ஐயா குட்டி அம்பானி.. FREE-னு சொல்லிட்டு இப்படி ஒன்னு விடாம உருவிட்டீங்களே! மன உளைச்சலில் Jio பயனர்கள்! ஏன்?

|

முகேஷ் அம்பானி, தான் உருவாக்கிய ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) என்கிற சாம்பிராஜ்யத்தை தனது மகன் ஆன ஆகாஷ் அம்பானியிடம் (Akash Ambani) ஒப்படைத்துள்ளார் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்து இருக்கலாம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் இவருக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்புகளுக்கான பதவிக்காலம் ஆனது கடந்த ஜூன் 27, 2022 முதல் அடுத்த 5 ஆண்டுகள் நீடிக்க உள்ள நிலைப்பாட்டில்.. "ஐயா குட்டி அம்பானி.. இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படி ஒன்றையுமே விடாமல் உருவி விட்டீர்களே! என்று ஜியோ பயனர்கள் புலம்பும்படியான நிகழ்கள் நடந்துள்ளது!

ஜியோ (Jio) பயனர்கள் மட்டுமல்ல.. ஏர்டெல் (Airtel) பயனர்களும் கூட இதே மனா உளைச்சலில் தான் உள்ளனர்!

சந்தேகப்பட்டது போலவே நடந்துருச்சு!

சந்தேகப்பட்டது போலவே நடந்துருச்சு!

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் மட்டுமே 5ஜி சேவைகள் அணுக கிடைக்கிறது என்றாலும் கூட, அது முற்றிலும் இலவசமாக கிடைப்பதால், அந்தந்த நகரங்களில் உள்ள பலரும் ஏற்கனவே ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டன.

இந்நிலைப்பாட்டில் தான் - 5ஜி அறிமுகத்திற்கு முன்னதாகவே நமக்கெல்லாம் இருந்த ஒரு சந்தேகம், தற்போது உண்மை என்று நிரூபணம் ஆகி உள்ளது!

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

பிச்சிக்கிட்டு போவது ஸ்பீட் மட்டும் அல்ல!

பிச்சிக்கிட்டு போவது ஸ்பீட் மட்டும் அல்ல!

5ஜி அறிமுகத்திற்கு முன்னதாகவே, 5ஜி நெட்வொர்க் ஆனது 4ஜி நெட்வொர்க்கை விட மிகவும் வேகமாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆக 5ஜி-யின் கீழ் பயன்படுத்தப்படும் டேட்டாவின் அளவும் அதிகமாகவே இருக்கும் என்று நாமெல்லாம் சந்தேகப்பட்டோம் அல்லவா? தற்போது அந்த சந்தேகம் நிஜமாகி உள்ளது!

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தினசரி டேட்டா லிமிட் ஆனது மிகவும் வேகமாக தீர்ந்து விடுவதை கண்டறிந்துள்ளனர்.

போன் செட்டிங்ஸ்-ல் இதை 'ஆன்' பண்ணலனா.. அவ்ளோ தான்!

போன் செட்டிங்ஸ்-ல் இதை 'ஆன்' பண்ணலனா.. அவ்ளோ தான்!

5ஜி நெட்வொர்க்கின் கீழ் "காற்றில் பறப்பது போல" காலியாகும் மொபைல் டேட்டாவை காப்பாற்ற வேண்டும் என்றால்.. உங்களிடம் மூன்று வழிகள் மட்டுமே உள்ளது!

முதல் மற்றும் எளிமையான வழி - உங்களின் மொபைல் செட்டிங்ஸ்-ல் உள்ள டேட்டா சேவர் (Data Saver) ஆப்ஷனை ஆன் செய்வது தான். இதை செய்வதால், நீங்கள் உங்களுக்கான டேட்டா லிமிட்-ஐ மீறும் போதெல்லாம் அது குறித்த அலெர்ட் உங்களுக்கு கிடைக்கும். அதன் அடிப்படையில் நீங்கள் உடனே உஷார் ஆகிக்கொள்ள முடியும்!

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

மீதமுள்ள 2 வழிகள்.. என்னென்ன?

மீதமுள்ள 2 வழிகள்.. என்னென்ன?

5ஜி நெட்வொர்க்கின் கீழ் பொசுக்குன்னு காலி ஆகும் மொபைல் டேட்டாவை சேமிக்க உங்களுக்கு இருக்கும் இரண்டாவது வழி - பெரிய டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்வதே ஆகும். ஆம்! எக்கச்சக்கமான டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில், எந்த பயமும் இல்லாமல் நிம்மதியாக 5ஜி வேகத்தை அனுபவிக்க முடியும்!

மூன்றாவது வழி - பிராட்பேண்ட் சேவைக்கு மாறி விடுவதே ஆகும். பிராட்பேண்ட் சேவையின் (Broadband Service) கீழ் நிறைய டேட்டா நன்மைகள் கிடைக்கும் என்பதால் டேட்டா லிமிட் (Data Limit) தொடர்பான எந்த சிந்தனையும் இல்லாமல் உங்களால் தாராளமாக 5ஜி சேவைகளை பயன்படுத்த முடியும்!

சென்னை தவிர்த்து வேறு எங்கெல்லாம் ஜியோ 5ஜி, ஏர்டெல் 5ஜி கிடைக்கிறது?

சென்னை தவிர்த்து வேறு எங்கெல்லாம் ஜியோ 5ஜி, ஏர்டெல் 5ஜி கிடைக்கிறது?

ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) ஆனது தற்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை (Chennai) , குருகிராம், கவுகாத்தி, பானிபட், புனே, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 12 நகரங்களில் கிடைக்கிறது.

மறுகையில் உள்ள ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) ஆனது மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை, வாரணாசி, கொல்கத்தா, புனே, குருகிராம், நொய்டா, காசியாபாத், பெங்களூரு மற்றும் ஃபரிதாபாத் ஆகிய 12 நகரங்களில் அணுக கிடைக்கிறது!

Best Mobiles in India

English summary
Before Using 5G Data From Jio and Airtel, Turn On The Data Saver Option In Your Mobile Settings. Here is Why?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X