Home
How to

புது BSNL SIM கார்டு ரூல்ஸ்.. இனி எல்லாம் இந்த QR Code தான்.. முக்கிய அறிவிப்பு.. என்ன மாறுகிறது?

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் - இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited ) ஆனது நுகர்வோருக்கான சிம் முன்பதிவு செயல்முறையை (SIM booking process) எளிதாக்கி உள்ளது.

தற்போது ​​நுகர்வோர்கள் சிம் கார்டு பெறுவதற்காக பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது / செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும், பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய முறையின் மூலம் அந்த நிலை மாறுகிறது. இது மிகவும் எளிமையானதாகவும், புதிய சிம் கார்டு பெறுவது பற்றி அதிகம் தெரியாத ஒருவரால் கூட எளிதாக ஒன்றை பெற முடியும்படியும் உள்ளது. எல்லாவற்றை விட முக்கியமாக இது அனைத்தும் பயனரின் மொபைல் போன் மூலமாகவே செய்யப்படுகிறது.

புது BSNL SIM கார்டு ரூல்ஸ்.. இனி எல்லாம் இந்த QR Code தான்!

பிஎஸ்என்எல்-ன் புதிய சிம் புக்கிங் செயல்முறை: பிஎஸ்என்எல் சிம் கார்டு இனி க்யூஆர் குறியீடு மூலமாக மட்டுமே பெற முடியும். மேலே உள்ள படத்தில் இருக்கும் க்யூஆர் கோட்-ஐ பாருங்கள், அதை ஸ்கேன் செய்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். சிம் கார்டு பெற நீங்கள் மேலே உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது வழியாக மட்டுமின்றி நீங்கள் sahaj.bsnl.co.in/skyc என்ற இணையதளத்திற்கும் செல்லலாம்.

மேற்குறிப்பிட்ட வலைத்தளம் தற்போது உத்தர பிரதேச கிழக்கு தொலைத்தொடர்பு வட்டத்தில் செயல்பாட்டில் உள்ளது. பிஎஸ்என்எல் இ-கேஒய்சி போர்டல் ஆனது மிகவும் எளிமையாக கேஒய்சி செய்ய உங்களுக்கு உதவும். தற்போது, ​​நீங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கடைக்கு சென்று விவரங்களை பூர்த்தி செய்து, நேரில் கேஒய்சி செய்த பின்னரே சிம் கார்டை பெற முடியும். ஆனால் இப்போது, ​​பிஎஸ்என்எல் இந்த செயல்முறையை மிகவும் எளிதாக்குகிறது. இருப்பினும், நீங்கள் நேரில் சென்று தான் சிம் கார்டை பெற வேண்டும்.

அரசுக்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் சிம் கார்டுகளை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்குவதில்லை. இதற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கிறது. சிம் கார்டுகள் ஒரு முக்கியமான சொத்து. அவை நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ளவும், உங்கள் டிஜிட்டல் அடையாளமாகவும் மாற உதவுகின்றன. விநியோகிக்கும்போது அவை தொலைந்து போனாலோ அல்லது தவறான நபரிடம் வழங்கப்பட்டாலோ, அவை தவறான பயன்பாட்டிற்கு உள்ளாகலாம்.

அதனால்தான், பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து சிம் கார்டைப் பெற, நீங்கள் உங்களுக்கு அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். பிஎஸ்என்எல்-ன் இந்த நடவடிக்கை சிஎன்ஏபி (CNAP) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

அறியாதோர்களுக்கு சிஎன்ஏபி என்பது காலர் நேம் பிரசன்டேஷன் (Caller Name Presentation) என்பதன் சுருக்கம் ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது - உங்களுடைய பிஎஸ்என்எல் நம்பருக்கு யார் போன் செய்கிறார்களோ, அவர்களுடைய பெயரை காட்சிப்படுத்தும் ஒரு அம்சம் ஆகும். இந்த வசதிக்கு கூடுதல் சந்தா கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை; முற்றிலும் இலவசமாக கிடைக்கும் சேவையாக இருக்கும்.

சிஎன்ஏபி என்பது டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) ஒரு முன்முயற்சியாகும், இது பயனர்கள் ஒரு அழைப்பை பெறும்போது அழைப்பவரின் பெயரை காண அனுமதிக்கிறது. இந்த அம்சம், அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு பயனர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் சந்தாதாரர்களுக்காக இந்த அம்சத்தை செயல்படுத்தியுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த பட்டியலில் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமும் இணைகிறது; கூடிய விரைவில் இந்த அம்சத்தை நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்த உள்ளதக கடந்த மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

Best Mobiles in India

English summary
BSNL New SIM Booking Process Announce What Changed and How to get one For you using QR Code
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X