Home
How to

ஏர்மிரர்: தொலைவிலிருந்தே உங்களுடைய ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் புதிய அப்ளிகேசன்.!

இந்நிறுவனத்தினர், இந்த ஏர்டிராய்டு அப்ளிகேசனைக் காட்டிலும் மேம்பட்ட புதிய அப்ளிகேசனை உருவாக்கியுள்ளனர்.

By Abu Bakker Fakkirmohamed

சான்ட் ஸ்டுடியோவால் (Sand Studio) உருவாக்கப்பட்ட ஏர்டிராய்டு (AirDroid) அப்ளிகேசன் உதவியுடன், தொலைவிலிருந்து, லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கணிப்பொறியிலிருந்து தேவையான ஃபைல்களை ஆன்ட்ராயடு ஸ்மார்ட் போனுக்கு மாற்ற முடியும். இந்த அப்ளிகேசனின் துணையுடன் ஸ்மார்ட் போனில் உள்ள அழைப்புகளின் விவரம், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை கணிப்பொறித் திரையிலும் பார்க்க முடியும். இந்நிறுவனத்தினர், இந்த ஏர்டிராய்டு அப்ளிகேசனைக் காட்டிலும் மேம்பட்ட புதிய அப்ளிகேசனை உருவாக்கியுள்ளனர். இதற்கு ஏர்மிரர் (AirMirror) எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் பயன்பாட்டுச் செயலியின் மூலம், உங்களுடைய ஸ்மார்ட் போனை தூரத்திலிருந்தே கணிப்பொறி அல்லது வேறொரு போன் மூலமாக இயக்க முடியும்.

ஏர்மிரர்: தொலைவிலிருந்தே  ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் அப்ளிகேசன்.!


அதுவும் இதுவும் ஒன்றா?!

ஏற்கனவே, ஏர்டிராய்டு அப்ளிகேசன் துணையுடன் மேக் (Mac) அல்லது விண்டோஸ் கணிப்பொறி வழியாக ஆன்ட்ராய்டு மொபைல் போனை இயக்கக் கூடிய வசதி இருந்தது. எனவே, ஏர்மிரர் ஒன்றும் புதியது அல்ல எனச் சிலர் விவாதிக்கின்றனர். ஏர்மிரர் செயலியின் மூலமாக ஒரு மொபைல் போனை இன்னொரு மொபைல் போன் மூலமாகக் கட்டுப்படுத்த முடியும். இதற்கான நடைமுறைகள் கொஞ்சம் சிக்கலானதாக இருந்தாலும், முறைப்படியாகச் செய்தால் எளிதில் வெற்றி கிடைக்கும். அதற்கான வழிமுறைகளை இனிக் காண்போம்.

ஏர்மிரர்: தொலைவிலிருந்தே  ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் அப்ளிகேசன்.!


ஏர்மிரர் செயலியை இயக்குவதற்கு ஏற்ப உங்களுடைய ஸ்மார்ட் போனைத் தயார் செய்தல்

படி 1:
முதலாவதாக airdroid.com/en/get.html. என்னும் தளத்திலிருந்து ஏர்மிரர் டெஸ்க்டாப் கிளையன்டை உங்களுடைய மேக் அல்லது விண்டோஸ் ஆபரேட் சிஸ்டத்துக்கு ஏற்பக் கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

படி 2:
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஏர்மிரர் மற்றும் ஏர்டிராய்டு அப்கேசனை உங்களுடைய ஆன்ட்ரா்டு ஸ்மார்ட் போனுக்குப் பதிவிறக்கம் செய்யவும். ஐபோனாக இருந்தால் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.

படி 3:
ஏற்கனவே உங்களுக்கு இங்கே கணக்கு இல்லையென்றால் புதியதாக பதிவு செய்து உள்ளே நுழையவும். ஒரே பெயரில், ஆன்ட்ராய்டு, ஐபோன், டெஸ்க்டாப் கிளையன்ட் ஆகிய அனைத்திலும் பதிவு செய்யலாம்.

