Home
How to

டெலிட் ஆன புகைப்படங்களை மிட்டெடுப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனை ரீசெட் அல்லது உடைந்த நிலையில் புகைப்படம் அழிந்துவிட்டாலும் நாம் மீட்டு கொள்ளலாம்.

By Siva Lingam

சிலசமயம் நம்மையும் அறியாமல் நம்முடைய ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் புகைப்படங்களை டெலிட் செய்ய நேர்ந்திருக்கும். இந்த அனுபவம் பலருக்கு இருந்திருக்கும். இந்த சமயத்தில் நாம் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்திருப்போம். ஏனெனில் டெலிட் செய்யப்பட்ட புகைப்படம் முக்கியமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய டெக்னாலஜி உலகில் இதற்கெல்லாம் நாம் கவலை அடைய வேண்டிய அவசியம் இல்லை.

டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்களை மீண்டும் கொண்டு வர தற்போது பல வழிமுறைகள் உள்ளன. இந்த கட்டுரையில் டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்களை மீட்க சிறந்த சில வழிகளை நாம் பார்க்க போகிறோம். உங்கள் ஸ்மார்ட்போனை ரீசெட் அல்லது உடைந்த நிலையில் புகைப்படம் அழிந்துவிட்டாலும் நாம் மீட்டு கொள்ளலாம். இந்த வழிமுறைகள் அனைத்தும் மிக எளிமையானது. ஆண்ட்ராய்டு போனுக்கு அறிமுகமானவர்கள் கூட இந்த வழிகளை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

டெலிட் ஆன புகைப்படங்களை மிட்டெடுப்பது எப்படி?

கிளவுட் மூலம் புகைப்படங்களை மிட்டெடுப்பது எப்படி?
கிளவுட் மூலம் டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்களை மீட்க பல செயலிகள் உள்ளன. ஆனால் இந்த கிளவுட் சேவை மூலம் உங்கள் புகைப்படங்கள் போனை டர்ன் ஆன் செய்தாலே வந்துவிடும். உங்கள் கேலரியில் இருந்து டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் கிளவுட் செயலியில் இருந்து டெலிட் ஆகாது. உங்கள் கேலரியில் இருந்து டெலிட் செய்யப்பட்ட புகைப்படத்தை மீட்க, நீங்கள் கிளவுட் சென்று அதில் லாகின் செய்து உங்களுக்கு தேவையான புகைப்படத்தை கிளிக் செய்து 'சேவ் டு டிவைஸ் என்று கொடுத்தால் அந்த புகைப்படம் உங்கள் போனில் டவுன்லோடு ஆகிவிடும். கிளவுட் போட்டோக்களில் இருந்து ஒருவேளை டெலிட் செய்யப்பட்டிருந்தால் அந்த புகைப்படம் உங்கள் ரீசைக்கிள் பின்' இல் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் ரீசைக்கிள் பின்னிலும் ஒரு குறிப்பிட்ட கால அளவுதான் இருக்கும். அதற்குள் அந்த போட்டோவை எடுத்து கொள்ள வேண்டும். கூகுள் போட்டோஸ், மைக்ரோசாப்ட் ஒன் டிரைவ், டிராப் பாக்ஸ் ஆகியவை புகழ் பெற்ற கிளவுட் சேவைகள் ஆகும்

டெலிட் ஆன புகைப்படங்களை மிட்டெடுப்பது எப்படி?

