தலைவன் திமிங்கலம் தானுங்கோ.. SIM கார்டு இல்லாமல் 5ஜி டேட்டா.. வெளுத்து கட்டும் BSNL-ன் 5G FWA சேவை.. எப்படி?
இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, இந்தியர்களுக்கு 5ஜி எப்டபுள்யூஏ (5G FWA) என்கிற 5ஜி ஃபிக்ஸட்-வயர்லெஸ் அக்சஸ் (5G fixed-wireless access) சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால், அந்நிறுவனம் இன்னும் இதை தீவிரமாக சந்தைப்படுத்தவில்லை.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்த சேவையை வழங்க பிஎஸ்என்எல் - ஒரு வித்தியாசமான தொழில்நுட்ப அடுக்கை பயன்படுத்துகிறது. அதாவது இது சிம் இல்லாமல் இயங்குகிறது.

பிஎஸ்என்எல் இதை பிஎஸ்என்எல் க்யூ-5ஜி (BSNL Q-5G) என்று அழைக்கிறது, மேலும் இதன் திட்டங்கள் மாதத்திற்கு ரூ.999 முதல் தொடங்குகின்றன.இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் வட்டாரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்து உள்ளது. இந்த சேவையைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் அதிவேக டேட்டா சேவைகளை (high-speed data services) பெறுவார்கள், ஆனால் வாய்ஸ் (Voice) அல்லது ரோமிங் (Roaming) சேவைகள் கிடைக்காது.
பயனர்களுக்கான பிஎஸ்என்எல் 5ஜி எப்டபுள்யூஏ சேவை: சிம் இல்லாமல் இது எப்படி இயங்குகிறது? பிஎஸ்என்எல் 5ஜி எப்டபுள்யூஏ என்பது நாட்டின் முதல் "சிம் இல்லாத எப்டபுள்யூஏ சேவை" ஆகும். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பாரம்பரிய செல்லுலார் அங்கீகாரத்தை சார்ந்து உள்ளன.
ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் (Airtel Xstream AirFiber) மூலம், பயனர்கள் ஒரு சிபிஇ (CPE) என்கிற வாடிக்கையாளர் வளாக உபகரணம் (Customer premises equipment) பெறுகிறார்கள், இதை ஆக்டிவேட் செய்வதற்கு ஒரு பிஸிக்கல் 5ஜி சிம் கார்டு தேவைப்படுகிறது. இருப்பினும், பிஎஸ்என்எல் 5ஜி எப்டபுள்யூஏ வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய தேவை எதுவும் இல்லை.
பிஎஸ்என்எல் நிறுவனமானது, டிவைஸிற்கு நேரடி (டி2டி) இணைப்பை செயல்படுத்தும் (direct-to-device connectivity) ஒரு தொழில்நுட்ப அடுக்கை பயன்படுத்துகிறது. பிஎஸ்என்எல்-இன் இந்த தொழில்நுட்ப அடுக்கின் வன்பொருள், டிவைஸ் அளவிலான அடையாளம் மற்றும் கிளவுட் ப்ரோவிஷனிங் ஆகியவற்றை பயன்படுத்தி, வாங்கிய உடனேயே நெட்வொர்க்குடன் தானாகவே தன்னை அங்கீகரித்து கொள்கிறது. இது, ரவுட்டருக்குள் ஒரு பிஸிக்கல் சிம் கார்டை தயாரித்தல், அனுப்புதல், செருகுதல் அல்லது செயல்படுத்துதல் போன்ற தேவைகளை முழுமையாக நீக்குகிறது.
பிஎஸ்என்எல் முன்னோட்ட விரிவாக்கம்: பிஎஸ்என்எல் வருகிற செப்டம்பர் 2025 க்குள் பெங்களூரு, பாண்டிச்சேரி, விசாகப்பட்டினம், புனே, குவாலியர் மற்றும் சண்டிகர் போன்ற பல நகரங்களில் பிஎஸ்என்எல் 5ஜி எப்டபுள்யூஏ சேவையை நேரலைக்கு கொண்டு வரும் என்று கூறியிருந்தது. அறிமுக திட்டங்கள் ஆனது 100 எம்பிபிஎஸ் திட்டத்திற்கு ரூ. 999 இல் இருந்தும், 300 எம்பிபிஎஸ் திட்டத்திற்கு ரூ. 1499 இல் இருந்தும் தொடங்குகின்றன.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த சேவை பிஎஸ்என்எல்-இன் 5ஜி எஸ்ஏ (5G SA) என்கிற 5ஜி ஸ்டேன்ட் அலோன் நெட்வொர்க்கின் (5G standalone network) மீது கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டு ஸ்டேக்கின் (indigenous stack) மீது கட்டமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சேவைக்கான நிறுவனங்களை பொறுத்தவரை, இதே 5ஜி எஸ்ஏ கோர் ஆனது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small, and Medium Enterprises - MSMEs) மற்றும் ஸ்மார்ட்-உற்பத்தி கிளஸ்டர்களுக்கான (smart-manufacturing clusters) நெட்வொர்க் ஸ்லைஸ்டு, ஸ்எல்ஏ-ஆதரவு இணைப்புகளை வழங்கும் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications