கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

|

வயர்லெஸ் ஹெட்போன்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் தொடங்கி.. அதில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அதை உடனே சரி செய்து கொடுக்கும் ரிப்பேர் கடைக்காரர்கள் வரையிலாக யாருமே.. ப்ளூடூத் இயர்பட்ஸ் (Bluetooth Earbuds) மற்றும் வயர்லெஸ் இயர்போன்ஸ் (Wireless Earphones) பற்றிய 8 சீக்ரெட் டிப்ஸ்களை உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவே மாட்டார்கள்!

ஏனென்றால், சொல்லிக்கொடுத்து விட்டால்.. ஒருவேளை "அந்த ரகசியங்களை" நீங்களும் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு வேலை இருக்காது அல்லவா? வாடிக்கையாளர்களின் அறியாமையை வைத்து அவர்களால் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க முடியாது அல்லவா?

இன்னும் எவ்ளோ நாள் தான் மறைக்க முடியும்?

இன்னும் எவ்ளோ நாள் தான் மறைக்க முடியும்?

மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பிரபலமடைந்து கொண்டே போகும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (True wireless Earbuds) அல்லது ப்ளூடூத் இயர்பட்ஸ்களை (Bluetooth Earbuds) பற்றி பலருக்கும் தெரியாத சில சீக்ரெட் டிப்ஸ்களை (Secret Tips) இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் (கடைக்காரர்களால்) மறைக்க முடியும்?

இன்றோடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்! அதாவது கனெக்ட் செய்வது தொடங்கி விரைவாக பேட்டரி தீர்வது வரையிலாக.. வயர்லெஸ் இயர்போன் பற்றியும், அதில் ஏற்படும் சிக்கல்களை எளிமையாக சரிசெய்வது எப்படி என்பது பற்றியும் சொல்லப்படாத 8 சீக்ரெட் டிப்ஸ்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

இது தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் சில போன்களில் மட்டுமே கிடைக்கும்!இது தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் சில போன்களில் மட்டுமே கிடைக்கும்!

01. உங்கள் வயர்லெஸ் இயர்போன் ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் ஆகவில்லையா?

01. உங்கள் வயர்லெஸ் இயர்போன் ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் ஆகவில்லையா?

ஸ்மார்ட்போன் உடன் கனெக்ட் செய்ய முயற்சிக்கும் போது, உங்கள் வயர்லெஸ் ஹெட்போன் அல்லது இயர்பட்ஸ் ஆனது ப்ளூடூத் டிஃபைஸ் லிஸ்ட்டில் தென்படவில்லையா? ஆம் என்றால், கீழ்வரும் டிப்ஸ்களை முயற்சி செய்யவும்:

- TWS இயர்பட்ஸை ஆன் மற்றும் ஆஃப் செய்து உங்கள் போனை ரீஸ்டார்ட் செய்யவும்; பின்னர் முயற்சிக்கவும்

- TWS இயர்போன்கள் சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா, ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்

- பேரிங் மோட்-இல் (Pairing) உள்ளதா என சரிபார்க்கவும்

- இயர்பட்ஸ் உங்கள் போன் உடன் இணக்கமானதா (compatible) என்றும் சரிபார்க்கவும்

- ஸ்மார்ட்போனும் இயர்பட்ஸும் நெருக்கமாக இருப்பதை உறுதிசெய்யவும்

- பிற டிவைஸ்களிலிருந்து உங்கள் இயர்பட்ஸ்-ஐ டிஸ்கனெக்ட் செய்யவும்!

02. அடிக்கடி டிஸ்கனெக்ட் ஆகிறதா?

02. அடிக்கடி டிஸ்கனெக்ட் ஆகிறதா?

- TWS இயர்பட்ஸில் போதுமான பேட்டரி இருப்பதை உறுதிசெய்யவும்

- வயர்லெஸ் இயர்போன்களை கனெக்ட் செய்வதற்காக நீங்கள் பயன்படுத்தும் ஆப்பிற்கு ஏதேனும் அப்டேட் வந்துள்ளதா என்று சரிபார்க்கவும், வந்திருந்தால் "குறிப்பிட்ட" ஆப்பை அப்டேட் செய்யவும்.

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

03. ஒரு பக்க ஹெட்போன் மட்டும் வேலை செய்யவில்லையா?

