மின்சாரம் இல்லாத நேரத்தில் ஸ்மார்ட்போன்களை எப்படி சார்ஜ் செய்வது?

மின்சார தேவை இன்றி எப்படி உங்களின் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று பார்க்கலாம்.

|

அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்.

மின்சாரம் இல்லாத நேரத்தில் ஸ்மார்ட்போன்களை எப்படி சார்ஜ் செய்வது?

அந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின்தடை நேரத்தில் மொபைல் சார்ஜ் செய்வது எப்படி?

மின்தடை நேரத்தில் மொபைல் சார்ஜ் செய்வது எப்படி?

புயல் உருவானால் நிச்சயம் மின்தடை ஏற்பட கூடும் என்பது நாம் அறிந்த ஒன்றே, கடந்த வர்தா புயலின் போதும் மக்கள் மொபைல்களில் சார்ஜ் இல்லாமல் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தடுமாறியது நினைவிருக்கும். அப்படி ஒரு அவளை நிலையை நாம் மறுபடியும் சந்திக்க வேண்டாம் என்பதற்காக இந்த டிப்ஸ்களை உங்களுக்கு வழங்குகிறோம்.

பவர் பேங்க்

பவர் பேங்க்

மின்சார தேவை இன்றி எப்படி உங்களின் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று பார்க்கலாம். அனைவரிடத்திலும் பவர் பேங்க்கள் நிச்சயம் இருக்கும், அவற்றை இப்பொழுதே சார்ஜ் செய்து சேமிப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

 9v பேட்டரி

9v பேட்டரி

புயலுக்கு முன்னாள், அருகில் உள்ள கடைகளில் சில 9v பேட்டரிகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இதன் விலை வெறும் ரூ.20 என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றைஉங்கள் சார்ஜர் வயருடன் இனைத்துபயன்படுத்தி உங்களின் மொபைல் போன்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

லேப்டாப் சார்ஜர்

லேப்டாப் சார்ஜர்

உங்களிடம் உள்ள லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் யு.எஸ்.பிகளில் சார்ஜர் வயர்களை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

 பிலைட் மோடு அல்லது சுவிட்ச் ஆப் மோடு

பிலைட் மோடு அல்லது சுவிட்ச் ஆப் மோடு

உங்கள் ஸ்மார்ட்போனை பிலைட் மோடு அல்லது சுவிட்ச் ஆப் மோடிற்கு மாற்றம் செய்து சார்ஜ் செய்தால், சார்ஜிங் மிக வேகமாக முடியும் என்பது கூடுதல் டிப்ஸ்.

காரில் உள்ள பேட்டரி மூலம் சார்ஜிங்

காரில் உள்ள பேட்டரி மூலம் சார்ஜிங்

இக்கட்டான சூழ்நிலையில் இவை எதுவும் இன்றி மாட்டிக்கொண்டால் கவலைப்பட வேண்டாம், அருகில் உள்ள கார் அல்லது ஏதேனும் காரில் உள்ள பேட்டரி மூலம் சார்ஜிங் செய்துகொள்ளலாம். போர்ட்டபிள் கார் சார்ஜ்ர் கைவசம் இருந்தால் சார்ஜிங் செய்வது மிக எளிது.

சூரிய சக்தியை பயன்படுத்தி சார்ஜிங்

சூரிய சக்தியை பயன்படுத்தி சார்ஜிங்

சூரிய சக்தியை பயன்படுத்தி உங்களின் மொபைல் போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்திய சந்தையில் வெறும் ரூ.400 முதல் ரூ.4000 வரை சிறந்த சோலார் பவர் சார்ஜ்ர்கள் மற்றும் சோலார் பவர் பேங்க்கள் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இவற்றில் ஒன்றை பயன்படுத்தியும் உங்களின் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். முக்கிய குறிப்பு சோலார் பவர் சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்வது கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். குறைந்த நேரத்தில் குறைந்த அளவு சார்ஜிங் மட்டுமே செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
beat load shedding clever ways to charge your phone without electricity : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X