Aadhaar மையத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே ஆதாரில் மொபைல் எண் மற்றும் முகவரியை மாற்றுவது எப்படி?
நாட்டில் தற்போது அனைத்து முக்கிய சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அதுவும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் என அனைத்திற்கும் ஆதார் கார்டு தான் தேவைப்படுகிறது.
ஆகவே அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். அதுவும் முன்பு நாம் ஆதார் அப்டேட் செய்யவேண்டும் என்றால் ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் இனி ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் செயலியை (Aadhaar app) கொண்டுள்ள வந்துள்ளது. இதன் மூலம் இனி ஆதாரில் மொபைல் நம்பர், முகவரி போன்றவற்றை மாற்றம் செய்து கொள்ளலாம்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆதார் செயலியில் மொபைல் நம்பர், முகவரி போன்றவற்றை மாற்றம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஆதார் செயலியில் மொபைல் நம்பர் அப்டேட் செய்வது எப்படி?
1. முதலில் உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் வழியாக ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
2.அடுத்து உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து, பின்னர் உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும்.
3. அடுத்து ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் services என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் எண் புதுப்பிக்க
வேண்டுமா அல்லது முகவரியைப் புதுப்பிக்க வேண்டுமா என்ற ஆப்ஷன் தோன்றும்.
4. இப்போது நீங்கள் மொபைல் எண் அப்டேட் செய்ய வேண்டுமென்றால் அதற்கான பழைய நம்பரை உள்ளிட்டு ஒடிபி-ஐ பெற்று புதிய நம்பரை உள்ளிட வேண்டும்
5.ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும். அடுத்து இதற்கான கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். பிறகு, 15 நாட்களில் உங்கள் மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும்.
ஆதார் செயலியில் முகவரி மாற்றுவது எப்படி?
1.ஆதார் செயலியில் உங்கள் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் வைத்து உள்நுழையவும்.
2. அதன்பின்னர் ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் services என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அதில் update Aaadhaar Address
எனும் விருப்பம் தெரியும் அதை கிளிக் செய்யவும்.
3. அதன்பிறகு using Your Document என்பதை கிளிக் செய்தால், உங்களது ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும்,
அதனை உள்ளிட்டு, நீங்கள் எந்த சான்றிதழ்களை உள்ளிட போகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யவும். அடுத்து உங்கள் புதிய முகவரியை உள்ளிடவும்.

4. குறிப்பாக நீங்கள் கொடுக்க இருக்கும் சான்றிதழை pdf அல்லது ஸ்கேன் செய்து உள்ளிட வேண்டும். அதன்பின்பு, முகவரி மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.75 ஆக செலுத்த வேண்டும். அதுவும் யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்டு மூலம் ரூ.75 செலுத்த முடியும்.
5.அவ்வளவு தான் உங்களது ஆதாரில் முகவரி 15 நாட்களில் அப்டேட் ஆகிவிடும். உங்களது ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு இதற்கான அப்டேட் குறித்த மெசேஜ் வரும். இதன் மூலம் உங்கள் ஆதார் அப்டேட் ஆனதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








