உடனே ட்ரை பண்ணுங்க.. உங்கள் குரலை பதிவு செய்து.. அதை WhatsApp ஸ்டேட்டஸ் ஆக வைப்பது எப்படி?
தினந்தோறும் புகைப்படங்களை அல்லது ஷார்ட் வீடியோக்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் (WhatsApp Status) ஆக வைத்து 'போர்' அடித்து விட்டதா? அடுத்தமுறை, உங்களுடைய சொந்த குரலில் "குட் மார்னிங்" சொல்லியோ அல்லது ஒரு கவிதையை வாசித்தோ அல்லது ஒரு பாட்டு பாடியோ.. அதை ஸ்டேட்டஸ் ஆக வையுங்களேன்!
ஒருவேளை உங்களுடைய சொந்த குரலை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக செட் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியதென்றால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏனென்றால் ஒரு வாய்ஸ் நோட்-ஐ (அதாவது உங்கள் குரலை) எப்படி ரெக்கார்ட் செய்து, அதை எப்படி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைப்பது என்பதை பற்றியே தொகுப்பே இது!

லேட்டஸ்ட் அப்டேட் வழியாக புதிய ஈமோஜி ரியாக்ஷன்ஸ் (Emoji Reactions) மற்றும் ப்ரைவேட் ஆடியன்ஸ் செலெக்டர் (Private Audience Selector) போன்ற புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கான வாய்ஸ் ஸ்டேட்டஸ் (Voice Status) அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் தான் உங்கள் குரலை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைக்க அனுமதிக்கிறது.
நேற்று வரை வாய்ஸ் மெசேஜ்.. இனிமேல் வாய்ஸ் ஸ்டேட்டஸ்: முன்னதாக, பெர்சனல் சாட் (Personal Chat) மற்றும் க்ரூப் சாட்களில் (Group Chat) மட்டுமே வாய்ஸ் மெசேஜ்களை ரெக்கார்ட் செய்து, ஷேர் செய்ய அனுமதித்த வாட்ஸ்அப், தற்போது அதை ஸ்டேட்டஸ் ஆக செட் செய்யவும் அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சமானது வீடியோ ஸ்டேட்டஸை போலவே 30 வினாடிகள் என்கிற வரம்பை (30 Seconds Limit) கொண்டுள்ளது.
அதாவது 30 வினாடிகள் வரையிலான வாய்ஸ் ரெக்கார்டிங்கை மட்டுமே உங்களால் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். ஒருவேளை மிகவும் நீளமான வாய்ஸ் ஸ்டேட்டஸ்-ஐ செட் செய்ய விரும்பினால் 30 நொடிகளுக்கு பிறகு "விட்ட இடத்தில் இருந்து" மறுபடியும் தொடங்கி, அடுத்தடுத்த வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை செட் செய்யலாம்!
வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ்-ஐ செட் செய்வது எப்படி? முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு (Latest Version) அப்டேட் செய்து விட்டீர்கள் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பின்னர் ஸ்டேட்டஸ் (Status) டேப்பிற்கு செல்ல இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்; அல்லது நேரடியாக ஸ்டேட்டஸ் டேப்-ஐ கிளிக் செய்யவும்.
இப்போது ஸ்க்ரீனின் கீழ் வலது மூலையில் உள்ள பேனா (Pen) ஐகானை கிளிக் செய்யவும். பின்னர் கீழ்தோன்றும் மைக்ரோஃபோன் (Microphone) ஐகானை லாங் பிரஸ் (Long Press) செய்து உங்கள் குரலை பதிவுசெய்யவும். பேசி முடித்ததும் அந்த ஐகானை 'ஹோல்ட்' (Hold) செய்வதை நிறுத்தவும். பின்னர் எல்லாம் சரியாக பதிவாகி உள்ளதா என்பதை ப்ரிவியூ (Preview) வழியாக சரிபார்க்கவும்.
கடைசியாக, நீங்கள் ரெக்கார்ட் செய்த வாய்ஸ் நோட்-ஐ வாய்ஸ் ஸ்டேட்டஸ் ஆக செட் செய்ய சென்ட் (Send) பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான். இப்போது உங்கள் வாட்ஸ்அப் வட்டத்தில் உள்ள அனைவராலும் உங்கள் வாய்ஸ் ஸ்டேட்டஸை பார்க்கவும் / கேட்கவும் முடியும்; அதற்கு ரிப்ளை மற்றும் ரியாக்ட் செய்யவும் முடியும்.


Click it and Unblock the Notifications








