இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

|

ஒருகாலத்தில் 8 - 10 நபர்களை கொண்ட ஒரு முழு குடும்பத்திற்குமே ஒரே ஒரு அடையாள அட்டை தான் இருக்கும்; அது தான் - ரேஷன் கார்டு!

ஆனால் இப்போது எல்லாமே தலைக்கீழாக மாறிவிட்டது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கூட ஆதார் கார்டு (Baal Aadhaar Card) வழங்கப்படுகிறது.

இப்படி அரசாங்கத்தினால் மிகவும் திட்டமிடப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியர்களின் டிஜிட்டல் அடையாள அட்டையாக உருமாறியுள்ள ஆதார்-ஐ மக்கள் மிகவும் 'அசால்ட்' ஆக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை!

யார், எங்கே, எப்போது கேட்டாலும்.. எடுத்து கொடுத்து விடுவது!

யார், எங்கே, எப்போது கேட்டாலும்.. எடுத்து கொடுத்து விடுவது!

உள்ளூர் ஜெராக்ஸ் கடை தொடங்கி.. வெளியூருக்கு சென்றால் நீங்கள் தாங்கும் ஹோட்டல்கள் வரை.. ஏன் கேட்கிறார்கள்? எதற்கு ஸ்கேன் செய்கிறார்கள்? என்று கொஞ்சம் கூட கவலைப்படாமல், யார் - எப்போது கேட்டாலும் ஆதார் அட்டையை எடுத்து நீட்டும் பழக்கம் உங்களிடம் இருந்தால், அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

ஆதார் அட்டையை "முறையாக" பயன்படுத்துவது, பகிர்வது, வாங்குவது எப்படி? எக்காரணத்தை கொண்டும் எப்படியெல்லாம் பயன்படுத்தி விட கூடாது, ஏமாந்து விட கூடாது? என்பதே அந்த எச்சரிக்கை!

தவறு நம்பர் 01: டவுன்லோட் செய்வதில்!

தவறு நம்பர் 01: டவுன்லோட் செய்வதில்!

நீங்கள் உங்களின் இ-ஆதாரை டவுன்லோட் செய்ய விரும்பினால், முடிந்த வரை உங்களின் சொந்த கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை பயன்படுத்துவதும்.

இன்டர்நெட் கஃபே அல்லது யாரோ ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டர் / லேப்டாப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஒருவேளை வேறு வழி இல்லாமல் அவ்வாறு செய்தாலும் கூட, பதிவிறக்கம் செய்யப்பட்ட இ-ஆதாரின் அனைத்து காப்பி-களையும் நிரந்தரமாக டெலிட் செய்ய மறக்காதீர்கள்.

Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?

தவறு நம்பர் 02:

தவறு நம்பர் 02: "கண்ட கண்ட" வெப்சைட்டுகளுக்கு செல்வது!

இ-ஆதாரை சரியான இடத்தில் டவுன்லோட் செய்தால் மட்டும் போதாது; அதை சரியான வெப்சைட் வழியாகவும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அறியாதோர்களுக்கு, ஆன்லைனில் இ-ஆதாரை டவுன்லோட் செய்வதாக கூறும் பல போலியான வெப்சைட்கள் உள்ளன; அதற்குள் சென்றால் உங்களின் ஆதார் தகவல்கள் திருடப்படலாம்.

ஆக எப்போதுமே, உங்களின் இ-ஆதார் அட்டையை அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யவும். அதாவது https://eaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar வெப்சைட்டில் இருந்து!

தவறு நம்பர் 03:

தவறு நம்பர் 03: "பூட்டு" போடாமல் இருப்பது!

உங்களின் ஆதார் பயோமெட்ரிக்ஸை வேறு யாரும் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வசதியை யுஐடிஏஐ வழங்குகிறது. அது - ஆதார் லாக் / அன்லாக் (Aadhaar Lock / Unlock) ஆகும்!

இந்த வசதியை mAadhaar ஆப் வழியாக பயன்படுத்தலாம் அல்லது பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்து பயன்படுத்தலாம்: https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock.

இந்த வசதியை பயன்படுத்த உங்களுக்கு விஐடி அதாவது விர்ச்சுவல் ஐடி (Virtual ID) கட்டாயம் என்பதையும் நினைவில் கொள்ளவும். VID என்பது உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட "தற்காலிகமான" 16 இலக்க 'ரேண்டம் நம்பர்' ஆகும்!

ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!

தவறு நம்பர் 04: ஹிஸ்டரி-யை செக் செய்யாமல் இருப்பது!

தவறு நம்பர் 04: ஹிஸ்டரி-யை செக் செய்யாமல் இருப்பது!

அடிக்கடி உங்களின் ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) சரிபார்க்கவும். இதன் கீழ் கடந்த 6 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட 50 ஆதார் பயன்பாட்டு வரலாற்றை நீங்கள் சரிபார்க்கலாம்.

அந்த பட்டியலில் நீங்கள் செய்யாத ஒரு அங்கீகாரத்தை கண்டறிந்தால், அல்லது ஏதேனும் சந்தேகத்திற்குரியதாக இருந்தால், 1947 என்கிற எண் வழியாக அல்லது help@uidai.gov.in வழியாக புகார் அளிக்கவும்.

தவறு நம்பர் 05: பாஸ்வேர்ட் புறக்கணிப்பு!

தவறு நம்பர் 05: பாஸ்வேர்ட் புறக்கணிப்பு!

பாஸ்வேர்டுகள் - ஒருவரின் தனிப்பட்ட தகவல்களுக்கான எந்தவொரு அங்கீகரிக்கப்படாத அணுகல்களுக்கும் எதிராக செயல்படும் முதல் மற்றும் முக்கிய பாதுகாப்பு ஆகும்.

அதை உங்கள் m-Aadhaar ஆப்பிலும் பயன்படுத்தவும். அதாவது ஆதார் விவரங்களை கொண்டிருக்கும் எம்-ஆதார் செயலிக்கு நான்கு இலக்க பாஸ்வேர்ட்-ஐ செட் செய்யவும்.

Google Pay, Paytm-இல் தெரியாமல் கூட Google Pay, Paytm-இல் தெரியாமல் கூட "இதை" செஞ்சிடாதீங்க.. SBI எச்சரிக்கை!

தவறு நம்பர் 06:

தவறு நம்பர் 06: "மாஸ்க்" போட்டால் ரிஸ்க் இல்லை!

இது ஆதார் பாதுகாப்பை பற்றி கவலைப்படும் அனைவருக்குமான ஒரு பரிந்துரை ஆகும். நீங்கள் உங்கள் ஆதார் நம்பரை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றால், நீங்கள் VID அல்லது Mask Aadhaar-ஐ பயன்படுத்தலாம்.

இது வழக்கமான ஆதாரை போலவே செல்லுபடியாகும் மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளவும் படுகிறது. உங்களுக்கான விஐடி / மாஸ்க் ஆதாரை பெற பின்வரும் லிங்க்கிற்குள் செல்லவும் - https://myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar

தவறு நம்பர் 07: போலியால் ஏமாறுவது!

தவறு நம்பர் 07: போலியால் ஏமாறுவது!

கொடுப்தில் மட்டும் அல்ல, ஆதார் அட்டையை ஒரு 'ஐடி' ஆக நீங்கள் பெறும் போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிலர் போலியான ஆதாரை உங்களிடம் கொடுத்து உங்களை ஏமாற்றி விடலாம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில், நீங்கள் வாங்கும் ஆதார்-ஐ சரிபார்க்க வேண்டும். இதை ஆன்லைன் / ஆஃப்லைன் வழியாக செய்யலாம்.

ஆஃப்லைனில் சரிபார்க்க, இ-ஆதார் அல்லது ஆதார் பிவிசி கார்டில் உள்ள QR கோட்-ஐ ஸ்கேன் செய்யவும். ஆன்லைனில் சரிபார்க்க, கீழ்வரும் லிங்க்-இல் குறிப்பிட்ட ஆதாரின் 12 இலக்க நம்பரை உள்ளிடவும்: https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar

WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!

தவறு நம்பர் 08: தவறான மொபைல் நம்பர்!

தவறு நம்பர் 08: தவறான மொபைல் நம்பர்!

நீங்கள் சரியான மொபைல் நம்பரை தான் அல்லது மின்னஞ்சல் முகவரியை தான் உங்கள் ஆதார் உடன் இணைத்துள்ளீர்களா? என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், UIDAI இணையதளத்தில் அதை சரிபார்க்கவும். ஏதேனும் தவறு நடந்து இருந்தால் அதை உடனே திருத்திக்கொள்ளவும்.

தவறு நம்பர் 09: அடிச்சு கேட்டாலும் கொடுக்க கூடாது!

தவறு நம்பர் 09: அடிச்சு கேட்டாலும் கொடுக்க கூடாது!

எக்காரணத்தை கொண்டும், ஆதார் தொடர்பாக உங்களுக்கு வரும் OTP மற்றும் தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்.

ஏனெனில் UIDAI ஆனது யாரிடம் இருந்தும் "உங்கள் ஆதார் OTP-ஐ கொடுங்கள்" என்று கேட்டு, அல்லது வேறு தகவல்களை கொடுங்கள் என்று கேட்டு அழைப்போ, மெஸேஜோ அல்லது மின்னஞ்சலோ அனுப்பவே அனுப்பாது.

எனவே எப்போதும் அலெர்ட் ஆக இருக்கவும்!

Best Mobiles in India

English summary
Avoid these Aadhaar Card Mistakes While Using it Security Tips From UIDAI

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X