ரூ.3/-க்கு ஏர்செல் 3ஜி இண்டர்நெட் பேக் பெறுவது எப்படி.?
ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனத்தை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியை அதிரடியாய் துவங்கியுள்ளது ஏர்செல்.
ஓரளவிற்கு, "ரிலையன்ஸ் ஜியோ விளைவு" என்பது தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு சில தீவிர பிரச்சினையை உண்டாகியுள்ளது என்றே கூறலாம். ஜியோ அதன் தரவு விகிதங்கள் மற்றும் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்க, அதுவே பிற நெட்வொர்க் சேவை வழங்குநர்களுக்கு ஒரு பெரிய கவலையாகி வருகிறது.
அதன் காரணமாக பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இப்போது தங்கள் தரவு விகிதங்களை குறைத்துக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில் சேவை வழங்குநர்கள் போராடி ரிலையன்ஸ் ஜியோவின் சவாலை சந்தித்து தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல சலுகைகளையும் கொண்டு வருகிறார்கள்.
அதாவது ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து இப்பொழுது ரிலையன்ஸ் ஜியோ மீதான போரில் குதித்துள்ளது - ஏர்செல்.!

இணைய பேக்
மொபைல் இணைய நுகர்வை தூண்டிவிடும் நோக்கத்தில் ஏர்செல் அதன் வாடிக்கையாளர்களுக்கு மலிவான 3ஜி திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது. அதன் சமீபத்திய அற்புதமான இணைய பேக் ஆனது வெறும் ரூ.3/-க்கு ஒரு நாள் 3ஜி இண்டர்நெட்டை வழங்குகிறது.

ரூ.3/-க்கு
அவர்கள் மற்ற நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் இதே சேவைக்கு கூடுதல் விலை வாங்க ஏர்செல் வெறும் ரூ.3/-க்கு தன் பயனர்களுக்கு இச்சேவையை வழங்குகிறது. ஏர்செல் நிச்சயமாக அதன் வாடிக்கையாளர்களுக்கு பணத்திற்கான மதிப்பை சேவை மூலம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விதிமுறைகளும் நிபந்தனைகளும்
இந்த திட்டத்தை பெற வேண்டும் என்றால், நீங்கள் ஒரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். இந்த சலுகை போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு செல்லாது. ஏர்செல் 3 ரூபாய் 3ஜி இணைய திட்டம் 24 மணி நேரம் மட்டும் அதாவது ஒரு நாள் செயலில் இருக்கும். பேக் செயல்படுத்தப்படுகிறது என்ற நோட்டிபிகேஷனும் பயனர்களுக்கு கிடைக்கும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்த பேக்கை ஆக்டிவேட் செய்வது எப்படி.?
வழிமுறை #01 : உங்கள் ஏர்செல் ப்ரீ பெயிட் எண்ணில் இருந்து *122*557# என்ற யூஎஸ்எஸ்டி கோடிற்கு கால் செய்யவும்.

வழிமுறை #02
பின்னர் உங்கள் ஸ்க்ரீனில் பாப் அப் ஒன்று தோன்றும் அங்கு 1 என டைப் செய்து மறுபடியும் சென்ட் செய்யவும்

வழிமுறை #03
மெஸேஜிற்க்கு ரிப்ளை செய்த பின்னர் உங்களுக்கு மீண்டும் ஒரு பாப் அப் தோன்றும் அதில் பல வகையான ஆப்ஷன்கள் உங்களுக்கு கிடைக்கப்பெறும். மறுபடியும் நீங்கள் 1 என டைப் செய்து பதில் அனுப்ப வேண்டும்

வழிமுறை #04
அனைத்தும் செய்த பின்னர் பேக் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டதற்கான அறிவிப்பை நீங்கள் பெறுவீர்கள்.உங்கள் மெயின் பேலன்ஸில் இருந்து பேக் கட்டணம் கழிக்கப்படும். இப்போது நீங்கள் ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட 3ஜி ஏர்செல் இண்டர்நெட் சேவையை அனுபவிக்க முடியும்.

மேலும் படிக்க
ரூ.2000/- தாள்களில் ஜிபிஎஸ் சிப் : உண்மையா, பேய் கதையா.??


Click it and Unblock the Notifications