Home
How to

ஆதார் கார்டு ஒரே போடு.. உடனே இதை பண்ணுங்க.. இனி ஈஸியா கிடைக்கும் புது காப்பி.. உங்க வாட்ஸ்அப் மட்டும் போதும்!

யுஐடிஏஐ (UIDAI) என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் கார்டு (Aadhaar Card) பெறும் சேவையில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் உங்களிடம் வாட்ஸ்அப் இருந்தால் மட்டுமே போதும், புது காப்பியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதை எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது புதிதாக அதில் மாற்றங்கள் செய்தாலோ டிஜிட்டல் காப்பி பெறுவதற்கு ஆதார் வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அதிலும் ஈஸியாக டவுன்லோட் செய்ய முடிந்தாலும், சரியான வெப்சைட்டுக்கு சென்று அதில் இருக்கும் டவுன்லோட் ஆப்ஷனுக்கு செல்வது என்பதை பலருக்கு சிரமமாகவே இருக்கும்.

ஆதார் கார்டு ஒரே போடு.. உடனே இதை பண்ணுங்க.. இனி ஈஸியா கிடைக்கும் புது!

இதை சரி செய்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது வாட்ஸ்அப் ஆதார் கார்டு டவுன்லோட் (WhatsApp Aadhaar Card Download) சேவையை கொண்டுவந்துள்ளது. இதில் நிமிடங்களில் ஆதார் கார்டின் புதிய காப்பியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதுவும் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலமே டிஜிட்டல் காப்பி கிடைப்பதால், எங்கேயும் தேடி சென்று பார்க்க வேண்டாம்.

யாருக்காவது ஷேர் செய்ய வேண்டுமானாலும், வாட்ஸ்அப் மூலமே அதை செய்து கொள்ள முடியும். இது ஒட்டுமொத்த வாட்ஸ்அப் யூசர்களுக்கும் கிடைக்கிறது. ஆனால், உங்களது மொபைல் நம்பர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது அந்த வாட்ஸ்அப் நம்பராக இல்லாவிட்டாலும், ஓடிபி நம்பர் செல்லும் மொபைல் நம்பர் உங்களிடம் இருக்க வேண்டும்.

அதேபோல இந்த சேவை டிஜிலாக்கர் (DigiLocker) மூலமாக கொடுக்கப்படுகிறது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டிஜிட்டல் ஸ்டோரேஜ் பிளாட்பார்மாக இருப்பதால், வாட்ஸ்அப் மூலம் டிஜிட்டல் காப்பி பெற்றுகொள்வது பாதுகாப்பானதாகவும், அங்கீகரிக்கப்பட்டதாகும் இருக்கிறது. இப்போது, எப்படி டவுன்லோட் செய்வது என்பதை பார்ப்போம்.

வாட்ஸ்அப் மூலம் இந்த சேவையை பெறுவதற்கு முதலில் +91-9013151515 என்னும் நம்பரை உங்களது கான்டாக்ட்டில் சேமித்து சேமித்து கொள்ளுங்கள். இது மைகவ் ஹெல்ப்டெஸ்க் (MyGov Helpdesk) நம்பராக இருக்கிறது. இதை சேமித்த பிறகு உங்களது வாட்ஸ்அப் ஆப்-ஐ ஓப்பன் செய்து கான்டாக்ட்களை ரெப்ஃரெஷ் செய்து கொள்ளுங்கள். இப்போது, அந்த நம்பருக்கான சாட்டுக்கு செல்லுங்கள்.

இந்த சாட்டில் ஹாய் (Hi) அல்லது நமஸ்தே (Namaste) என்று மெசேஜ் அனுப்புங்கள். உங்களுக்கு சில நிமிடங்களில் ஆதார் தொடர்பான பல்வேறு சேவைகளும் காண்பிக்கப்படும். இதில் டிஜிலாக்கர் ஆதார் டவுன்லோட் (DigiLocker Aadhaar Download) ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். இதையடுத்து சில விவரங்கள் கேட்கப்படும். இதில் உங்களது ஆதார் கார்டு நம்பர் கொடுக்க வேண்டி இருக்கும்.

ஆகவே, அதை பிழை இல்லாமல் டைப் செய்து கொடுங்கள். இதையடுத்து வழக்கம்போல ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி நம்பரை கேட்கும் இடத்தில் கொடுங்கள். இந்த ஓடிபி கன்பார்ம் செய்யப்பட்ட உடனேயே உங்களுக்கு ஆதார் கார்டு பிடிஎப் வடிவில் அனுப்பி வைக்கப்படும். இதை டவுன்லோட் செய்யலாம்.

டிஜிட்டல் காப்பியாக பயன்படுத்தி கொள்ளலாம். இது ஆதார் வெப்சைட்டுக்கு சென்று அதன் மூலம் டவுன்லோட் செய்வதைவிட குறைவாக நேரத்தில் சேவையை முடிக்கிறது. அதே நேரத்தில் புதிய வெப்சைட்டுக்கு சென்று டவுன்லோட் செய்ய தெரியாதவர்களுக்குகூட இந்த வாட்ஸ்அப் சேவை பயன்படுத்த எளிதாக இருக்கிறது. இதனால், ஆதார் காப்பி எளிதாகிவிட்டது.

Best Mobiles in India

English summary
Aadhaar Card Download on WhatsApp in Minutes Check Step-by-Step Simple Process
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X