நம்ம ஊரு ஆதார் அடையாளம் எவ்வாளவோ பரவாயில்ல; சீனாக்காரன் இன்னும் மோசம்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வரும் ஸ்பை கிளாஸ் தொழில்நுட்பம், 6 மாதங்களுக்கு முன்பே சீனாவில் சன் கிளாஷ் என்ற பெயரில் வந்துவிட்டது.

By Prakash
|

இந்தியாவில் தற்சமயம் சிம் கார்டு முதல் மண்ணெண்ணெய் மானியம் வரை ஆதார் பயன்படுத்தப்படுகிறது, இதனால் பல்வேறு மக்கள் தனியுரிமை கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர், நாம் வெறும் ஆதார் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் சீனா வெறலெவல் தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதவாது(AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

நம்ம ஊரு ஆதார் அடையாளம் எவ்வாளவோ பரவாயில்ல; சீனாக்காரன் இன்னும் மோசம்.

அந்த புதிய தொழில்நுட்பம் என்வென்று பார்த்தால் முக அங்கீகார அடையாளம் (Facial recognition system) எனக் கூறப்படுகிறது, இந்த புதிய தொழில்நுட்பம் பொறுத்தவரை மக்களின் முகத்தை வைத்தே சீனாவில் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்க முடியும். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய தொழில்நுட்பம்.

முக அங்கீகார அடையாளம்:

முக அங்கீகார அடையாளம்:

சில முக அங்கீகார அடையாள வழிமுறைகள், முகத்தின் அடையாள சின்னங்கள் அல்லது அம்சங்கள் உதாரணமாக கண்கள் மூக்கு, தாடை அவற்றின் நிலை, அளவு மற்றும் வடிவம் மூலம் அடையாளம் காண முடியும். இந்த அம்சங்கள் பின்னர் பொருத்தமான அம்சங்கள் மற்ற படங்களில் தேட பயன்படுகின்றன. முக அடையாளம் காணுதல் என்பது ஒருவரை அடையாளம் கண்டு கொண்டு சரிபார்க்க பயன்பாடு ஆகும். இதனை டிஜிடல் உருவத்தின் மூலமோ அல்லது வீடியோ மூலமோ அறியலாம்.

 சிசிடிவி:

சிசிடிவி:

இப்போது சிசிடிவி அம்சம் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சீனாவில் most advance verson-பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களின் முகங்களையும் data base-வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம்:

தனியார் நிறுவனம்:

இந்த புதிய முக அங்கீகாரம் கேமரா (Facial recognition camera) தொழில்நுட்பத்திற்கு சீனாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் கோடிக்கணக்கு செலவில் தயார் செய்து, சீன அரசுக்கு கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

450 மில்லியன்:

450 மில்லியன்:

இந்த தனியார் நிறுவனத்தின் இலக்கு என்னவென்றால் 2020-க்குள் 450 மில்லியன் சிசிடிவி கேமராக்களை சீனா முழுவதும் வைப்பதே எனக்
கூறப்படுகிறது. மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டுவர சீன அரசு முயற்சிசெய்துவருகிறது.

 சன் கிளாஷ்:

சன் கிளாஷ்:

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வரும் ஸ்பை கிளாஸ் தொழில்நுட்பம், 6 மாதங்களுக்கு முன்பே சீனாவில் சன் கிளாஷ் என்ற பெயரில்
வந்துவிட்டது, இவற்றின் பயன்பாடுகள் பொறுத்தவரை ஒருவரைப் பார்த்தால் மட்டும் போதும், அவரின் முழுத்தகவல்களையும் தந்துவிடும் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சன் கிளாஷ் அந்நாட்டு காவல்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கம்:

நோக்கம்:

முக அங்கீகார அடையாள தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் குற்றவாளிகளை எளிமையாக கண்டுபிடிப்பதே ஆகும். மேலும் குற்றங்களை தடுப்பதே இவற்றின் முழு நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்கு மிகப் பெரிய பாதுகாப்பு உள்ளது என சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது.

How to Find a domain easily for your business (TAMIL)
எதிர்ப்பு:

எதிர்ப்பு:

சீன அரசு கொண்டுவரும் இந்த முக அங்கீகார அடையாள தொழில்நுட்பத்திற்கு அந்நாட்டில் உள்ள பல மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
AI surveillance cameras could soon identify faces in a crowd with 99 percent accuracy ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X