Home
How to

என்னா தல.. Nothing Phone 1-க்கு இப்படி ஒரு பெருமையை கொடுத்துடீங்க.. இனிமே ஓவர் சீன்-ஆ இருக்குமே!

"என்ன தலைவா.. இன்னும் இரண்டாவது ஸ்மார்ட்போனை கூட அறிமுகம் செய்யாத நத்திங் (Nothing) நிறுவனத்திற்கு இப்படி ஒரு பெருமையை கொடுத்து விட்டீர்கள்.. இனிமே கொஞ்சம் ஓவர் சீன்-ஆ இருக்குமே" என்று கேட்கும்படியாக சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் (Google) நிறுவனம் ஒரு காரியத்தை செய்துள்ளது.

அது என்னவென்றால், கூகுளின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷன் (Latest Android Version) ஆன ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ன் பீட்டா ப்ரோகிராமிற்கான (Android 14 beta program) ஆதரவு, கூகுளின் பிக்சல் போன்களுக்கு (Google Pixel Phones) பிறகு, நத்திங்கின் முதல் ஸ்மார்ட்போனான நத்திங் போன் 1-க்கு (Nothing Phone 1) கிடைக்கப்போகிறது.

என்னா தல.. Nothing Phone 1-க்கு இப்படி ஒரு பெருமையை கொடுத்துடீங்க!

பல நூறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிறுவனங்களே லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஓஎஸ் வெர்ஷனை தத்தம் போன்களுக்கு கொண்டு வர தாமதப்படுத்தும் நிலைப்பாட்டில், இன்னும் இரண்டாவது ஸ்மார்ட்போனை கூட அறிமுகம் செய்யாத நத்திங் நிறுவனத்தின் இந்த முன்னேற்றம் பலரையும் திகைப்படைய வைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 14 பீட்டாவை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ஒரு அலெர்ட்! கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 14 பீட்டாவானது இன்னமும் அதன் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. ஆகையால் இதை பயன்படுத்தும் போது உங்கள் நத்திங் போன் 1-ல் சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம் அல்லது சரியாக வேலை செய்யாமல் போகலாம்.

அதாவது நத்திங் போன் 1-ல் உள்ள ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) ஆனது ஆண்ட்ராய்டு 14 பீட்டா பில்டில் வேலை செய்யாமல் போகலாம். அதே போல ஃபேஸ் அன்லாக்கும் (Face unlock) கிடைக்காமல் போகலாம். மேலும் பேட்டரி ஷேரிங் (Battery Sharing) கிடைக்காது, கேமராக்களில் போர்ட்ரெய்ட் மோட் மற்றும் ஸ்லோ மோஷன் வேலை செய்யாது.

நத்திங் போன் 1-ல் ஆண்ட்ராய்டு 14 பீட்டாவை இன்ஸ்டால் (Install) செய்வது எப்படி? முதலில், ஆண்ட்ராய்டு 14 பீட்டா பேக்கேஜை நத்திங்-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும். உங்கள் போனின் ஆப்ரேட்டிங் சிஸ்டம் "அப் டூ டேட்டில்" (up to date) இருப்பதை உறுதிசெய்யவும். இதை சரிபார்க்க செட்டிங்ஸ் சென்று அபௌட் போன் (About phone) என்பதை கிளிக் செய்து சாஃப்ட்வேர் இன்ஃபோவை (Software info) செக் செய்யவும்.

ஒருவேளை உங்கள் போன் "ஒஎஸ் 1.5.4"க்கு அப்டேட் செய்யப்படவில்லை எனில், செட்டிங்ஸ் சென்று சிஸ்டம் என்பதை கிளிக் செய்து சிஸ்டம் அப்டேட் என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கே உங்களுக்கான லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். அதை இன்ஸ்டால் செய்த பிறகு, உங்கள் போனின் இன்டர்னல் ஸ்டோரேஜில் "ota" என்கிற புதிய ஃபோல்டரை (New Folder) உருவாக்கவும். பின்னர், சாஃப்ட்வேர் பேக்கேஜை "ota" ஃபோல்டருக்கு காப்பி (Copy) செய்யவும்.

இப்போது, ​​உங்கள் போனின் டயல் ஸ்கிரீனை அணுகி "*#*#682#*#*" என்ற கோட்-ஐ டைப் செய்யவும். "ota" ஃபோல்டரில் உள்ள எல்லா ஃபைல்களையும் பார்க்க, டிராப்-டவுன் பட்டனை (Drop Down Button) கிளிக் செய்யவும். அப்டேட் பேக்கேஜ் கிடைக்கவில்லை என்றால் "ப்ரவுஸ்" (Browse) என்பதைத் தேர்ந்தெடுத்து, "ota" என்பதை தேர்ந்தெடுத்து, பேக்கேஜை தேர்ந்தெடுக்கவும். ரெஃப்ரெஷ் (Refresh) செய்ய ரீலோட் என்பதை கிளிக் செய்யவும்.

அப்டேட்டை தொடங்க, "டைரக்ட்லி அப்ளை ஒடிஏ ஃப்ரம் செலெக்ஷன் (Directly apply OTA from selection) என்கிற பட்டனை கிளிக் செய்யவும். அப்டேட் ப்ராசஸ் முடிந்ததும், உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்யும்படி ஒரு பாப்-அப் தோன்றும். அதை செய்ய கான்ஃபிர்ம் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான்!

More from GizBot

Best Mobiles in India

English summary
After Google Pixel Phones Nothing Phone 1 gets Android 14 Beta How To Install Step by Step Guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X