03. ஒரு பக்க ஹெட்போன் மட்டும் வேலை செய்யவில்லையா?

- சார்ஜிங் கேஸ் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்

- இரண்டு இயர்பட்ஸுமே நன்றாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்

- இயர்பட்ஸை டிஸ் கனெக்ட் செய்து ஸ்மார்ட்போனுடன் மீண்டும் கனெக்ட் செய்யவும்

- காதுகளில் இயர்போன்கள் சரியாக பொறுத்தப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்கவும்

04. வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் சார்ஜ் ஆகவில்லையா?

04. வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் சார்ஜ் ஆகவில்லையா?

- சார்ஜிங் கேஸ் மற்றும் TWS இயர்பட்ஸ் ஆகிய இரண்டிலும் உள்ள கனெக்டர்ஸை (connectors) சுத்தம் செய்யவும்.

- கேபிள், அடாப்டர் மற்றும் பவர் சாக்கெட் ஆகியவற்றில் ஏதேனும் சேதம் ஏற்பட்டு உள்ளதா என்பதை பரிசோதிக்கவும்

- பவர் சப்ளையில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்றும் சரிபார்க்கவும்.

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

05. சார்ஜிங் கேஸ் சரியாக வேலை செய்யவில்லையா?

05. சார்ஜிங் கேஸ் சரியாக வேலை செய்யவில்லையா?

உங்கள் வயர்லெஸ் இயர்போன் அல்லது இயர்பட்ஸின் சார்ஜிங் கேஸ் சரியாக சார்ஜ் ஆகவில்லை என்றால் அதை சார்ஜ் செய்ய உதவும் பவர் அடாப்டரின் போர்ட் ஆனது சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும்.

06. இசையை கேட்கும் போது வித்தியாசமான சத்தங்கள் குறுக்கிடுகின்றனவா?

06. இசையை கேட்கும் போது வித்தியாசமான சத்தங்கள் குறுக்கிடுகின்றனவா?

- ப்ளூடூத் ஒரு வயர்லெஸ் தொழில்நுட்பம் என்பதால், அது மற்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்களுக்கு இடையே குறுக்கீடுகளை ஏற்படுத்த முடியும். அது சில நேரங்களில் இசையை கேட்கும்போது அதில் சில சிதைவுகளை கூட ஏற்படுத்தலாம் எனவே சுற்றியுள்ள மற்ற ப்ளூடூத் டிவைஸ்களை ஆப் செய்யவும்

- டிவி, ரூட்டர் போன்ற பிற டிவைஸ்களிலிருந்து விலகிச் செல்லவும்

- இயர்பட்ஸை டிஸ்கனெக்ட் செய்து மீண்டும் கனெக்ட் செய்யவும்

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

07. போன் கால் குவாலிட்டி சுமாராக உள்ளதா?

07. போன் கால் குவாலிட்டி சுமாராக உள்ளதா?

- மைக்ரோஃபோனை மென்மையான துணியால் சுத்தம் செய்யவும்

- உங்கள் ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் கவரேஜ் சரிபார்க்கவும்

- வயர்லெஸ் ஹெட்போன் வழியாக ஒரு போன் கால்-ஐ எடுக்கும்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அருகில் இருப்பதை உறுதி செய்யவும்

08. சீக்கிரமாக பேட்டரி தீர்ந்து போகிறதா?

08. சீக்கிரமாக பேட்டரி தீர்ந்து போகிறதா?

- பாக்ஸ் உடன் வந்த ஒரிஜினல் கேபிளை பயன்படுத்தி மட்டுமே உங்கள் TWS இயர்பட்ஸை சார்ஜ் செய்யவும்

- உங்கள் TWS இயர்பட்ஸ் ஆனது மிகவும் புதியதாக இருந்தால், இந்த சிக்கலை சரி செய்ய சேவை மையத்தைத் தொடர்புகொள்ளவும்.

- ஒருவேளை உங்கள் TWS இயர்பட்ஸ் ஆனது மிகவும் பழையதாக இருந்தால், அதன் பேட்டரி செயலிழந்து போயிருக்க வாய்ப்பு உள்ளது!

Best Mobiles in India

English summary
8 secret tech tips that every wireless Bluetooth earbuds users must know to save some repair cost

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X