இதற்காகவே ஆன்ட்ராய்டு பி பயன்படுத்தலாம்.!

முதல் பதிப்பை விட இரண்டாவது பதிப்பு அதிக ஸ்டேபிளாக இருந்தாலும், இதனை உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

|

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தின் முதல் பீட்டா பதிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. உண்மையில் இது இரண்டாவது வெளியீடு எனலாம், முன்னதாக டெவலப்பர்களுக்கென வெளியிடப்பட்டது. முதல் பதிப்பை விட இரண்டாவது பதிப்பு அதிக ஸ்டேபிளாக இருந்தாலும், இதனை உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம். ஒருவேலை ஆன்ட்ராய்டு பி இயங்குதள பீட்டாவை இன்ஸ்டால் செய்ய விரும்புபவர்கள் சில பக்-களை சமாளிக்க தயாராகிவிட்டு பின் சில நிமிடங்களில் இன்ஸ்டால் செய்துவிடலாம்.

ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் உங்களுக்கு கொண்டு வரும் ஐந்து புதிய அம்சங்கள்.!ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் உங்களுக்கு கொண்டு வரும் ஐந்து புதிய அம்சங்கள்.!

ஆன்ட்ராய்டு பி பயன்படுத்த இத்தனை காரணங்கள் போதுமா?

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களை நிச்சயம் இன்ஸ்டால் செய்ய வைக்கும் 8 காரணங்களை தொடர்ந்து பார்ப்போம்.

புதிய தோற்றம் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள்

புதிய தோற்றம் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள்

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் முடிந்தவரை அனைத்து இடங்களிலும் கூகுள் வளைந்த மூலைகளை பயன்படுத்துகிறது. கீழ்புறமாக ஸ்வைப் டவுன் செய்தால் நோட்டிஃபிகேஷன் திரையை பார்க்க முடியும். இதில் ஆன்ட்ராய்டு க்விக் செட்டிங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் செட்டிங் மெனுவில் பல்வேறு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆன்ட்ராய்டு பி மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள்

ஆன்ட்ராய்டு பி மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள்

நோட்டிஃபிகேஷன்களை பொருத்த வரை ஐஓஎஸ் தளத்தை விட ஆன்ட்ராய்டு சிறப்பாக இயக்கி வருகிறது எனலாம். ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் இந்த எல்லையை மேலும் அகலப்படுத்தி, பல்வேறு புதிய வசதிகளை நோட்டிஃபிகேஷன் ஷேடில் சேர்த்திருக்கிறது. குறிப்பாக மெசேஜிங் செயலிக்களில் ஸ்மார்ட் ரிப்ளை மற்றும் ஒவ்வொரு நோட்டிஃபிகேஷனிலும் கூடுதல் தகவல்களை வழங்குகிறது.

நாட்ச் அனுபவம்

நாட்ச் அனுபவம்

சமீபத்திய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மேல்பக்க திரை மிகவும் மெல்லியதாக்கப்பட்டு மிகமுக்கிய சென்சார்களை மட்டும் வழங்க சிறிய நாட்ச்களை வழங்குகின்றன. எசென்ஷியல் போன், ஹூவாய் பி20 ப்ரோ, அசுஸ் சென்ஃபோன் 5 மற்றும் ஒன்பிளஸ் 6 உள்ளிட்ட மாடல்களில் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற மாற்றத்தை கருத்தில் கொண்டு ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் நாட்ச் டிஸ்ப்ளே எப்படி இருக்கும் என்பதை பிரீவியூ மூலம் காண்பிக்கிறது. இதற்கு டெவலப்பர் மோட் சென்று டிராயிங் செக்ஷன் பகுதியில் சிமுலேட் எ டிஸ்ப்ளே வித் கட்அவுட் (Simulate a display with a cutout) ஆப்ஷனை தேர்வு செய்து அளவை குறிப்பிட்டால் நாட்ச் ரக டிஸ்ப்ளேவை ஸ்கிரீனில் அனுபவிக்க முடியும்.

பயனுள்ள ஸ்கிரீன்ஷாட்கள்

பயனுள்ள ஸ்கிரீன்ஷாட்கள்

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது மேலும் சுலபமாக்கப்பட்டுள்ளது. பவர் பட்டனை சிறிது நேரம் அழுத்தி பிடித்து ஸ்கிரீன்ஷாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பழைய இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் பவர் மற்றும் வால்யூம் டவுன் பட்டனை ஒரே சமயத்தில் அழுத்தி பிடித்தும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம்.

