உங்களுக்கு Airtel மற்றும் Jio 5G சிக்னல் கிடைக்குதா? உங்க போனில் உடனே இப்படி செக் செய்யுங்க.!

|

இந்தியாவில் 5ஜி (5G) சேவை அறிமுகமாகிவிட்டது. ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பாரதி ஏர்டெல் (Airtel) ஆகிய இரண்டு நிறுவனங்களும் அதன் 5ஜி சேவையை நாட்டின் சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளன.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜியை ஏற்கனவே 8 நகரங்களில் கடந்த வாரம் தொடங்கிவிட்டது. அதேபோல், இன்று முதல் ஜியோ தனது 5ஜி சேவையை 4 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் 5G கிடைக்கிறதா?

ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் 5G கிடைக்கிறதா?

இந்த செய்தி ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய செய்தியாக இருந்தாலும் கூட, இன்னும் பெரும்பாலான ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களிடம் 5ஜி சேவையை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன் சாதனங்கள் இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

காரணம், தற்போதுள்ள ​​​​எல்லா ஸ்மார்ட்போன்களும் ஏர்டெல் அல்லது ஜியோ 5ஜியை ஆதரிக்க முடியாது என்பதே உண்மை.

5ஜி பயன்படுத்த உங்களிடம் சரியான டிவைஸ் இருக்கிறதா?

5ஜி பயன்படுத்த உங்களிடம் சரியான டிவைஸ் இருக்கிறதா?

இதை ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் 5ஜி சேவையைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமையான வார்த்தைகளில், சொன்னால், தற்போது 2G, 3G அல்லது 4G ஸ்மார்ட்போனில் இருப்பவர்களால் அதிவேக 5G சேவையை அனுபவிக்க முடியாது.

5ஜி சேவையைப் பயன்படுத்த உங்களிடம் சரியான டிவைஸ் இருப்பது அவசியம்.

BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?

உங்கள் போன் 5ஜி சேவையை ஆதரிக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் போன் 5ஜி சேவையை ஆதரிக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

எனவே, உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜியை ஆதரிக்கிறதா? இல்லையா? என்பதை நீங்கள் உறுதியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் ஏர்டெல் அல்லது ஜியோ பயனர் என்றால், உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி சேவையை ஆதரிக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறியக் கீழே உள்ள செயல்முறைகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் போனில் உடனே இப்படி செக் செய்யுங்கள்.!

உங்கள் போனில் உடனே இப்படி செக் செய்யுங்கள்.!

  1. முதலில் உங்கள் மொபைலில் உள்ள Settings கிளிக் செய்யவும்.
  2. 'Wi-Fi & Network' என்ற விருப்பத்தை அடுத்தபடியாக கிளிக் செய்யவும்.
  3. பிறகு, 'SIM & Network' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  4. இதனைத் தொடர்ந்து, 'Preferred network type' என்ற விருப்பத்தின் கீழ், அனைத்து தொழில்நுட்பங்களின் பட்டியலையும் நீங்கள் பார்க்க முடியும்.
  5. உங்கள் ஃபோன் 5G சேவையை ஆதரித்தால், அது 2G/3G/4G/5G என பட்டியலிடப்படும்.
  6. இல்லையென்றால், 2G/3G/4G என்பதை மட்டுமே உங்களுடைய போன் காண்பிக்கும்.

இனி WhatsApp-ல் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது.! என்னப்பா சொல்றீங்க உண்மையாவா? ஏன்?இனி WhatsApp-ல் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது.! என்னப்பா சொல்றீங்க உண்மையாவா? ஏன்?

உங்கள் நகரம் 5G நகரமாக இருந்தால் இந்த விருப்பம் காண்பிக்கப்படும்.!

உங்கள் நகரம் 5G நகரமாக இருந்தால் இந்த விருப்பம் காண்பிக்கப்படும்.!

நீங்கள் ஏர்டெல் அல்லது ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இப்போது 5ஜி சேவைகளை வழங்கும் நகரத்தில் நீங்கள் வசிக்கிறீர்களா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

முதற்கட்டமாக, இந்த 5ஜி சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel மற்றும் Jio வழங்கும் அதிவேக இணையத்தை அனுபவிக்க நீங்கள் 2G/3G/4G/5G என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

5ஜி சேவையை பயன்படுத்த புது டிவைஸ் வாங்க வேண்டுமா?

5ஜி சேவையை பயன்படுத்த புது டிவைஸ் வாங்க வேண்டுமா?

மேற்கூறப்பட்ட, தகவல்களில் எதுவுமே உங்கள் போனில் காணப்படவில்லை என்றால், கட்டாயமாக நீங்கள் முதலில் ஒரு 5G ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும்.

இந்தியாவில் இப்போது பல முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகள், பல்வேறு விலைப் புள்ளிகளில் தரமான 5G ஸ்மார்ட்போன்களை வழங்குகின்றன.

உண்மையில், Realme மற்றும் Lava போன்ற பிராண்டுகள் இப்போது வெறும் ரூ.10,000 விலைக்கும் கீழ் 5G போனை அறிமுகம் செய்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

SBI ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா? இந்த புது விதி உண்மை தானா?SBI ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா? இந்த புது விதி உண்மை தானா?

முழு இந்தியாவிற்கும் எப்போது 5ஜி சேவை கிடைக்கும்?

முழு இந்தியாவிற்கும் எப்போது 5ஜி சேவை கிடைக்கும்?

கொல்கத்தா, டெல்லி, மும்பை மற்றும் வாரணாசி உள்ளிட்ட 4 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையை பீட் டிரைலாக இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.

டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி உள்ளிட்ட 8 நகரங்களில் ஏர்டெல் தனது 5ஜி சேவையை வழங்குகிறது.

ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி சமீபத்தில் 5G சேவைகளின் பான் இந்தியா வெளியீடு மார்ச் 2024-க்குள் நடக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். அதேசமயம், Jio 5G டிசம்பர் 2023-க்குள் இதை செய்யுமென்று தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Are You Getting Airtel And Jio 5G Signal? Check This On Your Phone Immediately

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X