கூகுள் டிரைவின் மறைக்கப்பட்ட ஒன்பது ரகசிய அம்சங்கள்.!

கூகுளின் டிரைவ் மென்பொருள் இல்லாத டிஜிட்டல் வாழ்க்கையை இன்று யாரும் கற்பனையிலும் நினைக்க முடியாது எனலாம்.

|

கூகுளின் டிரைவ் மென்பொருள் இல்லாத டிஜிட்டல் வாழ்க்கையை இன்று யாரும் கற்பனையிலும் நினைக்க முடியாது எனலாம்.

கூகுள் டிரைவின் மறைக்கப்பட்ட ஒன்பது ரகசிய அம்சங்கள்.!

அன்றாட பணிகளில் துவங்கி, முக்கிய விவரங்களை குறித்து வைப்பது என எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் கூகுள் டிரைவ் ஏதேனும் பணிகளுக்கு அவசியம் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. எனினும், கூகுள் டிரைவ் சேவையில் பலரும் வாடிக்கையாக காணப்படும் அம்சங்களை நாள்படி பயன்படுத்தி இருப்பர்.
கூகுள் டிரைவ் வழங்கும் மிகவும் பயனுள்ள, பலரும் அறிந்திராத அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்..

 ரீசென்ட் வியூ புகைப்படங்கள்

ரீசென்ட் வியூ புகைப்படங்கள்

கூகுள் டிரைவில் அலுவல் பணிகளை சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் பயன்படுத்த உட்காரும் போது, டிரைவின் முகப்பில் சமீபத்தில் பயன்படுத்தியவற்றை ரீசென்ட் வியூ டேப் மூலம் நமக்கு காண்பிக்கும். இதில் பெரும்பாலும் நமது புகைப்படங்கள் தான் நிரம்பியிருக்கும். சில சமயங்களில் நம் நேரத்தை அபகரிக்கும் இந்த ரீசென்ட் வியூ பட்டியலில் புகைப்படங்களை நீக்க முடியும் என உங்களுக்கு தெரியுமா?

கூகுள் டிரைவ் சர்ச் பாரில் -jpg என டைப் செய்தால், அனைத்து புகைப்படங்களும் எடுக்கப்பட்டு, நீங்கள் சமீபத்தில் உருவாக்கிய அல்லது எடிட் செய்த தரவுகளை பார்க்க முடியும். இந்த அம்சம் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியிலும் வேலை செய்யும்.

க்விக் அக்சஸ்

க்விக் அக்சஸ்

இந்த அம்சம் மைடிரைவ் ஆப்ஷனின் மேல் நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய அனைத்து ஃபைல்களையும் பார்க்க வழி செய்கிறது. டிரைவ் செட்டிங் ஆப்ஷனில் க்விக் அக்சஸ் பட்டனை பார்க்க முடியும், இதனை க்ளிக் செய்ததும் உங்களது சமீபத்திய தரவுகளை பார்க்க முடியும்.

சர்ச் ஃபில்ட்டர்

சர்ச் ஃபில்ட்டர்

கூகுள் டிரைவின் சர்ச் பார் மேல்புறமாக கீழ்பக்கத்தை குறிக்கும் அம்பு குறி இருக்கும். இதை க்ளிக் செய்ததும் உங்களின் சர்ச் பதில்களை ஃபில்ட்டர் செய்ய சில ஆப்ஷன்கள் தெரியும். ஆண்டுகளாக நீங்கள் டிரைவ் பயன்படுத்தியிருப்பின் இந்த அம்சம் உங்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியதாகும்.

 லின்க் அனுப்பலாம்

லின்க் அனுப்பலாம்

ஜிமெயிலின் கம்போஸ் விண்டோ அருகில் டிரைவ் ஐகான் காணப்படும். இதை க்ளிக் செய்தால் நீங்கள் டிரைவில் வைத்திருக்கும் தரவுகளையோ அல்லது லின்க் மட்டும் அனுப்ப முடியும். டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைட்ஸ் போன்றவைகளுக்கு நீங்கள் லின்க் வடிவில் அனுப்ப முடியும். பிடிஎஃப், வொர்டு டாக்ஸ், புகைப்படங்களை டிரைவ் லின்க் மூலம் அனுப்ப முடியும்.