ஸ்கிரீன்ஷாட் எடுக்க புதிய ஷார்ட்கட் வழங்கப்பட்டு இருப்பதோடு, ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் அதனை எடிட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டதும் திரையில் தோன்றும் பிரீவியூ நோட்டிஃபிகேஷனில் எடிட் பட்டன் வழங்கப்படுகிறது. இதனை க்ளிக் செய்து உங்கள் விருப்பம் போல் அதனை வரையவோ, க்ராப் செய்தோ மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும்.

டேஷ்போர்டு

டேஷ்போர்டு

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தும் கூகுளின் வெல்பீயிக் திட்டம் ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் டேஷ்போர்டு வடிவில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த டேஷ்போர்டு ஒவ்வொரு நாளும் எத்தனை முறை ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யப்பட்டுள்ளது, எத்தனை நோட்டிஃபிகேஷன்கள் வந்தது, ஒவ்வொரு செயலியிலும் எவ்வளவு நேரம் பயன்படுத்தப்பட்டது உள்ளட்ட தகவல்களை பார்க்க முடியும். இத்துடன் பயன்பாட்டை குறைக்க கால அளவையும் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

 லாக்டவுன் மோட்

லாக்டவுன் மோட்

ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் மேம்படுத்த கூகுள் வழி செய்துள்ளது, இவை பெரும்பாலும் ஸ்மார்ட்போன்லேயே செய்யப்படுகிறது. இந்த இயங்குதளத்தில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் ஒற்றை க்ளிக் மூலம் சாதனை லாக் செய்து விடுகிறது.

இதனை எனேபிள் செய்ததும், கைரேகை சென்சார் அல்லது டிரஸ்டெட் வாய்ஸ் அன்லாக் அம்சங்களை டிசேபிள் செய்ய முடியும்.

இந்த ஆப்ஷனை இயக்க செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி மற்றும் லொகேஷன் -- லாக் ஸ்கிரீன் பிரெஃபரன்சஸ் -- ஷோ லாக்டவுன் (Settings > Security and Location > Lock Screen Preferences -- Show lockdown) உள்ளிட்ட அம்சங்களை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பவர் பட்டனை க்ளிக் செய்து லாக்டவுன் ஆப்ஷனை இயக்க முடியும்.

ஜெஸ்ட்யூர் நேவிகேஷன்

ஜெஸ்ட்யூர் நேவிகேஷன்

பெரும்பாலான ஆன்ட்ராய்டு சாதனங்களில் ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் மூன்று டிஜிட்டல் பட்டன்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் ஒற்றை பட்டன் மட்டும் இருக்கும். இதன் ஹோம் பட்டன் பகுதியில் ஜெஸ்ட்யூர்களஐ கொண்டு நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய செயலிகளிடையே ஸ்விட்ச் செய்யவும், ஆப் டிராயரை திறக்கவும் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போன் ஸ்கிரீனினை வெர்டிக்கல் அல்லது போர்டிரெயிட் மோட்களுக்கு லாக் செய்யாமல் ஸ்கிரீன் ரொடேஷனை கணித்து அதனை சரி செய்ய ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் பட்டன் ஒன்றை டிஸ்ப்ளே செய்யும்.

ஸ்மார்ட்போனினை லேன்ட்ஸ்கேப் வடிவில் திருப்பினால் ஸ்கிரீனின் கீழ் காணப்படும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதே போன்று போர்டிரெயிட் மோடிற்கு ஸ்மார்ட்போனினை திருப்பினால் மீண்டும் அதே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

பேட்டரி அளவு

பேட்டரி அளவு

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனினை பயன்படுத்துவோர் ஆம்பியன்ட் டிஸ்ப்ளே பகுதியில் பேட்டரி சதவிகிதத்தை பார்க்க முடியும். இந்த அம்சம் ஏற்கனவே சாம்சங், மோட்டோரோலா, எல்ஜி மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களின் தேர்வு செய்யப்பட்ட மாடல்களில் வழங்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
8 reasons why you'll want Android P; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X