இரகசிய வீடியோ ரெக்கார்டிங் : உஷார் மக்களே.!
சிவப்பு நிறத்தில் இருக்கும் அப்ளிக்கேஷனை கிளின் செய்தால் விதிமுறைகள் மற்றும் உள்ளடக்கங்கள் இருக்கும், இவற்றில் இரகசிய வீடியோ எடுத்தால் நாங்கள் பொறுப்பல்ல என்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.
மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி வீடியோ ரெக்கார்டிங் செய்யப்படுகிறது என்பதை பற்றி எளிமையாக தெரிந்து கொள்ள முடியும். இரகசி வீடியோ ரெக்கார்டிங் செயலி பொறுத்தவரை கூகுள் பிளே ஸ்டோரில் மிக அதிமாக கிடைக்கிறது, இதை வைத்தே சிலர் ஸ்மார்ட்போன்களில் இரகசிய வீடியோவை ரெக்கார்டிங் செய்ய முயற்ச்சி செய்கின்றனர். இப்போது நாட்டில் பல இடங்களில் இரகசிய வீடியோ ரெக்கார்டிங் பிரச்சனை மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் பேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டர் ('Back ground video recorder" ) எனும் செயலி உள்ளது,இதை வைத்தே மிக அதிகமாக இரகசிய வீடியோ ரெக்கார்டிங் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி பல்வேறு விவரங்களைப் பற்றி பார்ப்போம்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் பேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டர் செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு,அவற்றில் இரண்டு அப்ளிக்கேஷன் இடம்பெறும், ஒன்று சிவப்பு நிறத்திலும், மற்றொன்று நீல நிறத்தில் வரும் என்பது குறிப்படத்தக்கது.

நீல நிறத்தில் உள்ளது இந்த வீடியோ ரெக்கார்டரின் செட்டிங்ஸ் பகுதியாகும், மற்றோன்று சிவப்பு நிறத்தில் வரும் அப்ளிக்கேஷனை கிளிக் செய்தால் மட்டும் போதும் உடனே வீடியோ ரெக்கார்டிங் செய்யும் திறமைக் கொண்டுள்ளது.
சிவப்பு நிறத்தில் இருக்கும் அப்ளிக்கேஷனை கிளின் செய்தால் விதிமுறைகள் மற்றும் உள்ளடக்கங்கள் இருக்கும், இவற்றில் இரகசிய வீடியோ எடுத்தால் நாங்கள் பொறுப்பல்ல என்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இவற்றில் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முன்புறம் மற்றும் பின்புற கேமராவை தேர்வு செய்யமுடியும். அதன்பின்பு குறிப்பிட்ட தேதி, நேரம் போன்ற வசதிகள் கொண்டு மிக எளிமையாக வீடியோ ரெக்கார்டிங செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டரின் முக்கிய அம்சம் என்னவென்றால் நீங்கள் ஸ்மார்ட்போனில் இரகசிய வீடியோ ரெக்கார்டிங் செய்யப்படும்போது எந்த ஒரு அப்ளிக்கேஷனையும் பயன்படுத்த முடியும், உதரணமாக பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளைப் பயன்படுத்திக்கொண்டே இரகசிய வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.

பேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டர் செயலியை வைத்துக்கொண்டு பல்வேறு பொது இடங்களில் மிக எளிமையாக வீடியோ செய்ய முடியும், எனவே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டர் செயலியைப் போன்று பல்வேறு இரகசிய வீடியோ ரெக்கார்டிங் செயலி இணையத்தில் அதிகமாக உள்ளது, இதை வைத்தே சிலர் தேவையில்லாத வீடியோவை எடுக்க முயற்சி செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications