெட்வொர்க்குகள் மற்றும் வைஃபை-க்கு இடையே பரிமாற்றங்களை ஆதரிக்கும் ஐஎம்எஸ் (IMS) அடிப்படையிலான சேவையாகும்.

பிஎஸ்என்எல்-ன் கூற்றுப்படி, எந்தவொரு மூன்றாம் தரப்பு ஆப்களின் தேவையும் இல்லாமல், சந்தாதாரரின் தற்போதைய மொபைல் நம்பர் மற்றும் டயலர் ஆப் மூலம் வோவைஃபை அழைப்புகள் செய்யப்படுகின்றன. இது நெட்வொர்க் நெரிசலை குறைக்கவும் உதவுகிறது என்றும் அதன் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் பிஎஸ்என்எல் கூறுகிறது.

பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வோவைஃபை காலிங் அம்சத்தை இயக்குவது எப்படி? பெரும்பாலான நவீன ஸ்மார்ட்போன்களில் வோவைஃபை சேவைக்கான ஆதரவு ஏற்கனவே உள்ளது. இந்த சேவையை பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் போன் செட்டிங்ஸ்க்கு (Phone Settings) சென்று வைஃபை காலிங் அம்சத்தை (Wi-Fi Calling Feature) இயக்கலாம்.

ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட சேவைக்கான ஆதரவு உள்ளதா என்பதை சரிபார்க்க மற்றும் கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை (BSNL customer service centre) பார்வையிடலாம் அல்லது பிஎஸ்என்எல் உதவி எண்ணிற்கு (BSNL helpline 18001503) அழைக்கலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி என்கிற வோடபோன் ஐடியா போன்ற முக்கிய (மற்றும் தனியார்) தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக வைஃபை காலிங் ஆதரவை வழங்கி வருகின்றன; இவைகளும் கூடுதல் கட்டணம் இல்லாமல் தான் இந்த சேவையை வழங்கி வருகின்றன

கடந்த அக்டோபரில் மேற்கு மற்றும் தெற்கு மண்டல வட்டங்களில் நிகழ்ந்த விரிவாக்கத்தின் அடிப்படையில் தான் - பிஎஸ்என்எல் வோவைஃபை சேவையின் நாடு தழுவிய வெளியீடு நடந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அன்று தொலைத்தொடர்பு ஆபரேட்டரின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் போது டாட் (DoT) செயலாளர் நீரஜ் மிட்டல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL VoWiFi WiFi Calling Service Now Available All Over India How to Enable in your Phone Settings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X