Jio, Airtel கதை முடிந்தது.. மாதம் ரூ.149 க்கு 300 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. மே 17 க்குள் ரீசார்ஜ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஆனது, அன்னையர் தினச் சலுகையில் மாதத்துக்கு ரூ.152 செலவில் 300 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கு 5 சதவீத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. மே 17 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே, இந்த சலுகை கிடைக்கும். மொத்தமாக 2 திட்டங்களில் அன்னையர் தினச் சலுகை கொடுக்கப்படுகிறது.
அன்னையர் தினச் சலுகையில் பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம் ஆகியவற்றுக்கு 5 சதவீத தள்ளுபடியை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுத்துள்ளது. பிஎஸ்என்என் வெப்சைட் (BSNL Website) மற்றும் பிஎஸ்என்எல் செல்ப் கேர் ஆப் (BSNL Selfcare App) வழியாக ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கொடுக்கப்படும்.

மே 10 ஆம் தேதியில் இருந்தே இந்த தள்ளுபடி கிடைக்கிறது. வருகிற மே 17ஆம் தேதி வரையில் மட்டுமே கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களில் 10 மாதம் மற்றும் அதற்கு மேல் வேலிடிட்டி கிடைக்கிறது. பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டத்தில் 300 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாத செலவு ரூ.149 மட்டுமே இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டத்தின் முக்கிய சலுகைகள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 300 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 30 நாட்களை கணக்கில் எடுத்து கொண்டாலும் 10 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு வெறும் ரூ.149 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது.
இதில் லோட்டல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் (Local, STD, Roaming Call) கிடைக்கும். 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு அனுப்பி கொள்ளலாம். மொத்தமாகவே 32 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த திட்டம் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை விட மலிவாக கிடைப்பதால், டேட்டா சலுகை மட்டும் குறைக்கப்பட்டு உள்ளது. 32 ஜிபிக்கு பிறகும் டேட்டா கிடைக்கும்.
ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கிடைக்கும். சிம் ஆக்டிவ் கிடைக்க விரும்புகிற கஸ்டமர்களுக்கு இதைவிட மலிவான விலைக்கு திட்டம் கிடைக்காது. அதே நேரத்தில் 5 சதவீத தள்ளுபடி கிடைப்பதால், மேலும் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 365 நாட்கள் வேலிடிட்டிக்கு பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தை பெற்று கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தின் முக்கிய சலுகைகள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். முந்தைய திட்டத்தை போல மொத்தமாக டேட்டா கிடைக்காது. தினசரிக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 730 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 2 ஜிபிக்கு பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
ஆனால், இதையும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளில் எந்த மாற்றமும் கிடையாது. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்களை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்திலும் 5 சதவீத தள்ளுபடி கொடுக்கப்படும். மே 17 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
எப்படி ரீசார்ஜ் செய்வது?
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ போர்டலுக்கு (https://bsnl.co.in/) செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில் இருக்கும் சேவைகள் (services) விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது, ப்ரீபெய்ட் திட்டங்களை கிளிக் செய்ய வேண்டும். பிறகு மாநிலம்/சர்க்கிளை சேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.
விவரங்களை கொடு விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதில் முதல் 5 திட்டங்களுக்குள் இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம் தோன்றும். இதில் திட்டங்களின் விவரங்களும் கொடுக்கப்பட்டு இருக்கும். இதை பார்த்துவிட்டு, அருகில் இருக்கும் ரீசார்ஜ் விருப்பத்தை கிளிக் செய்தால் போதும், பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications