கேபிள் TV, DTH கதை முடிந்தது.. ரூ.299 போதும்.. 500+ டிவி சேனல்கள்.. 25 எம்பிபிஎஸ் வேக டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் பார்த் ஃபைபர் (Bharat Fiber) திட்டங்களில் 500+ லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த சேனல்களுக்கு கேபிள் டிவி, டிடிஎச் போல தனியாக சந்தா செலுத்த வேண்டியது கிடையாது. ஐஎப்டிவி (IFTV) ஆக இருப்பதால், டிஷ் தேவையில்லை. ரூ.299 விலைக்கு கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் பார்த் ஃபைபர் சேவையின் கீழ் எப்டிடிஎச் (FTTH) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஃபைபர்-டு-தி-ஹோம் (Fiber to the home) திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக ஐஎப்டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் 500+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும்.

ப்ரீ-டு-ஏர் சேனல்களாக (Free-to-Air Channels) இருப்பதால், கேபிள் டிவி போல தனி கனெக்சன் தேவையில்லை. டிடிஎச் போல டிஷ் தேவையில்லை. இன்டர்நெட்டும் தேவையில்லை. ஃபைபர் இணைப்பு வழியாகவே 500+ லைன் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஃபைபர் டேட்டா, வாய்ஸ் கால்கள், லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் எப்டிடிஎச் ரூ.299 திட்ட விவரங்கள் (BSNL FTTH Rs 299 Plan Details): இந்த திட்டத்தை புதிதாக பெற விரும்பும் கஸ்டமர்கள் ரூ.1749 செலுத்தி 6 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம். ரூ.3,588 செலுத்தி 12 மாதங்களுக்கும் பெற்று கொள்ளலாம். ரூ.299 செலுத்தினால், ஒரு மாதத்துக்கு வேலிடிட்டி கிடைக்கும்.
பார்த் ஃபைபர் சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். இந்த எப்டிடிஎச் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 25 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். 20 ஜிபி வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 20 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படும்.
இதே ஃபைபர் திட்டத்தை வைத்து லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். இந்த டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், 500+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதேபோல பிஎஸ்என்எல் எப்டிடிஎச் ரூ.399 திட்டம், பிஎஸ்என்எல் எப்டிடிஎச் ரூ.449 திட்டம் உள்ளிட்டவை கம்மியான விலைக்கு கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.399 எப்டிடிஎச் திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா கிடைக்கும். 1000 ஜிபி வரையில் டேட்டாவை பயன்படுத்தலாம். பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். இதிலும் லோக்கல், எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். 500+ லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன.
பிஎஸ்என்எல் ரூ.449 எப்டிடிஎச் திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். 3300 ஜிபி டேட்டாவை இந்த வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். இதிலும் 500+ லைவ் டிவி சேனல்கள், வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 100 எம்பிபிஎஸ் வேகத்துக்கு பிஎஸ்என்எல் ரூ.599 எப்டிடிஎச் திட்டத்தை பெறலாம்.
பிஎஸ்என்எல் எப்டிடிஎச் ரூ.599 திட்ட விவரங்கள் (BSNL FTTH Rs 599 Plan Details): 100 எம்பிபிஎஸ் வேகத்திலான ஃபைபர் டேட்டாவை இந்த எப்டிடிஎச் திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இதே வேகத்தில் 4000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்களையும் செய்து கொள்ளலாம்.
500+ டிவி சேனல்கள் இந்த எப்டிடிஎச் திட்டத்துக்கும் கிடைக்கும். இந்த திட்டங்களுக்கு 1 மாதம் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். புதிய கஸ்டமர்களாக இருந்தால், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கும் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த நாட்கள் வரையிலும் 500+ டிவி சேனல்கள் கிடைக்கும். பிரீமியம் சேனல்களுக்கு கட்டணம் செலுத்தியும் பெற முடியும்.
எப்படி பெறுவது? பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்லவும். பாரத் ஃபைபர் விருப்பத்துக்கு செல்லவும். மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டி இருக்கும். இதை செய்துவிட்டால், திட்டங்கள், விலை மற்றும் அதில் கிடைக்கும் நன்மைகள் இருக்கும். ரூ.249 விலையில் இருந்து ஃபாரத் ஃபைபர் திட்டங்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications