EB புது ரூல்ஸ்.. 200 யூனிட்டுக்கு மேல் தானாக கட்டணம்.. மின்சார வாரியம் AutoPay செயல்முறை.. எப்படி பணம் போகும்?
டிஎன்பிடிசிஎல் (TNPDCL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tamil Nadu Generation and Distribution Corporation) ஆனது 200 யூனிட்கள் மின்சாரத்தை இலவசமாக கொடுத்தாலும், அதற்கு மேல் 1 யூனிட் பயன்படுத்தி இருந்தால், இதை மட்டும் உடனடியாக செய்து முடிக்க வைத்துவிட்டது.
இல்லையென்றால், இணைப்பு துண்டிப்பு, அபராதம் விதிப்பு, மீண்டும் இணைப்புக்கு கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு உள்ளாக நேரிடும். 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் நடுத்தர வீடுகளில் பெரும்பாலும், கட்டணம் வராது. 200 யூனிட்களுக்குள்ளேயே முடிந்துவிடும். இருப்பினும், 200 யூனிட்டுக்கு மேல் 1 யூனிட் பயன்படுத்தி இருந்தாலும், அதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

பில் வந்தவுடன் பிறகு செலுத்தி கொள்ளலாம் என்று விட்டுவிட்டால், அவகாசம் முடிந்த உடனேயே இணைப்பு துண்டிப்பு, அபராதம் விதிப்பு உள்ளிட்டவை ஏற்படும். ஆகவே, கடைசி தேதிக்குள் பில்லை செலுத்த ஆட்டோபே செயல்முறையை டிஎன்பிடிசிஎல் அமல் செய்துள்ளது. இது ஏற்கனவே கூகுள் பே (Google Pay), போன்பே பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் கிடைக்கிறது.
இப்போது, டிஎன்பிடிசிஎல் இணைதளம் வழியாகவும் கிடைக்கிறது. இதற்கு அக்கவுண்ட் விவரங்கள், ஆதார் விவரங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட வேண்டும். ஆனால், கூகுள் பே ஆப் வழியாக ஆட்டோபே செயல்முறையில் செலுத்த நுகர்வோர் எண் மட்டுமே போதும். ஆகவே, கூகுள் பே வழியாக ஆட்டோபே செயல்முறையில் மின்சார கட்டணம் எப்படி செலுத்துவது என்பதற்கான விவரங்கள் இதோ.
படி 1: கூகுள் பே ஆப்பை திறந்து, முகப்பு பக்கத்தில் இருக்கும் பில்கள் & ரீசார்ஜ்கள் (Bills & Recharges) விருப்பத்தில் தோன்றும் மின்சாரம் (Electricity) கிளிக் செய்யவும்.
படி 2: தேடுதல் விருப்பத்தில் தமிழ்நாடு மின்சாரம் டிஎன்பிடிசிஎல் (Tamil Nadu Power TNPDCL) என்று கொடுக்கவும். இதை கிளிக் செய்யவும்.
படி 3: நுகர்வோர் எண் (Consumer Number) கேட்கப்படும். இது மின் கட்டண ரசீது அல்லது மின் அட்டையில் இடம்பெற்றிருக்கும். இதை கொடுக்கவும்.
படி 4: இப்போது, நுகர்வோர் எண்ணுக்காக பில் 2 மாதங்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்படும். கீழே இருக்கும் பே விருப்பத்தை கொடுத்து, செலுத்தலாம்.
படி 5: ஆட்டோபே விருப்பத்தில் செலுத்த வேண்டுமானால், மேலே இருக்கும் ஏ (A) என்னும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 6: இதை செய்தால், மின்சார கட்டணம் அப்டேட் செய்யப்படும்போது, கடைசி தேதிக்கு முன்னதாகவே கட்டணம் செலுத்தப்படும்.
இப்படி கட்டணம் செலுத்த கூகுள் பேவில் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டில் போதுமான, பேலன்ஸ் இருக்க வேண்டும். இந்த ஆட்டோபே செயல்முறையை எப்போது வேண்டுமானாலும் கேன்சல் செய்து கொள்ளலாம். பில் செலுத்தப்படுவதற்கு முன்னதாக அறிவிப்பு செய்யப்படும். எவ்வளவு பில் என்பதும் இடம்பெற்றிருக்கும்.
200 யூனிட்களுக்கு உள்ளாக மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், புதிதாக எந்த பில்லும் உருவாக்கப்படாது. ஆகவே, 200 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் மட்டுமே புதிய பில் உருவாக்கப்படும். பிறகு ஆட்டோபே செயல்முறை வழியாக செலுத்தி கொள்ளப்படும். இந்த விருப்பம், இல்லாமலும் பில் செலுத்தலாம். ஆனால், சரியான தேதிக்குள் செலுத்த வேண்டும்.
200 யூனிட்டுக்கு மேல் 201 முதல் 400 யூனிட் வரையில் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.70 செலுத்த வேண்டும். 401 யூனிட் முதல் 500 யூனிட் வரையில் பயன்படுத்தினால், ஒரு யூனிட்டுக்கு ரூ.6.30 செலுத்த வேண்டும். 500 யூனிட்டுக்கு மேல் சென்றால், முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் கிடையாது. 101 யூனிட் முதல் 400 யூனிட் வரையில் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.70 செலுத்த வேண்டும். இப்படி கட்டணம் யூனிட்களுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.


Click it and Unblock the Notifications