Home
How to

10 ரூபாய் செலவு இல்லாம.. வீக் ஆன மொபைல் பேட்டரியை சரி செய்ய உதவும் 4 சூப்பர் டிப்ஸ்!

நாளுக்கு நாள் பலவீனமாகி கொண்டே போகும் உங்களுடைய மொபைல் பேட்டரியை (Mobile Battery), எந்த செலவும் செய்யாமல் பழைய நிலைக்கு கொண்டு வர விரும்புகிறீர்களா?

ஆம் என்றால், கீழ்வரும் எளிமையான 4 டிப்ஸ்களை தொடர்ச்சியான முறையில் ஃபாலோ செய்தால் போதும்!

ஒரு மொபைலை 300-வது முறையாக சார்ஜ் செய்யும் போது!

ஒரு மொபைலை 300-வது முறையாக சார்ஜ் செய்யும் போது!

உங்கள் ஸ்மார்ட்போனை குறைந்தபட்சம் 300 முறைக்கு மேல், அதிகபட்சம் 500 முறைக்கு மேல் சார்ஜ் செய்யப்படும்போது, உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரியானது அதன் அதிகபட்ச சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் சுழற்சியை (Charge / Discharge Cycles) எட்டி இருக்கும்.

மேற்குறிப்பிட்ட சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளை கடந்த பிறகு, அடுத்தடுத்த முறை உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது, உள்ளிருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி ஆனது மெல்ல மெல்ல பலவீனமாக தொடங்கும்.

அந்த வரம்பை மீறும் போது!

அந்த வரம்பை மீறும் போது!

300 - 500 சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகள் என்கிற வரம்பை மீறும் போது, உங்கள் ஸ்மார்ட்போனின் ​​பேட்டரி ஆனது சிதையத் தொடங்கும். இதன் விளைவாக பேட்டரியின் திறன் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே போகும்.

ஒருகட்டத்தில், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தாலும் கூட, அது நீண்ட நேரம் நீடிக்காமல் அடிக்கடி தீர்ந்து போகும்.

இந்த சிக்கலை தவிர்க்க விரும்பினால், 300 அல்லது 500-வது சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிக்கு பின்னர், உங்கள் மொபைலை சார்ஜ் போடும் போது கீழ் வரும் 4 தவறுகளில் ஒன்றைக்கூட செய்ய வேண்டாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்!

01. 20% மற்றும் 100% சார்ஜ்!

01. 20% மற்றும் 100% சார்ஜ்!

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லெவல் ஆனது 20%-ஐ குறைவான பிறகே, அதற்கு சார்ஜ் செய்ய வேண்டும். 30% அல்லது 45% எல்லாம் 'லோ பேட்டரி' (Low Battery) ஆகி விடாது. அதே போல 2% அல்லது 3% வரட்டும் என்று காத்திருந்து, அதன் பின்னர் சார்ஜ் செய்வதும் தவறு தான்!

அதை விட முக்கியமாக, சார்ஜ் போடும் போது உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லெவல் ஆனது 100% ஐ எட்டட்டும், அப்போது தான் அது முழுமையாக சார்ஜ் (Full Charge) ஆனதாக கணக்கு என்றும் காத்திருக்க வேண்டாம். 90% க்கு மேல் சென்றதுமே சார்ஜ் செய்வதை நிறுத்திக்கொள்ளவும்.

300 - 500 சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளுக்கு பின்னர், மேற்குறிப்பிட்ட பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால் உங்கள் பேட்டரி லைஃப் (Battery Life) பெரிய அளவில் பாதிக்கப்படாது!

02. ஒரிஜினல் VS ஃபேக்

02. ஒரிஜினல் VS ஃபேக்

தற்போது வரையிலாக, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுடன், அதற்கு ஏற்ற சார்ஜர்களை (Charger) அனுப்புகிறது. ஆனால் இந்த வழக்கம் கூடிய விரைவில் மாற உள்ளது.

அதாவது, வரும் நாட்களில் மொபைல் பிராண்டுகள் தத்தம் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை அனுப்புவதை நிறுத்த உள்ளனர் மற்றும் சார்ஜர்களை தனித்தனியாக விற்பனை செய்ய உள்ளனர்.

அந்த நேரத்திலும் சரி (தற்போதும் சரி) உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணக்கமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு சார்ஜரை தான் வாங்குகிறீர்கள் / பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று போலியான சார்ஜர்களை (Fake Chargers) பயன்படுத்த வேண்டாம். ஏற்கனவே பலவீனமாக உள்ள உங்களுடைய ஸ்மார்ட்போன் பேட்டரி ஆனது இன்னும் பலவீனமாகும்; மோசமாகும்!

03. ஓவர் நைட்டும், ஓவர் கான்பிடென்ஸும்!

03. ஓவர் நைட்டும், ஓவர் கான்பிடென்ஸும்!

உண்மை தான்! சமீப காலமாக வெளியாகும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆனது 100% என்கிற பேட்டரி லெவலை எட்டியதும் தனக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வதை நிறுத்தி விடுகின்றன.

ஆனால் ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும் சார்ஜர் ஆனது வேலை செய்து கொண்டே தான் இருக்கும்; அது உங்கள் பேட்டரியை பாதிக்காமல் போகலாம்; ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனை பாதிக்கலாம்.

எனவே ஒரு இரவு முழுவதும், ஸ்மார்ட்போனிற்கு சார்ஜ் செய்யும் (Overnight Charge) வழக்கம் / பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை உடனே நிறுத்திக்கொள்ளவும்; குறிப்பாக 300 - 500 சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளுக்கு பிறகு!

04. ஹை டெம்ப்ரேச்சர் VS லோ டெம்ப்ரேச்சர்!

04. ஹை டெம்ப்ரேச்சர் VS லோ டெம்ப்ரேச்சர்!

ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் லைஃப்டைம் மற்றும் அதன் சகிப்புத்தன்மைக்கு - அந்த ஸ்மார்ட்போனை சுற்றியுள்ள வெப்பநிலை மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது.

ஏனென்றால், அதிக வெப்பநிலையின் கீழ் வைக்கப்படும் போது உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் ​​பேட்டரியானது அதிக அழுத்தத்தின் கீழ் வைக்கப்படுகிறது மற்றும் குறைந்த வெப்பநிலையில் இருப்பதை விட மிகவும் வேகமான முறையில் அதன் திறனையும் (பேட்டரி லெவலை) இழக்கிறது!

எனவே, உங்கள் ஸ்மார்ட்போனை வெயிலில் வைப்பது; அடுப்பின் அருகே வைப்பது; அதிக நேரம் கார் டிக்கி அல்லது ஸ்கூட்டர் டிக்கியில் வைப்பது போன்றவைகளை தவிர்க்கவும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
After 300 To 500 Charge And Discharge Cycles Avoid This 4 Mistakes While Charging Your Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X