அட இது தெரியாம போச்சே! இனிமேல் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் கவலை இல்ல!

|

உங்களுக்கு வந்த ஒரு அழைப்பை, நீங்கள் எடுக்காமல் விட்டு விட்டால், அது மிஸ்டு கால் (Missed Call) ஆக மாறி விடும் மற்றும் அது தொடர்பான நோட்டிஃபிகேஷனும் (Notification) கூட உங்களுக்கு கிடைக்கும் அல்லவா?

இதெல்லாம் உங்கள் மொபைல் போன் 'ஆன்' ஆகி இருக்கும் போது மட்டுமே நடக்கும்! அப்படித்தானே?

ஒருவேளை.. ஆஃப் ஆகி இருந்தால்?

ஒருவேளை.. ஆஃப் ஆகி இருந்தால்?

உங்கள் மொபைல் போன் ஆனது ஸ்விட்ச் ஆஃப் (Switch Off) ஆன நேரத்திலோ, அல்லது அது ஃப்ளையிட் மோடில் (Flight Mode) இருக்கும் நேரத்திலோ.. உங்களுக்கு ஒரு அழைப்பு வந்து இருந்தால், அது தொடர்பான விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரியுமா?

தெரியாது என்றால்.. கவலைப்பட வேண்டாம்! ஸ்விட்ச் ஆஃப் செய்த நேரத்தில் உங்களுக்கு வந்த போன் கால்களை கண்டுபிடிப்பது எப்படி என்கிற படிப்படியான வழிமுறைகளை அறிய தொடர்ந்து படிக்கவும்!

இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!

எல்லா நேரங்களிலும்.. எல்லா கால்களையும் எடுக்க முடியாது!

எல்லா நேரங்களிலும்.. எல்லா கால்களையும் எடுக்க முடியாது!

சிலர் வேண்டுமென்றே தங்களுக்கு வரும் அழைப்புகளை எடுக்காமல் தவிர்ப்பார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், மிஸ்டு கால்கள் உருவாக பல வகையான காரணங்கள் உள்ளன!

- நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க் டவுன் ஆகி இருக்கலாம்
- நீங்கள் வாகனம் ஒட்டிக்கொண்டு இருக்கலாம்
- அல்லது மிகவும் இரைச்சலான பகுதியில் சென்றுகொண்டு இருக்கலாம்
- அவ்வளவு ஏன்? நீங்களே கூட மொபைலை சைலன்ட்டில் வைத்து இருக்கலாம்
- நீங்கள் ஒரு மீட்டிங்கில் அல்லது மருத்துவ ஆலோசனையில் இருக்கலாம்

இப்படியாக நீளும் சந்தர்ப்பங்களில், சூழ்நிலைகளில்.. உங்களுக்கு வரும் ஒரு அழைப்பை நீங்கள் தவற விடுவது - மிகவும் சகஜம்!

அதே போல..

அதே போல.. "அந்த" மிஸ்டு கால்களை கண்டுபிடிப்பதும் சகஜமே!

தத்தம் வாடிக்கையாளர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எவ்வளவு முக்கியமானது என்பதை ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் அறிந்திருக்கிறது. முக்கியமாக பார்தி ஏர்டெல்!

அதன் விளைவாகவே, ஏர்டெல் நிறுவனம், அதன் தேங்க்ஸ் ஆப்பில் (Thanks App) ஒரு புதிய செயல்பாட்டை சேர்த்துள்ளது. அது நீங்கள் "தவறவிட்ட" அழைப்புகள் தொடர்பான விவரங்களை உங்களுக்கு வழங்கும்!

எச்சரிக்கை! 5G சேவை வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் புது சிக்கல்!எச்சரிக்கை! 5G சேவை வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் புது சிக்கல்!

ஏர்டெல்-இன் இந்த Missed Call Alert அம்சம் எப்படி வேலை செய்யும்?

ஏர்டெல்-இன் இந்த Missed Call Alert அம்சம் எப்படி வேலை செய்யும்?

நீங்களொரு ஏர்டெல் ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்டு பயனர் என்றால், உங்கள் மொபைல் போன் ஆனது ஸ்விட்ச் ஆஃப் ஆகி விட்டது அல்லது அதில் நெட்வொர்க் இல்லை என்றால்.. அந்த நேரத்தில் உங்களுக்கு வந்த அழைப்புகளை பற்றிய விவரங்களை ஏர்டெல் நிறுவனத்தின் மிஸ்டு கால் அலெர்ட் என்கிற அம்சத்தின் வழியாக பெற முடியும்.

ஆனால், இதற்காக நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அதாவது உங்கள் மொபைலின் இன்டர்நெட் கனெக்ஷன் ஆனது "மீட்டமைக்கப்பட்டவுடன்" உங்களுக்கு யார் போன் செய்தார்கள் என்பதை உங்களால் பார்க்க முடியும்.

இந்த அம்சத்தை செயல்படுத்துவது எப்படி?

இந்த அம்சத்தை செயல்படுத்துவது எப்படி?

- முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ஆப், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் ஆகிய இரண்டின் வழியாகவும் அணுக கிடைக்கும்.

- குறிப்பிட்ட ஆப்பை இன்ஸ்டால் செய்த பின்னர், ரிஜிஸ்ட்ரேஷன் செயல்முறையின் ஒரு பகுதியாக, உங்கள் பெயரையும் மொபைல் நம்பரையும் உள்ளிட வேண்டும்.

உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?

இப்போது ஹோம் ஸ்க்ரீனில்...

இப்போது ஹோம் ஸ்க்ரீனில்...

ரிஜிஸ்ட்ரேஷன் செயல்முறையை முடித்த பின்னர், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பின் ஹோம் ஸ்க்ரீனில் "Missed Call Alerts" (மிஸ்டு கால் அலெர்ட்ஸ்) என்று லேபிளிடப்பட்ட ஒரு மெனு இருப்பதை காண்பீர்கள்

அதே மெனுவை நீங்கள் ஷார்ட்கட்ஸ் டேப் (Shortcuts Tab) வழியாகவும் அணுகலாம். இப்போது அதை கிளிக் செய்யவும்.

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

மேற்கண்ட மிஸ்டு கால் அலெர்ட்ஸ் என்கிற மெனுவை கிளிக் செய்ததுமே, ஒரு புதிய விண்டோவில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அம்சம் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீங்கள் காண்பீர்கள்.

கூடவே Turn on missed call alerts என்கிற விருப்பமும் இருக்கும். அதை எனேபிள் செய்யவும்; பின்னர் வழங்கப்பட்ட தகவலை படித்த பிறகு, Got it என்பதை கிளிக் செய்யவும்!

அவ்வளவு தான்!

அவ்வளவு தான்!

இப்போது, ஏர்டெல் வழங்கும் மிஸ்டு கால் அலெர்ட் செயல்பாட்டிற்காக நீங்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்து விட்டீர்கள்!

இனிமேல் உங்கள் மொபைல் போன் ஆஃப் ஆகி இருந்தாலும் சரி. அல்லது நெட்வொர்க் சிக்கலில் இருந்தாலும் சரி.. உங்களுக்கு வந்த அழைப்புகள் அனைத்துமே உங்கள் பார்வைக்கு கொண்டுவரப்படும்!

Photo Courtesy: Airtel, Flipkart, Wikipedia

Best Mobiles in India

English summary
Airtel Missed Call Alerts How to Activate Get Missed Call Details When Phone Was Switched Off

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X