அமேசான் பே மாத தவணை முறை சேவைக்கு பதிவு செய்து பயன்படுத்துவது எப்படி?
அமேசான் இந்தியா மொபைல் செயலியில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.
அமேசான் இந்தியா மொபைல் செயலியில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. அவ்வாறு அமேசான் பே இ.எம்.ஐ. வசதிக்கென புதிய பேனர் இடம்பெற்றிருக்கிறது. எனினும், இந்த அம்சம் தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் உடனடியாக கிரெடிட் பெற்று அவற்றை மாத தவணை முறையில் தங்களது டெபிட் கார்டு கொண்டு திரும்ப செலுத்தலாம்.

டெபிட் கார்டு மாத தவணை முறை வசதியை வழங்க அமேசான் நிறுவனம் கேப்பிட்டல் ஃபுளோட் எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. முதற்கட்டமாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சிட்டி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த வசதியை வழங்குகிறது.
பயனர்கள் 3 மாதங்களில் இருந்து அதிகபட்சம் 12 மாதங்கள் வரையிலான மாத தவணை முறை வசதியை பெற முடியும். இந்த அம்சம் விரைவில் மற்ற நிறுவன டெபிட் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

எப்படி பதிவு செய்ய வேண்டும்?
தேர்வு செய்யப்பட்ட பயனர்கள் அமேசான் பே மாத தவணை முறை வசதியை பயன்படுத்தக் கூடிய நிலையில், மற்றவர்கள் இதற்கான அழைப்பிதழை பெற காத்திருக்க வேண்டும். பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் தங்களது பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்க வேண்டும். பின் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும்.
உங்களுக்கான கடன் தொகை அளவை கடன் வழங்கும் நிறுவனம் நிர்ணயம் செய்யும், பின் பயனர்கள் அமேசானில் பொருட்களை வாங்கிட முடியும். இந்த சலுகையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டை லின்க் செய்து பணம் தானாக எடுத்துக் கொள்ளும் ஆப்ஷனை வழங்க வேண்டும்.

நிபந்தணை
புதிய சேவை கவர்ச்சிகரமானதாக தெரிந்தாலும், இதில் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தணைகள் உள்ளன. அமேசான் பே இ.எம்.ஐ. வசதியை கொண்டு ஒரே பொருளை மட்டுமே வாங்க வேண்டும். அந்த பொருளின் மதிப்பு குறைந்த பட்சம் ரூ.8000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் இந்த சலுகையுடன் எக்சேன்ஜ் சலுகையை பயன்படுத்த முடியாது.
லின்க் செய்யப்பட்ட கணக்கில் வாங்கும் பொருளுக்கு இணையான தொகை இருக்க வேண்டும். அமேசான் பே இ.எம்.ஐ. வசதியை பயன்படுத்த அமேசான் பே பேலென்ஸ் பேமென்ட் மோட் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுக்கான கடன் தொகை அளவு கடன் வழங்கும் நிறுவனத்தால் நிரணயம் செய்யப்படும், இதில் அமேசான் தலையீடு இருக்காது.


Click it and Unblock the Notifications