க்ளியர் ஃபார்மேட்டிங்

க்ளியர் ஃபார்மேட்டிங்

டாக்-களில் நீங்கள் பேஸ்ட் செய்யும் தரவுகளை ஃபார்மேட் செய்ய சில ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. சாதாரண எழுத்துக்களை ஹைலைட் செய்து காண்பிக்க டூல்பார் பயன்படுத்தலாம். இதற்கு ஃபார்மேட் -- க்ளியர் ஃபார்மேட்டிங் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இவற்றை செய்ய கீபோர்டு ஷார்ட்கட்களையும் பயன்படுத்த முடியும்.

போன் பேக்கப்

போன் பேக்கப்

மொபைல் போனின் முக்கிய விவரங்களை டிரைவில் ஒரே க்ளிக் மூலம் பேக்கப் செய்ய வேண்டுமா? மொபைல் செயலியில் செட்டிங்ஸ் -- பேக்கப் -- சென்று உங்களுக்கு பேக்கப் செய்ய வேண்டியவற்றை: கான்டாக்ட்கள், காலென்டர் நிகழ்வுகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை க்ளிக் செய்யலாம்.

கம்ப்யூட்டரில் பேக்கப் செய்வது

கம்ப்யூட்டரில் பேக்கப் செய்வது

கூகுளின் பேக்கப் மற்றும் சின்க் ஆப் கொண்டு உங்களின் தரவுகளை மேக் அல்லது கம்ப்யூட்டரில் பேக்கப் செய்ய முடியும். இதேபோன்று கூகுள் டிரைவில் உள்ள தரவுகளை கம்ப்யூட்டரில் சின்க் செய்து கொண்டு மிக எளிமையாக ஆஃப்லைனில் இயக்க முடியும்.

மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களில் கமென்ட் செய்யலாம்

மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களில் கமென்ட் செய்யலாம்

சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களில் கமென்ட் செய்யும் வசதியை கூகுள் சேர்த்தது. இதன் மூலம் வொர்டு டாக் ஃபைல்களை கன்வெர்ட் செய்யாமல் நேரத்தை மிச்சம் செய்கிறது. இனி உங்களது தரவுகளை நேரடியாக ஓபன் செய்து அவற்றில் கமென்ட் செய்ய முடியும். இவ்வாறு செய்ய கமென்ட் பட்டனை க்ளிக் செய்தாலே போதும்.

கூகுள் டாக்ஸ் ஆஃப்லைன்

கூகுள் டாக்ஸ் ஆஃப்லைன்

ஆஃப்லைன் அக்சஸ்
இன்டர்நெட் வசதியில்லாத சமயங்களிலும் வேலை செய்ய வேண்டுமா? கூகுள் டிரைவ் உங்களது தரவுகளை ஆஃப்லைனில் பயன்படுத்த வழி செய்கிறது. இவ்வாறு செய்யும் முன் நீங்கள் ஆஃப்லைன் அக்சஸ் வசதியை செட்டப் செய்ய வேண்டும்.

கூகுள் டாக்ஸ் ஆஃப்லைன்
கூகுள் டிரைவில் சைன்-இன் செய்து செட்டிங்ஸ் -- ஆஃப்லைன் செக்ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் தரவுகளை ஆஃப்லைனில் எடிட் செய்ய முடியும்.

கூகுள் டிரைவ் தரவுகளை ஆஃப்லைனில் எடிட் செய்யும் முன் நீங்கள் உங்களின் கூகுள் அக்கவுன்ட்-இல் சைன்-இன் செய்து, சேவையை கூகுள் க்ரோமில் பயன்படுத்த வேண்டும்.

Best Mobiles in India

English summary
9 hidden features of Google Drive : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X