Jio அம்பானியின் ஆல் டைம் அதிரடி.. மாதாந்திரம் ரூ.50.. மொத்தம் ரூ.600 க்கு 365 நாட்களுக்கு 5G பெறுவது எப்படி?
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த திட்டத்தை "ஜியோவின் ஆல் டைம் அதிரடி திட்டம்" என்றே கூறலாம் ஏனென்றால் இது மாதாந்திர வெறும் ரூ.50 செலவில் 1 ஆண்டு முழுவதுமாக, அதாவது 365 நாட்களுக்கும் 5ஜி-ஐ வழங்குகிறது.
அது ரூ.601 திட்டமாகும். மாதாந்திரம் ரூ.50 செலவில், அதாவது (ரூ.50 x 12 மாதங்கள்) மொத்தம் ரூ.600 செலவின் கீழ் கிடைக்கும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய 5ஜி எஸ்ஏ (5ஜி ஸ்டேன்ட்அலோன்) நெட்வொர்க்கிற்கான அணுகல் கிடைக்கும்.

இதுவொரு தனி திட்டம் அல்ல. ரூ.601 திட்டமானது ஒரு வவுச்சர் ஆகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஜியோ பயனர்கள் - டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் ஏதேனும் ஒரு ஜியோ திட்டத்தை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யும் போது ரூ.601 திட்டத்துடன் 5ஜி அப்கிரேட் வவுச்சர்கள் கிடைக்கும். இதன்கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.51 மதிப்புள்ள 12 அப்கிரேட் வவுச்சர்கள் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி ஆண்டு முழுவதும் தங்கள் மொபைலை 5ஜி நெட்வொர்க்குடன் கனெக்டெட் ஆக வைத்திருக்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி 1.5ஜிபி தினசரி டேட்டா திட்டங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களால் மட்டுமே ரூ.601 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அப்கிரேட் வவுச்சர்களை ரீடீம் செய்ய முடியும்.
அதாவது 1ஜிபி டெய்லி டேட்டா திட்டத்தில் உள்ள எந்தவொரு பயனரும் இதை பயன்படுத்த முடியாது. ஒருவேளை நீங்கள் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டத்தில் இருந்தால், நீங்கள் ஜியோவிலிருந்து தனித்தனியாக ரூ.51 திட்டத்தையும் வாங்கலாம். மேலும் ரூ.610 திட்டத்தின் கீழ் கிடைக்கும் வவுச்சரை பயனர்கள் தனக்கோ அல்லது அவரது நண்பர்களுக்கோ கூட வாங்கலாம் என்று ஜியோ கூறுகிறது
ஆனால் ரூ.51 மதிப்புள்ள தனிப்பட்ட வவுச்சர்களை மற்ற பயனர்களுக்கு மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இப்படியாக வாங்கும் வவுச்சரை மைஜியோ (MyJio) ஆப் வழியாக மற்ற பயனர்களுக் மாற்றலாம். இந்த ஆப் ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஆகிய இருவகை பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.
இந்த வவுச்சர்களை ரீடீம் செய்ய விரும்பும் பயனர்கள் மைஜியோ ஆப்பிற்கு சென்று, பின்னர் மை வவுச்சர் (My Voucher) பிரிவிற்கு சென்று அங்கிருந்து அவற்றை ரீடீம் செய்யலாம். இதேபோல ரூ.101 மற்றும் ரூ.151 மதிப்புள்ள 5ஜி அப்கிரேட் வவுச்சர்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டங்கள் எல்லாமே - ஜியோ நிறுவனம் தனது 5ஜி நெட்வொர்க்கை பணமாக்குவதற்கும், அதன் ஏஆர்பியு-வை (ARPU - ஒரு பயனருக்கு சராசரி வருவாய்) மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
ஜியோ தொடர்பான மற்ற முக்கிய செய்திகளை (லேட்டஸ்ட் அப்டேட்களை) பொறுத்தவரை, கூகுள் நிறுவனமும் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸும் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த புதிய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ஜியோ அன்லிமிடெட் 5ஜி பிளான்களை ரீசார்ஜ் செய்துள்ள கஸ்டமர்களுக்கு 18 மாதங்களுக்கான கூகுள் ஏஐ ப்ரோ திட்டம் (Google AI Pro plan) இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் கூற்றுப்படி, இந்த கூட்டாண்மையின் கீழ் இலவசமாக வழங்கப்படும் நன்மைகளை தனித்தனியாக வாங்கினால் சுமார் ரூ.35,100 செலவாகும். நினைவூட்டும் வண்ணம் ஜியோ 5ஜி அன்லிமிடெட் திட்டங்கள் (Jio Unlimited 5G Plans) ரூ.350 முதல் (சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.349 திட்டம் முதல்) தொடங்குகிறது.
இலவசமாக கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்தில் லேட்டஸ்ட் ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro Model) மாடலும் அடங்கும். முதலில் இந்த இலவச சலுகை ஆனது 18 முதல் 25 வயதுடைய ஜியோ பயனர்களுடன் தொடங்கும். பின்னர் நாடு முழுவதும் உள்ள அனைத்து தகுதியான ஜியோ வாடிக்கையாளர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவடையும்.


Click it and Unblock the Notifications








