PAYTM மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்., அதுவும் சலுகையோடு: எப்படி தெரியுமா?

|

ரயில் டிக்கெட்டை பேடிஎம் மூலம் இருக்கை உறுது செய்வது, ரயில் கால அட்டவணை பார்ப்பது போன்ற பல்வேறு அம்சங்களோடு முன்பதிவு செய்யலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ரயில் சேவை இயக்கம்

ரயில் சேவை இயக்கம்

கொரோனா தாக்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டு மாநிலங்களுக்கான ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளோடு ரயில் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரயில்கள் வரும் பயணிகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, விதிககளை பின்பற்றியே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையங்களில் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். ரயில் நிலையத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள்

டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள்

டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள், அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும், அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான டிஜிட்டல் பரிவர்த்தனை

ஏராளமான டிஜிட்டல் பரிவர்த்தனை

paytm என்பது இந்தியா முழுவதும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமெண்ட் தளமாகும். பேடிஎம் மூலம் ஆன்லைன் ரீசார்ஜ், மொபைல் பில் கட்டணம் என ஏராளமான டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரைப்பட டிக்கெட்டுகள், பயணச்சீட்டுகள் என முன்னதாகவே ஏணைய முன்பதிவு முறை பயனர்கள் பேடிஎம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு

ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு

தற்போது Paytm பயன்பாட்டில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தற்கான வழிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. Paytm பயன்பாட்டை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் இதில் உள்நுழைய தங்களது எண்ணை பதிவிட வேண்டும். அதோடு பாஸ்வேர்ட், ஓடிபி உள்ளீடு செய்ய வேண்டும்.

பிஎன்ஆர் நிலை அறிந்துக் கொள்ளலாம்

பிஎன்ஆர் நிலை அறிந்துக் கொள்ளலாம்

பயன்பாட்டின் மூலம் பிஎன்ஆர் நிலையை அறிந்துக் கொள்ளவும், ரயில் கால அட்டவணையையும் கண்டறிய முடியும். ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, ரயில் இருக்கை கிடைப்பது தொடர்பான விசாரணைக்கும் பேடிஎம் உதவுகிறது. அதேபோல் ரயில் டிக்கெட் விலைகளை அறிந்துக் கொள்ளவும் பயன்படுகிறது.

உங்க குழந்தைகளுக்கு ஒரு குட் நியூஸ்: ஜியோ வழங்கப்போகும் பிரத்யேக சலுகை!உங்க குழந்தைகளுக்கு ஒரு குட் நியூஸ்: ஜியோ வழங்கப்போகும் பிரத்யேக சலுகை!

புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம்

புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம்

பேடிஎம் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். https://paytm.com/train-tickets என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும். புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை தேர்ந்தெடுத்து பயணத் தேதியை குறிப்பிட வேண்டும். பின் தேடல் பயன்பாடை கிளிக் செய்ய வேண்டும்.

இருக்கை இருப்பை உறுதி செய்ய வேண்டும்

இருக்கை இருப்பை உறுதி செய்ய வேண்டும்

எந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து இருக்கை இருப்பை உறுதி செய்ய வேண்டும். இதில் தாங்கள் பயணிக்கும் ரயிலை தேர்ந்தெடுத்து இருக்கை கிடைப்பதை சரி பாரத்துக் கொள்ள வேண்டும். அதோடு இதில் தங்களுக்கு விருப்பமுள்ள இருக்கையையும் வகுப்பு மற்றும் தேதியை தேர்வு செய்ய வேண்டும்.

புக்கிங் தேர்வு கிளிக்

புக்கிங் தேர்வு கிளிக்

புக்கிங் தேர்வை கிளிக் செய்து ஐஆர்சிடி-க்குள் உள்நுழைந்து ஐடியை உள்ளிட வேண்டும். ஐஆர்சிடிசி ஐடி இல்லையென்றாலோ, பாஸ்வேர்ட் மறந்திருந்தாலோ அதற்கான தேர்வை கிளிக் செய்து உள்நுழையலாம்.

புக்கிங் ஆப்ஷன்

புக்கிங் ஆப்ஷன்

இவை அனைத்தும் முடிந்தவுடன் புக்கிங் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின் பணம் செலுத்துவதற்கானா தேர்வை கிளிக் செய்ய வேண்டும். இதில் டெபிட் கார்டோ கிரெடிட் கார்டோ அல்லது பேடிஎம் வேலட் பயன்படுத்தியோ பணத்தை செலுத்தலாம்.

கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்

கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்

இந்த தேர்வு அனைத்தும் முடிந்தவுடன் ஐஆர்சிடிசி வலைதளத்திற்கான கடவுச்சொல் மீண்டும் கேட்கப்படும். ஐஆர்சிடிசி கடவுச்சொல்லை இதில் பதிவிட வேண்டும். இது அனைத்தும் முடிந்துவடன் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான வழிமுறைகள் முடிந்து டிக்கெட் தங்களது மின்னஞ்சல் ஐடிக்கும் மொபைல் எண்ணிற்கும் வந்து சேரும்.

Best Mobiles in India

English summary
Booking Train Tickets Via PAYTM App: Here the Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X