கனவுல கூட "இதை" செஞ்சிடாதீங்க! வங்கி பயனர்களுக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

|

இந்திய அரசாங்கத்தின் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சியான செர்ட்-இன் (Cert-In) ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை - அனைத்து வகையான வங்கி பயனர்களுக்குமானது, அதே சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை (Android Smartphone) பயன்படுத்தும் அனைவருக்குமானதும் கூட!

அப்படி என்ன எச்சரிக்கை?

அப்படி என்ன எச்சரிக்கை?

வங்கி பயனர்களின் யூசர் நேம் (User Name) மற்றும் பாஸ்வேர்ட்டை Password) 'கீலாக்கிங்; மூலம் திருடும் ஒரு வைரஸ் ஆண்ட்ராய்டில் கண்டுபிடிப்பட்டுள்ளது. அது சோவா (SOVA) என்று அழைக்கப்படும் ஒரு ஆண்ட்ராய்டு ட்ரோஜன் (வைரஸ்) ஆகும்!

முன்னதாக இந்த சோவா வைரஸ் ஆனது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள மக்களிடம் தான் தன் "கைவரிசையை" காட்டியது!

மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!

இந்தியர்கள் மீது குறி!

இந்தியர்கள் மீது குறி!

வங்கி பயனர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழும் சோவா வைரஸ் ஆனது, கடந்த ஜூலை 2022-இல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டது.

போலியான முறையில், மற்ற பிரபலமான மொபைல் ஆப்களின் லோகோவிற்கு பின்னால் "ஒளிந்து இருக்கும்" திறன் கொண்ட இந்த சோவா வைரஸிடம் ஒருமுறை சிக்கிவிட்டால் போதும் - உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பேங்கிங் ஆப்ஸ், அதில் உள்ள விவரங்கள், பணம் என எதற்குமே பாதுகாப்பு இருக்காது!

இந்திய அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

இந்திய அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

மிகவும் ஆபத்தான இந்த சோவா வைரஸிடம் இருந்து தப்பிக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யவே கூடாது என்கிற பாதுகாப்பு வழிகாட்டுதல்களை இந்திய அரசாங்கம் செர்ட்-இன்) வெளியிட்டுள்ளது.

அதன்படி, வங்கி பயனர்களும், மொபைல் பேங்கிங் ஆப் பயனர்களும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களும்.. கனவில் கூட நீங்கள் செய்ய கூடாத 8 தவறுகள் இதோ!

70 ஆண்டுக்கு 1 முறை தான் 70 ஆண்டுக்கு 1 முறை தான் "இது" வானத்தில் தெரியும்! எப்படியாவது பார்த்துடுங்க!

01. Play Store-க்கு வெளியே.. கூடவே கூடாது!

01. Play Store-க்கு வெளியே.. கூடவே கூடாது!

எந்தவொரு ஆண்ட்ராய்டு ஆப்பை இன்ஸ்டால் செய்தாலும் கூட, கூகுளின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரை மட்டுமே பயன்படுத்தவும். APK ஆப்களை தேடி "நம்பத்தகாத" வெப்சைட்களுக்குள் ஒருபோதும் நுழைய வேண்டாம்!

02. 400.. 500 பேர் மட்டுமே டவுன்லோட் செய்து இருப்பார்கள்!

02. 400.. 500 பேர் மட்டுமே டவுன்லோட் செய்து இருப்பார்கள்!

கூகுள் பிளே ஸ்டோர் வழியாக இன்ஸ்டால் செய்தாலும் கூட.. குறிப்பிட்ட ஆப்பை எத்தனை பேர் டவுன்லோட் செய்து இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

வெறும் 400 அல்லது 500 பேர் மட்டுமே அந்த ஆப்பை, பதிவிறக்கம் செய்து உள்ளார்கள் என்றால்.. அப்படியே எஸ்கேப் ஆகிவிடவும்!

5G சிம் கார்டு பற்றிய முக்கியமான ரகசியம்.. டக்குனு போட்டுடைத்த Airtel!5G சிம் கார்டு பற்றிய முக்கியமான ரகசியம்.. டக்குனு போட்டுடைத்த Airtel!

03. எல்லாத்துக்குமே ஓகே.. ஓகே .. ஓகே.. சொல்வது!

03. எல்லாத்துக்குமே ஓகே.. ஓகே .. ஓகே.. சொல்வது!

இன்ஸ்டால் செய்த பின்னர், ஒரு ஆப் என்னென்ன பெர்மிஷன்களை கேட்கிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றிற்குமான பெர்மிஷன்களை வழங்க கூடாது!

04. அப்டேட்-ஆ..? அப்புறம் பார்த்துக்கலாம்!

04. அப்டேட்-ஆ..? அப்புறம் பார்த்துக்கலாம்!

எப்போதெல்லாம் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கு லேட்டஸ்ட் அப்டேட் அல்லது செக்யூரிட்டி பேட்ச் கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம் அதை பயன்படுத்திக்கொள்வதை உறுதி செய்யவும்; புறக்கணிக்கவோ.. ஒத்திவைக்கவோ வேண்டாம்!

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

05. இது பார்க்க மொபைல் நம்பர் போலவே இல்லையே!?

05. இது பார்க்க மொபைல் நம்பர் போலவே இல்லையே!?

சில மொபைல் நம்பர்களை பார்க்கும் போதே சந்தேகத்திற்குரியதாக இருக்கும் - எதோ வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் எண்களை போல இருக்கும். அப்படிப்பட்ட நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளை முடிந்த வரை தவிர்க்கவும்!

06. உண்மையாகவே

06. உண்மையாகவே "இந்த" எஸ்எம்எஸ்?

உங்கள் வங்கிகளில் இருந்து வரும் எஸ்எம்எஸ்களில் கண்டிப்பாக Sender ID இருக்கும் (அதாவது குறிப்பிட்ட வங்கியின் குறுகிய பெயர்).

ஒருவேளை வங்கியின் பெயரை சொல்லி மொபைல் நம்பர்களில் இருந்து உங்களுக்கு ஏதேனும் எஸ்எம்எஸ் வந்தால்.. அதை உடனே டெலிட் செய்து விடவும்; அதிலுள்ள எந்தவொரு Link-ஐயும் கிளிக் செய்ய வேண்டாம்!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

07. URL குட்டியாக இருந்தால் அலெர்ட் ஆகிக்கோங்க!

07. URL குட்டியாக இருந்தால் அலெர்ட் ஆகிக்கோங்க!

பொதுவாக ஒரு Link சற்றே நீளமானதாகவே இருக்கும். அதை மிகவும் சிறியதாக சுருக்கும் ஒரு வழிமுறை - யூஆர்எல் ஷார்ட்னர் (URL shortener) என்று அழைக்கப்படுகிறது. முடிந்தவரை இதுபோன்ற Shortened URL-களை தவிர்க்கவும்.

08. புகார் அளிக்கவும்!

08. புகார் அளிக்கவும்!

நீங்கள் எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, உங்கள் அக்கவுண்ட்டில் ஏதேனும் அசாதாரணமான செயல்கள் அல்லது நடவடிக்கைகளை கண்டால், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்!

Best Mobiles in India

English summary
8 Security Guidelines From Indian Government To All Android Smartphone Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X