எஸ்டி கார்டில் உள்ள புகைப்படங்களை மீட்பது எப்படி?
நாம் சிலசமயம் ஒரு புகைப்படத்தை சேவ் செய்யும்போது அதனை போன் மெமரியில் சேவ் செய்யாமல், எஸ்டி கார்டில் சேவ் செய்திருப்போம். இந்த நிலையில் டெலிட் செய்யப்பட்ட புகைப்படத்தை மீட்க முதலில் எஸ்டி கார்டை கம்ப்யூட்டருடன் கனெக்ட் செய்ய வேண்டும். அதன் பின்னர் ரிகவரி சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து அதன்பின்னர் இன்ஸ்டால் செய்ய வேண்டும். டெலிட் செய்யப்பட்ட புகைப்படத்தின் மீது இன்னொரு டேட்டா பதிவு செய்யாதவரையில் அந்த புகைப்படத்தை மீட்டெடுப்பது என்பது இந்த சாப்ட்வேர் மூலம் எளிதான விஷயம். இந்த வழியில் எஸ்டி கார்டில் இருந்து டெலிட் செய்யப்பட்ட புகைப்படத்தை மீட்டெடுக்கலாம். புகைப்படங்களை எஸ்டி கார்டில் சேமித்து வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். இதில் ஈஸ் யூஎஸ் ரிகவரி விஜார்ட் என்பது ரிகவரி சாப்ட்வேர்களில் புகழ்பெற்றது ஆகும்.
டெலிட் ஆன புகைப்படங்களை மிட்டெடுப்பது எப்படி?

டிக்ஸ்க் டிக்கரை பயன்படுத்துங்கள்
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் ஒன்று டிஸ்க் டிக்கர். டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செலவு இன்றி ரிகவர் செய்ய உதவும் செயலிகள் ஒன்று இந்த செயலி. முதலில் இந்த செயலியை டவுன்லோடு செய்யவும். முதலில் முழு அளவில் ஸ்கேன் செய்து அதன் பின்னர் இண்டர்னல் ஸ்டோரேஜில் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்யவும். எந்த டைப் ஃபைல் புகைப்படத்தை தேட வேண்டும் என்பதை முடிவு செய்து அதன்பின்னர் 'ஓகே' என்பதை க்ளிக் செய்யவும். உடனே உங்கள் போன் முழு அளவில் ஸ்கேன் செய்யப்படும். அதில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை கண்டுபிடிக்கவும், உங்களுக்கு தேவையான புகைப்படத்தை கண்டுபிடித்தவுடன் அதனை ரிகவர் செய்து கொள்ளவும்

புகைப்படங்களை இழப்பதை எப்படி தடுக்கலாம்?
முதலில் அவ்வப்போது பேக்கப் எடுத்து வைக்கும் பழக்கம் இருப்பதே நாம் புகைப்படம் மட்டுமின்றி எந்த ஒரு ஃபைல்களையும் தொலைக்காமல் இருக்க சிறந்த வழி ஆகும். இதற்கு மிக எளிய வழி கிளவுடுக்கு ஆட்டோ அப்லோடு கொடுத்துவிடுவதேஆகும். செட்டிங் சென்று அதில் உள்ள ஆட்டமெட்டிக் பேக்கப் வசதியை செட் செய்துவிட்டால் நீங்கள் எப்போதெல்லாம் வைபை நெட்வொர்க்கில் இருக்கின்றீர்களோ அப்போதெல்லாம் உங்கள் டேட்டாக்கள் ஆட்டொ அப்லோடு செய்யப்படும். கூகுள் போட்டோஸ் என்பது உங்கள் அளவில்லாத இடத்தை கொடுத்துள்ளது. அதனை பயன்படுத்தி உங்களுடைய போட்டோக்கள் எவ்வளவு இருந்தாலும் அதனை சேமித்து வைத்து கொள்ளலாம்.

இதேபோல் சிறந்த சேவையை தரும் கிளவுட் சேவைகளும் அதிகம் உள்ளது. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பாதுகாத்து கொள்ளலாம். வருமுன் காப்போம் என்பது நம்முடைய மூதாதையர்களின் தாரக மந்திரம். எனவே தொலைத்த பின்னர் செயலிகளை தேடி அலைவதற்கு பதில் நம்மிடம் உள்ள டேட்டாக்களை முறையாக பாதுகாத்து கொள்வோம்

Best Mobiles in India

English summary
Best ways to recover deleted photos on Android: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X