படி 4:
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் Settings > About > Software என்னும் பகுதிக்குச் சென்று டெவலப்பர் மோடை இயக்கத்திற்குக் கொண்டு வரும் வகையில் பில்ட் நம்பர் மீது ஏழு முறை தட்டவும். (ஒவ்வொரு மொபைல் போனில் ஒவ்வொரு வகையான மெனு இருக்கலாம். ஆனால் எவ்வகையான போனாக இருந்தாலும் டெவலப்பர் மோடை இயக்க வேண்டும் என்றால் பில்ட் நம்பர் மீது தட்ட வேண்டும்)

அடுத்து, ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் உள்ள டெவலப்பர் ஆப்சனுக்குச் சென்று USB Debugging பகுதியை இயக்க நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இப்பொழுது திரையில் தோன்றும் அனுமதிக்கான பகுதியை கிளிக் செய்யவும்.

ஏர்மிரர்: தொலைவிலிருந்தே  ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் அப்ளிகேசன்.!


ஏர்மிரை பயன்படுத்துவது எப்படி?
படி 1:
மேற்கண்ட படிநிலைகளைப் பூா்த்தி செய்தபிறகு, டேடா கேபிளைப் பயன்படுத்தி ஆன்ட்ராய்டு போனை லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்புடன் இணைக்கவும். இப்பொழுது ஏர்மிரர் செயலியைத் திறக்கவும்.

படி 2:
திரையின் இடது புறத்தில் பைனாகுலர் வடிவில் ஒரு ஐகான் காணப்படும். அதனைக் கிளிக் செய்யவும். பிறகு, non-root tab பகுதியை கிளிக் செய்யவும். உங்களுடைய போனை கணிப்பொறியுடன் இணைத்துத் தேவையான அனுமதியைக் கொடுத்தவுடன் எல்லாம் தயாராகிவிடும்.

ஏர்மிரர்: தொலைவிலிருந்தே  ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் அப்ளிகேசன்.!


தொலைவிலிருந்தே இயக்கலாம்
இப்பொழுது, உங்களுடைய போனை ஏர்மிரர் செயலியின் மூலமாக தொலைவிலிருந்து இயக்க முடியும். கணிப்பொறியில் உள்ள ஏர்மிரர் செயலிக்குள் நுழைந்து ஸ்மார்ட் போனைக் கட்டுப்படுத்தலாம். ஏர்மிரர் செயலி பயன்பாட்டுக்குத் தயாரானதும் ஸ்மார்ட் போனுடைய திரைப்பகுதி உங்களுடைய கணிப்பொறியில் தோன்றும்.

ஐபோன் வழியாகவும் இயக்கலாம்
இதனைப் போலவே, ஐபோனைப் பயன்படுத்தியும் தொலைவிலிருந்தே ஆன்ட்ராய்டு போனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனட்ராய்டு போனின் திரையை ஐபோன் வழியாகப் பார்க்கலாம். டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பலாம், பதில் தகவல்களை அனுப்பலாம், கேமரா மூலமாகப் போட்டோ மற்றும் வீடியோவைப் பதிவு செய்யலாம், பாடல்கள் கேட்கலாம். ஆனால், சில கட்டுப்பாடுகளும் உண்டு.

ஏர்மிரர்: தொலைவிலிருந்தே  ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் அப்ளிகேசன்.!


சில தடைகளும் உண்டு
உதாராணமாக, நீங்கள் பிறருடன் போனில் தொடர்பு கொள்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதே போன்று, போனின் திரை, கைரேகைப் பதிவு அல்லது ரகசியக் குறியீட்டு எண்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் பயோமெட்ரிக் அங்கீகராம் இல்லாமல் உள்ளே நுழைய முடியாது. வேறு யாரும் எளிதில் நம்முடைய போனை கையாள முடியாத வகையில் இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தேவையானதுதான்.

இது போன்ற சிறிய தடைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்றபடி ஏர்மிரர் செயலியின் பயன்பாடு வரவவேற்கத் தக்க வகையில் உள்ளது என பயனாளர்கள் கருதுகின்றனர்.

Best Mobiles in India

English summary
AirMirror lets you control your Android smartphone using an iPhone or desktop, here’s how : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X