ரூ.500 இல்ல.. ரூ.1000 இல்ல.. ATM-க்கு விட்டா போச்சு.. சிக்கிய பணம்.. உடனே இத பண்ணுங்க.. அப்புறம் சிக்கல் இல்ல!
ஏடிஎம் (ATM) மெஷினில் பணத்தை எடுக்கும்போது, பலருக்கு அந்த பணம் அப்படியே சிக்கி இருக்கிறது. இதனால், அவர்கள் என்ன செய்வது என்று தெரியமால், சிக்கிக்கொண்ட பணத்தை பிடித்து இழுப்பது, மறுபடியும் டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்வது, உள்ளிட்டவையை செய்வார்கள். இப்படி செய்தால் சிக்கிய பணத்தை பெற முடியாது. ஆகவே, உங்களது பணம் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
பேங்க் கஸ்டமர்கள் பெரும்பாலான நேரத்தில் ஏடிஎம் மூலமே பணத்தை எடுக்கிறார்கள். அப்படி எடுக்கும்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏடிஎம்மில் பணம் சிக்கிக்கொண்டால், நீங்கள் என்ன செய்தாலும் அந்த பணம் வெளியே வராது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல அந்த பணம் வெளியே வந்தால் மட்டுமே உங்களது அக்கவுண்ட்டில் டெபிட் செய்யப்படும்.

இருப்பினும், சில நேரங்களில் உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டுவிட்டால், அப்போதுதான் எதை செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம். பணம் சிக்கிக்கொண்டவுடன் முதலில் பதற்றம் அடையாமல் இருங்கள். இல்லையென்றால், உங்களால் நிதானமாக யோசிக்க முடியாது.
இது உங்களது தவறு கிடையாது. ஏடிஎம்மில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதேபோல சிக்கிக்கொண்ட பணத்தை வலுக்கட்டாயமாக வெளியே எடுக்க முயற்சிக்க வேண்டாம். அது பணத்தை கிழித்துவிடும். அதேபோல இது ஏடிஎம் விதிகளின்படி தண்டனைக்குரிய செயலாகும். ஆகவே, சில நிமிடங்கள் காத்திருந்து பாருங்கள்.
அப்படியும் பணம் வரவில்லை என்றால், உடனே உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டதா என்பதை பாருங்கள். பணம் வெளியே வரவில்லை என்றால், பெரும்பாலும் டெபிட் செய்யப்படாது. இருப்பினும், சில நேரங்களில் டெபிட் செய்யப்பட்டால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் அந்த பணம் உங்களது அக்கவுண்ட்டில் கிரெடிட் செய்யப்படும்.
இதற்கு முன்னதாக ஏடிஎம்மில் பணம் சிக்கிய பிறகு சில நிமிடங்கள் அங்கேயே கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால், பணம் எடுக்கப்பட்டதற்கான ரசீது வெளியே வர வாய்ப்புள்ளது. ஆகவே, அதை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதேபோல பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டதாக வரும் எஸ்எம்எஸ் மற்றும் பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் குறைப்பு ஆகியவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுங்கள்.
அல்லது போட்டோ எடுத்து வைத்து கொள்ளுங்கள். எப்படியும் 24 மணி நேரத்துக்கு அந்த பணம் உங்களது பேங்க் அக்கவுண்ட்டுக்கு வந்துவிடும். ஒருவேளை வரவில்லை என்றால், உங்களது பேங்க்கின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள வேண்டி இருக்கும். இப்படி செய்யும்போது, ஏடிஎம் இருக்கும் இடம், ஏடிஎம் சேவையை வழங்கும் பேங்க், தேதி, நேரம் மற்றும் பரிவர்த்தனை ஐடியை கொடுக்க வேண்டும்.
அதேபோல ஏடிஎம் ரசீது இருக்கும்பட்சத்தில் அதையும் கொடுக்கலாம். இல்லையென்றால், மற்ற விவரங்களை மட்டுமே கொடுங்கள். இந்த வாடிக்கையாளர் சேவை மையம் மூலமும் உங்களுக்கு பணம் திரும்ப வரவில்லை என்றால், நீங்கள் உங்களது பேங்குக்கு நேரடியாக சென்றோ அல்லது பேங்க் வெப்சைட் மூலமோ எழுத்துப்பூர்வ புகாரை கொடுக்கலாம்.
ஆகவே, உங்களிடம் சில ஆதாரங்கள் இருக்க வேண்டும். பணம் சிக்கிக்கொண்ட ஏடிஎம்மை உங்களது ஸ்மார்ட்போனின் போட்டோ எடுத்து கொள்ளுங்கள். அதேபோல ஏடிஎம் ஸ்கிரீனையும் போட்டோ எடுத்து கொள்ளுங்கள். இதையும் கூடுதல் ஆதாரங்களுக்கு கொடுக்கலாம். இப்படி செய்தால், 7 முதல் 10 வேலை நாட்களுக்குள் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்.
இதில் புகார் குறிப்பு எண்ணை (Complaint Reference Number) முக்கியமானதாகும். ஆகவே, அதை எடுத்து வைத்து கொள்ளுங்கள். இது எல்லாமலே 24 மணி நேரத்துக்கு பணம் வரவில்லை என்றால் மட்டுமே தேவைப்படும் நடவடிக்கைகளாக இருக்கிறது. பெரும்பாலும், இப்போதெல்லாமல், ஏடிஎம்எம் பணம் மாட்டிக்கொண்டால், உடனடியாக பேங்குக்கு தகவல் போகிறது. ஆகவே, பணம் திரும்ப கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








