ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

By Siva
|

ஆப்பிள் ஐபோன் பயனாளிகள் அவ்வப்போது சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஸ்டோரேஜை எப்படி மெயிண்ட்டன் செய்வது என்பதுதான்.

ஏர்டெல் சூப்பர்சேவர் : வெறும் ரூ.49/-க்கு வரம்பற்ற அழைப்புகள் பெறுவது எப்படி.?

முக்கியமான ஒன்றை டவுண்ட்லோடு செய்யும்போது போன் ஸ்டோரேஜில் இடம் இல்லை என்று கூறி ஆப்பிள் ஐ போன் 6s உங்களை வெறுப்பேற்றும். உண்மையில் தேவையில்லாத பல ஃபைல்கள் உங்கள் போனின் இடத்தை அடைத்து கொள்வதால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

உங்கள் ஆப்பிள் ஐ போன் 6s-ல் முக்கியமான ஃபைல்களை அழிக்காமல், தேவையில்லாத ஃபைல்களை மட்டும் அழித்து ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்,

வெற்றிப் பாதையில் இரண்டாம் ஆண்டு தொடர்ந்து முன்னேரும் ஹானர்..

பழைய மெசேஜ்களை டெலிட் செய்யுங்கள்:

ஆப்பிள் ஐ போன் 6s ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்ய முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்கு வந்த தேவையில்லாத மெசேஜை டெலிட் செய்ய வேண்டும். டெக்ஸ் மெசேஜ்தானே, அது என்ன பெரிய இடத்தை அடைத்துவிட போகிறது என்று நினைக்க வேண்டும். மேலும் Settings > Messages > Keep Message சென்று 30 நாட்களுக்கும் மேல் உள்ள பழைய மெசேஜை டெலிட் செய்யும் ஆப்சனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

தேவையில்லாத ஆப்ஸ் எதுக்கு பாஸ்?

உங்களுக்கு அடிக்கடி பயன்படுகின்ற அல்லது கண்டிப்பாக தேவையுள்ள ஆப்ஸை மட்டும் வைத்து கொள்ளுங்கள். எப்போதாவது பயன்படுத்தும் அல்லது தேவையில்லாத ஆப்ஸை உடனே அன் இன்ஸ்டால் செய்யுங்கள். அதேபோல் தான் கேம்ஸ் ஆப்ஸ்-ம். ஒருசில தேவையில்லாத ஆப்ஸ்கள் அதிக இடத்தை பிடித்து கொண்டு நமக்கு தொல்லை கொடுக்கும்.

ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

மாற்று வழியை பயன்படுத்துங்கள்:

முக்கிய புகைப்படங்கள் உள்பட ஒருசில டாக்குமெண்ட்டுக்களை சேமிக்க என்றே கூகுள் ப்ளஸ் மற்றும் டிராப் பாக்ஸ் ஆகிய இலவச செயலி உள்ளது. அதை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம் உங்கள் டாக்குமெண்டும் பத்திரமாக இருக்கும். உங்கள் ஆப்பிள் ஐ போன் 6s-ன் ஸ்டோரேஜும் பத்திரமாக இருக்கும்.

ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

HDR போட்டோ தேவையா

உங்கள் ஆப்பிள் ஐ போன் 6s-ல் நீங்கள் HDR ஃபங்சனை பயன்படுத்துகிறீர்களா? அது நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை இரண்டு விதமாக காட்டும். ஒன்று லோ லைட் இமேஜ் மற்றொன்று ஷேடோ இமேஜ். இவற்றில் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் சேமித்து வைத்து கொண்டால் உங்கள் ஸ்டோரேஜ் தாராளமாக இருக்கும்.

ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

போட்டோ ஸ்ட்ரீமை டர்ன் ஆஃப் செய்யுங்கள்:

உங்கள் ஆப்பிள் ஐ போன் 6s-ல் போட்டோ ஸ்ட்ரீம் ஆன் -ல் இருந்தால் அது நீங்கள் எடுக்கும் 1000 புகைப்படங்கள் வரை சேமித்து வைக்கும். எனவே இந்த் ஆப்சனை தேவையில்லாத போது டர்ன் ஆப் செய்து கொண்டால் ஸ்டோரேஜை காப்பாற்றலாம். இதை டர்ன் ஆஃப் செய்ய Settings > Photos & Camera > Deselect My Photo Stream என்று செய்யவும்.

ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

பழைய Podcast-ஐ ரிமூவ் செய்யுங்கள்

ஆப்பிள் ஐ போன் 6s போன் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் Podcast என்றால் என்ன என்பது தெரியும். ஒவ்வொரு Podcast-ம் சுமார் 25எம்பி வரை இடத்தை அடைத்து கொள்ளும் என்பதால் தேவையில்லாத Podcast-ஐ டெலிட் செய்து விடுவது தான் நல்லது.

ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வரலாறு உங்களுக்கு தேவையா பாஸ்?

கம்ப்யூட்டர், லேப்டாப் போலவே ஐபோனிலும் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பிரெளசரும் ஹிஸ்ட்ரியை சேமித்து வைக்கும்,. இந்த ஹிஸ்ட்ரி நமக்கு சில சமயம் உதவும் என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ஹிஸ்ட்ரியை க்ளியர் செய்துவிடுவது போன் வேகமாக செயல்படவும், ஸ்டோரேஜை காப்பாற்றவும் உதவும். ஒருசிலர் தினமும் பிரெளசர் ஹிஸ்ட்ரியை டெலிட் செய்வது உண்டு.

ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

எக்ஸ்ட்ரா காப்பி தேவையில்லை

உங்கள் ஆப்பிள் ஐ போன் 6s போனில் போட்டோஷாப், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயன்படுத்தும்போது ஒரே போட்டோ பல விதங்களிலும், பல காப்பிகளிலும் சேவ் ஆவது உண்டு.

ஆப்பிள் ஐபோன் 6s பயனாளிகள் ஸ்டோரேஜை மெயிண்ட்டன் செய்வது எப்படி?

இதனை தவிர்த்து ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் சேவ் செய்ய பழகி வருவது நல்லது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
A list of tips and tricks to free up the storage space on an iPhone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X