மலிவான ஐபோன் சார்ஜர்கள் பாதுகாப்பானதா.? வெடிக்குமா.? சோதிப்பது எப்படி.?

மலிவான விலையில் நீங்கள் ஐபோன் சார்ஜர்கள் பாதுகாப்பானது தானா.? இல்லை அது வெடிக்குமா.? அதை சோதிப்பது எப்படி.?

|

நீங்கள் ஏதேனும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அல்லது ஏதேனும் ஆப்லைன் கடைகளில் மிக மலிவான விலைக்கு ஐபோன் சார்ஜர் வாங்கி பயன்படுத்துகிறீர்களா.? அல்லது அதிகாரப்பூர்வமற்ற பேக்கேஜிங்கில் கிடைத்த ஐபோன் சார்ஜரை பயன்படுத்துகிறீர்களா.? அது பாதுகாப்பற்றதாக இருக்க 99 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா.?

ஆப்பிள் நிறுவனம் ஒரு சில ஆண்டுகளாக மலிவான சார்ஜர்கள் சார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வருகிறது மற்றும் ஆப்பிள் சாயல் போன்ற தயாரிப்புகளை வாங்க வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மலிவான அல்லது போலி ஐபோன் சார்ஜர்கள் மூலம் உங்கள் ஐபோனுக்கு ஏதாவது கோளாறு நேர்ந்தால் அதுவும் ஒரு அதிகாரப்பூர்வமற்ற சார்ஜர் பயன்படுத்தி கோளாறு நேர்ந்தால் உங்கள் கருவி மீதான உத்தரவாதம் த்தை செல்லுபடியாகாது என்பது தான்.

உங்கள் சார்ஜர் பாதுகாப்பானதா என்பதை சோதிப்பது மற்றும் நீங்கள் வைத்திருப்பது ஒரு அதிகாரப்பூர்வமான ஐபோன் சார்ஜர் தான் என்பதை சோதிப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.!

அதிகாரப்பூர்வமான ஐபோன் சார்ஜர் தானா.?

அதிகாரப்பூர்வமான ஐபோன் சார்ஜர் தானா.?

இடைவெளி : சார்ஜர் விளிம்பு மற்றும் பின் விளிம்பு ஆகியவைகளுக்கு இடையே குறைந்தது 9.5எம்எம் இடைவெளி உள்ளதா என்பதை பார்க்கவும். இடைவெளி தூரம் என்று குறைவாக இருந்தால் ப்ளக் மற்றும் அன்ப்ளக் செய்யும் போதும் மின்சார அதிர்ச்சி ஏற்படும் ஒரு ஆபத்து இருக்கிறது

இயந்திர சேதம்

இயந்திர சேதம்

சார்ஜரை எளிதாக ப்ளக் செய்ய முடிகிறதா..? இல்லையெனில் பின் ஒரு தவறான அளவில் அல்லது தவறான தூரத்தில் இருக்கலாம். இது ஓவர்ஹீட்டிங் ஆபத்தை ஏற்படுத்தி இயந்திர சேதம் விளைவிக்கும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏமாற்று வேலை

ஏமாற்று வேலை

சார்ஜரில், சிஇ மார்க் உடனான உற்பத்தியாளரின் பிராண்ட் பெயர் அல்லது சின்னம், மாடல் மற்றும் பேட்ச் நம்பர் ஆகியவைகளை சரிபார்க்கவும். சிஇ மார்க் மட்டுமே பாதுகாப்புக்கு உத்தரவாதம் என நம்ப வேண்டாம் - அது ஐரோப்பிய சட்டத்தின்படி கருவி பாதுகாப்பானது தான் என்று உற்பத்தியாளரின் ஒரு அறிவிப்பு மட்டும் தான். அதில் எளிதாக ஏமாற்று வேலைகளை செய்ய முடியும்.

அவுட்புட் வோல்டேஜ் மற்றும் கரன்ட் ரேட்டிங்ஸ்

அவுட்புட் வோல்டேஜ் மற்றும் கரன்ட் ரேட்டிங்ஸ்

உங்கள் சார்ஜரில் அவுட்புட் வோல்டேஜ் மற்றும் கரன்ட் ரேட்டிங்ஸ் குறிக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிக்கவும். இந்த சோதனை மூலம் நீங்கள் சக்தி அலைகள் மற்றும் கருவி சூடாகும் பிரச்சினையை தவிர்க்கலாம்

வழிகாட்டல் மற்றும் ஆலோசனை

வழிகாட்டல் மற்றும் ஆலோசனை

சார்ஜர் ஆனது பயனர் அறிவுறுத்தல்கள் மற்றும் போதுமான எச்சரிக்கைகள் சார்ந்த கையேடு கொண்டு வரவில்லையா என்பதை சோதிக்க வேண்டும். சார்ஜரை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது, அடிப்படை மின்சார பாதுகாப்பு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை ஆகியவைகளை அது வழங்கும்.

உங்கள் சார்ஜர் பாதுகாப்பானதா..?

உங்கள் சார்ஜர் பாதுகாப்பானதா..?

ஓவர் சார்ஜ் : எப்போதுமே உங்கள் ஐபோனை ஓவர் சார்ஜ் செய்ய வேண்டாம். குறிப்பாக, இரவு முழுவதும் சார்ஜ் செய்வது கூடாது. ஒரு முறை முழு சார்ஜ் அடைந்ததும் கருவி - சார்ஜர் இணைப்பை துண்டிக்கவும்.

முதல் முறை கோளாறு

முதல் முறை கோளாறு

முதல் முறையாகவே உங்கள் சார்ஜர் கோளாறு செய்யும் போதே உடனடியாக அதை மாற்றி விடவும். மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம் என்ற முடிவை எடுக்காதீர்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உபயோகிக்க வேண்டாம்

உபயோகிக்க வேண்டாம்

சார்ஜர் இணைப்பில் இருக்கும் போது உங்கள் ஐபோனை உபயோகிக்க வேண்டாம். அது போதுமான சார்ஜ் ஆகி முடித்த பின்னர் சார்ஜ் இணைப்பை துண்டித்த பின்னர் பயன்பாடுகளை நிகழ்த்தவும்.

உலோக பாகங்கள்

உலோக பாகங்கள்

உங்கள் ஐபோன் ஒரு கணினி அல்லது லேப்டாப் உடன் இணைப்பில் இருந்தால் ஐபோனில் ரப்பர் கேஸ்களை பயன்படுத்தவும் நேரடியா உலோக பாகங்கள் தொடுவதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பிளாக்பெர்ரியின் கடைசி வாக்குறுதி - இதோ 'ஆண்ட்ராய்டு' ஆதாரம்.!

Best Mobiles in India

English summary
Are cheap iPhone chargers safe? How to check yours won’t explode. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X